Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-An‘ām   Verse:
وَهُوَ الَّذِیْ یَتَوَفّٰىكُمْ بِالَّیْلِ وَیَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ یَبْعَثُكُمْ فِیْهِ لِیُقْضٰۤی اَجَلٌ مُّسَمًّی ۚ— ثُمَّ اِلَیْهِ مَرْجِعُكُمْ ثُمَّ یُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠
6.60. நீங்கள் தூங்கும் போது அல்லாஹ்வே உங்களின் ஆன்மாக்களை தற்காலிகமாகக் கைப்பற்றுகிறான். நீங்கள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்போது நீங்கள் சம்பாதிப்பவற்றை அவனே அறிவான். தூக்கத்தில் உங்கள் ஆன்மாக்களைக் கைப்பற்றிய பிறகு பகலில் நீங்கள் வேலை செய்வதற்காக உங்களை எழுப்புகிறான். அல்லாஹ்விடம் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவடையும் வரை இவ்வாறு நிகழ்ந்துகொண்டே இருக்கும். பின்னர் மறுமைநாளில் அவன் பக்கமே நீங்கள் எழுப்பப்பட்டு திரும்பி வர வேண்டும். அப்போது இவ்வுலக வாழ்வில் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Arabic Tafsirs:
وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ وَیُرْسِلُ عَلَیْكُمْ حَفَظَةً ؕ— حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا یُفَرِّطُوْنَ ۟
6.61. அல்லாஹ்தான் தன் அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவன்; அவர்களை அடிபணிய வைப்பவன். அனைத்து விதத்திலும் எல்லாவற்றையும் மிகைத்தவன். அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. தனது மகத்துவத்திற்குத் தக்கவாறு தனது அடியார்களின் மேல் அவன் இருக்கிறான். மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது சங்கையான வானவர்களை அனுப்புகிறான். உயிரைக் கைப்பற்றும் வானவரும் அவரது உதவியாளர்களும் உங்களின் உயிரைக் கைப்பற்றி உங்களின் தவணை முடியும் வரை, அவர்கள் உங்களின் செயல்களைக் கணக்கிடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனம் செய்வதில்லை.
Arabic Tafsirs:
ثُمَّ رُدُّوْۤا اِلَی اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّ ؕ— اَلَا لَهُ الْحُكْمُ ۫— وَهُوَ اَسْرَعُ الْحٰسِبِیْنَ ۟
6.62. பின்னர் யாருடைய உயிரெல்லாம் கைப்பற்றப்பட்டதோ அவர்கள் தங்களின் உண்மையான இறைவனான அல்லாஹ்விடம் தங்களின் செயல்களுக்குக் கூலி வழங்கப்படுவதற்காக கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் விஷயத்தில் செல்லுபடியாகும் நீதமான தீர்ப்பு அவனிடமே உள்ளது. உங்களையும் உங்களது செயல்களையும் கணிப்பீடு செய்வோரில் அவனே மிக விரைவானவன்.
Arabic Tafsirs:
قُلْ مَنْ یُّنَجِّیْكُمْ مِّنْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُوْنَهٗ تَضَرُّعًا وَّخُفْیَةً ۚ— لَىِٕنْ اَنْجٰىنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
6.63. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நீரிலும் நிலத்திலுமுள்ள இருள்களில் உங்களுக்கு நேரும் அழிவுகளிலிருந்து உங்களைக் காப்பவன் யார்? அப்போது, “எங்கள் இறைவா! இந்த அழிவிலிருந்து எங்களை நீ காப்பாற்றிவிட்டால் உன்னைத் தவிர யாரையும் வணங்காமல் நீ எங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தும் அடியார்களாகி விடுவோம்” என வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பணிவுடன் அவனையே நீங்கள் அழைக்கின்றீர்கள்.
Arabic Tafsirs:
قُلِ اللّٰهُ یُنَجِّیْكُمْ مِّنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ اَنْتُمْ تُشْرِكُوْنَ ۟
6.64. தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். எல்லா துன்பங்களிலிருந்தும் அவனே உங்களைப் பாதுகாக்கிறான். இதன் பின்னரும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குகிறீர்கள். நீங்கள் செய்வதை விட வேறு அநியாயம் என்ன இருக்க முடியும்?.”
Arabic Tafsirs:
قُلْ هُوَ الْقَادِرُ عَلٰۤی اَنْ یَّبْعَثَ عَلَیْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ اَوْ مِنْ تَحْتِ اَرْجُلِكُمْ اَوْ یَلْبِسَكُمْ شِیَعًا وَّیُذِیْقَ بَعْضَكُمْ بَاْسَ بَعْضٍ ؕ— اُنْظُرْ كَیْفَ نُصَرِّفُ الْاٰیٰتِ لَعَلَّهُمْ یَفْقَهُوْنَ ۟
6.65. தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “உங்களுக்கு மேலிருந்து - கல், மின்னல், வெள்ளம் போன்ற - வேதனையை அனுப்பவோ உங்களுக்குக் கீழிருந்து - பூகம்பம், பூமியில் புதையச் செய்தல் போன்ற - வேதனையை ஏற்படுத்தவோ அல்லது ஒவ்வொருவரும் தனது மனஇச்சையைப் பின்பற்றி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் அளவு உள்ளங்களிடையே பிரிவினை ஏற்படுத்தவோ அல்லாஹ் சக்தியுடையவன். தூதரே! நீர் கொண்டு வந்ததை சத்தியம் என்றும் தங்களிடமுள்ளதை அசத்தியம் என்றும் அவர்கள் அறிந்துகொள்வதற்காக, நாம் எவ்வாறு பல்வேறு வகையான ஆதாரங்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைப் பாரும்.
Arabic Tafsirs:
وَكَذَّبَ بِهٖ قَوْمُكَ وَهُوَ الْحَقُّ ؕ— قُلْ لَّسْتُ عَلَیْكُمْ بِوَكِیْلٍ ۟ؕ
6.66. இந்த குர்ஆன், அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான் என்பதில் எவ்வித சந்தேகமுமற்ற, உண்மையாக இருந்த போதும் உம் சமூகம் இதனை பொய்யெனக் கூறியது. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் உங்களைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டவன் அல்ல. நான் உங்களுக்கு முன்னால் இருக்கும் கடுமையான வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்பவன் மட்டுமே.
Arabic Tafsirs:
لِكُلِّ نَبَاٍ مُّسْتَقَرٌّ ؗ— وَّسَوْفَ تَعْلَمُوْنَ ۟
6.67. ஒவ்வொரு செய்திக்கும் தங்கும் நேரமும் முடிவும் இருக்கின்றது. அதில் உங்களின் திரும்புமிடம், இறுதி முடிவு குறித்த செய்தியும் உள்ளது. மறுமை நாளில் நீங்கள் மீண்டும் எழுப்பப்படும் போது இதனை அறிந்துகொள்வீர்கள்.
Arabic Tafsirs:
وَاِذَا رَاَیْتَ الَّذِیْنَ یَخُوْضُوْنَ فِیْۤ اٰیٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتّٰی یَخُوْضُوْا فِیْ حَدِیْثٍ غَیْرِهٖ ؕ— وَاِمَّا یُنْسِیَنَّكَ الشَّیْطٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰی مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
6.68. தூதரே! அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்யும் இணைவைப்பாளர்களை நீர் கண்டால் அவர்கள் அவற்றை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருங்கள். ஷைத்தான் உம்மை மறக்கடிக்கச் செய்து நீர் அவர்களுடன் அமர்ந்துவிட்டால் பின்னர் நினைவுகூர்ந்தால் அவர்களின் அவையை விட்டு விடுவீராக. வரம்புமீறும் அவர்களுடன் நீர் அமராதீர்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• إثبات أن النومَ موتٌ، وأن الأرواح تُقْبض فيه، ثم تُرَد عند الاستيقاظ.
1. தூக்கம் என்பது மரணமேயாகும். அந்நேரத்தில் உயிர்கள் கைப்பற்றப்படுகின்றன. பின்னர் விழிக்கும் போது அவை திரும்ப அனுப்பப்படுகின்றன.

• الاستدلال على استحقاق الله تعالى للألوهية بدليل الفطرة، فإن أهل الكفر يؤمنون بالله تعالى ويرجعون لفطرتهم عند الاضطرار والوقوع في المهالك، فيسألون الله تعالى وحده.
2. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதற்கான மனித இயல்பு ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான், நிராகரிப்பாளர்கள் அழிவில் சிக்கி நிர்க்கதிக்குள்ளாகும் போது தமது இயல்பின் பக்கம் திரும்பி அல்லாஹ்வை மட்டுமே அழைக்கிறார்கள்.

• إلزام المشركين بمقتضى سلوكهم، وإقامة الدليل على انقلاب فطرتهم، بكونهم يستغيثون بالله وحده في البحر عند الشدة، ويشركون به حين يسلمهم وينجيهم إلى البر.
3. இணைவைப்பாளர்களின் செயலின் அடிப்படையிலேயே அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். கடலில் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் போது அல்லாஹ்வை மாத்திரமே அழைப்பவர்களாகவும் அவன் அவர்களைக் காப்பாற்றி கரைசேர்த்துவிட்டால் அவனுக்கு இணைவைப்பவர்களாகவும் அவர்கள் உள்ளனர் என்பது, அவர்களது இயல்பு தலைகீழாக மாறியுள்ளது என்பதற்குச் சான்றாகும்.

• عدم جواز الجلوس في مجالس أهل الباطل واللغو، ومفارقتُهم، وعدم العودة لهم إلا في حال إقلاعهم عن ذلك.
4. அசத்தியவாதிகளினதும் வீணர்களினதும் அவைகளில் அமரக் கூடாது. அமர்ந்தாலும் அவர்களைப் பிரிந்து செல்ல வேண்டும். அவர்களின் இஸ்லாத்தைக் குறித்து தங்களின் பரிகாசத்தை விட்டுவிடும் வரை அவர்களின் அவைக்குச் செல்லக் கூடாது.

 
Translation of the Meanings Surah: Al-An‘ām
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close