Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-An‘ām   Verse:
اِنَّ اللّٰهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوٰی ؕ— یُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَمُخْرِجُ الْمَیِّتِ مِنَ الْحَیِّ ؕ— ذٰلِكُمُ اللّٰهُ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
6.95. நிச்சயமாக அல்லாஹ்தான் விதையை வெடிக்கச் செய்து பயிர்களை வெளிப்படுத்துகிறான்; மேலும் வித்தை வெடிக்கச் செய்து அதிலிருந்து பேரீச்ச மரம் திராட்சை இன்னும் இன்னோரன்ன மரங்கள் உருவாகின்றன. மனிதன், ஏனைய விலங்குகள் ஆகியற்றை விந்திலிருந்து வெளிப்படுத்தி மரணித்தவைகளில் இருந்து உயிருள்ளவைகளை வெளிப்படுத்துகிறான். கோழியில் இருந்து முட்டையையும், மனிதனில் இருந்து விந்தையும் வெளிப்படுத்தி உயிருள்ளவைகளைகளில் இருந்து மரணித்தவைகளை வெளிப்படுத்துகிறான். இவையனைத்தையும் செய்வது உங்களைப் படைத்த அல்லாஹ்தான். இணைவைப்பாளர்களே! அவனது அற்புத படைப்புக்களைப் பார்த்துக் கொண்டே நீங்கள் சத்தியத்தை விட்டு எங்கே திசைமாறிச் செல்கிறீர்கள்?
Arabic Tafsirs:
فَالِقُ الْاِصْبَاحِ ۚ— وَجَعَلَ الَّیْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ؕ— ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟
6.96. அவன் அதிகாலையின் வெளிச்சத்தை இரவின் இருளிலிருந்து வெளிப்படுத்துகிறான். அவனே இரவை மக்கள் தொழிலுக்காக அலைந்ததன் பின் ஓய்வெடுப்பதற்காக அமைத்துள்ளான். அவனே சூரியனையும் சந்திரனையும் ஒரு கணக்கின்படி இயங்க வைத்துள்ளான். மேற்கூறப்பட்ட அற்புத ஏற்பாடு, யாவற்றையும் மிகைத்தவனின் நிர்ணயமாகும். தன் படைப்புகளைப் பற்றியும் அவர்களுக்குத் தேவையானதையும் அவன் நன்கறிந்தவன்.
Arabic Tafsirs:
وَهُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ النُّجُوْمَ لِتَهْتَدُوْا بِهَا فِیْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ ؕ— قَدْ فَصَّلْنَا الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
6.97. ஆதமின் மக்களே! அவன்தான் வானத்தில் உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான். தரையிலும் கடலிலும் நீங்கள் பயணம் செய்யும் போது வழி குழம்பிவிட்டால் அவற்றைக் கொண்டே நீங்கள் சரியான வழியை அறிந்துகொள்கிறீர்கள். நம்முடைய ஆற்றலை அறிவிக்கக்கூடிய சான்றுகளையும் ஆதாரங்களையும் அவற்றைச் சிந்தித்து பயன்பெறும் கூட்டத்துக்கு நாம் தெளிவுபடுத்திவிட்டோம்.
Arabic Tafsirs:
وَهُوَ الَّذِیْۤ اَنْشَاَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَّمُسْتَوْدَعٌ ؕ— قَدْ فَصَّلْنَا الْاٰیٰتِ لِقَوْمٍ یَّفْقَهُوْنَ ۟
6.98. அவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அந்த ஆன்மா உங்களின் தந்தை ஆதமாகும். உங்களின் தந்தையை மண்ணைக் கொண்டு படைத்ததன் மூலம் உங்களைப் படைப்பது ஆரம்பமானது. பின்னர் அவரிலிருந்தே உங்களைப் படைத்தான். நீங்கள் தங்கக்கூடிய அன்னையரின் கருவரையையும் நீங்கள் பாதுகாத்து வைக்கப்படக்கூடிய தந்தையரின் முதுகந்தண்டையும் அவன் உங்களுக்காக படைத்துள்ளான். அல்லாஹ்வின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கு நாம் வசனங்களைத் தெளிவுபடுத்திவிட்டோம்.
Arabic Tafsirs:
وَهُوَ الَّذِیْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ— فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَیْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا ۚ— وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِیَةٌ ۙ— وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّیْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَیْرَ مُتَشَابِهٍ ؕ— اُنْظُرُوْۤا اِلٰی ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَیَنْعِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكُمْ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
6.99. அவன்தான் வானத்திலிருந்து மழை நீரை இறக்கினான். அதைக்கொண்டு எல்லா வகையான தாவரங்களையும் முளையச் செய்கின்றோம். அந்த தாவரங்களிலிருந்து பயிர்களையும் பசுமையான மரங்களையும் வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அடுக்கடுக்காக இருக்கக்கூடிய நெற்கதிர் போன்ற விதைகளை வெளிப்படுத்துகின்றோம். பேரீச்சை மரத்தின் பாளைகளிலிருந்து எழுந்திருப்பவரும் அமர்ந்திருப்பவரும் பறிக்கும் வகையில் அருகில் தொங்கக்கூடிய குலைகளையும் வெளிப்படுத்துகின்றோம். திராட்சைத் தோட்டங்களையும், ஆலிவ், மாதுளை போன்றவற்றையும் வெளிப்படுத்துகின்றோம். அவற்றின் இலைகள் ஒன்றுபோல் இருக்கின்றன. பழங்களோ வேறுபட்டதாக இருகின்றன. மனிதர்களே! அவை ஆரம்பத்தில் வெளிப்படும் போதும் கனியும் போதும் அவற்றைப் பாருங்கள். இதில் அல்லாஹ்வை நம்பும் மக்களுக்கு அவனுடைய வல்லமையை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.அவர்களே இவ்ஆதாரங்களிலிருந்து பயனடைவார்கள்.
Arabic Tafsirs:
وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوْا لَهٗ بَنِیْنَ وَبَنٰتٍ بِغَیْرِ عِلْمٍ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یَصِفُوْنَ ۟۠
6.100. இணைவைப்பாளர்கள் ஜின்களால் பலனளிக்கவும் தீங்கிழைக்கவும் முடியும் என்று நம்பியதன் மூலம் அவர்களை வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கி விட்டார்கள். அந்த ஜின்களையும் அல்லாஹ்தான் படைத்தான். வேறு யாருமல்ல. அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். யூதர்கள் உஸைர் அவர்களையும், கிறிஸ்தவர்கள் ஈஸாவையும் எடுத்துக்கொண்டது போன்று இந்த இணைவைப்பாளர்களும் அல்லாஹ்வுக்கு பிள்ளைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். மேலும் இந்த இணைவைப்பாளர்கள் மலக்குமார்களை அல்லாஹ்வுக்கு மகள்கள் எனவும் கூறுகின்றனர். இந்த அசத்தியவாதிகள் கூறும் பண்புகளிலிருந்து அல்லாஹ் பரிசுத்தமானவன்.
Arabic Tafsirs:
بَدِیْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اَنّٰی یَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ ؕ— وَخَلَقَ كُلَّ شَیْءٍ ۚ— وَهُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
6.101. அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவியே இல்லாதபோது பிள்ளை எங்கிருந்து வர முடியும்? அவன்தான் அனைத்தையும் படைத்தான். அவன் அனைத்தையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• الاستدلال ببرهان الخلق والرزق (تخليق النبات ونموه وتحول شكله وحجمه ونزول المطر) وببرهان الحركة (حركة الأفلاك وانتظام سيرها وانضباطها)؛ وكلاهما ظاهر مشاهَد - على انفراد الله سبحانه وتعالى بالربوبية واستحقاق الألوهية.
1. படைப்பது, வாழ்வாதாரம் வழங்குதல் (தாவரத்தைப் படைத்தல், அதன் வளர்ச்சி, அதன் தோற்றம், அளவு மாறுதல், மழை பொழிதல்) என்ற ஆதாரத்தின் மூலமும் (கோள்களின் இயக்கம் நேர்த்தியான ஒழுங்கான அதன் நகர்வு) என்ற இயக்கச் சான்றின் மூலமும் அல்லாஹ்வே படைத்துப் பராமரிக்கிறான், அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை நிறுவப்பட்டுள்ளது. அவ்விரண்டு ஆதாரங்களுமே வெளிரங்கமாகக் காணமுடியுமானவையாகும்.

• بيان ضلال وسخف عقول المشركين في عبادتهم للجن.
2. இணைவைப்பாளர்கள் ஜின்களை வணங்கியதன் மூலம் அவர்களது வழிகேடும் அபத்தமான சிந்தனையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 
Translation of the Meanings Surah: Al-An‘ām
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close