Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-An‘ām   Verse:
وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ اِذْ قَالُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰی بَشَرٍ مِّنْ شَیْءٍ ؕ— قُلْ مَنْ اَنْزَلَ الْكِتٰبَ الَّذِیْ جَآءَ بِهٖ مُوْسٰی نُوْرًا وَّهُدًی لِّلنَّاسِ تَجْعَلُوْنَهٗ قَرَاطِیْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِیْرًا ۚ— وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْۤا اَنْتُمْ وَلَاۤ اٰبَآؤُكُمْ ؕ— قُلِ اللّٰهُ ۙ— ثُمَّ ذَرْهُمْ فِیْ خَوْضِهِمْ یَلْعَبُوْنَ ۟
6.91. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தவில்லை. அதனால்தான் அவர்கள் தங்களின் தூதர் முஹம்மதிடம் கூறினார்கள்: “அல்லாஹ் மனிதன் மீது எந்த வஹியையும் இறக்கவில்லை. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “மூஸாவுக்கு தவ்ராத் என்னும் வேதத்தை இறக்கியவன் யார்? அது அவருடைய சமூகத்தினருக்கு ஒளியாகவும் வழிகாட்டியாகவும் இருந்ததே! யூதர்கள் அதனை ஏடுகளில் வைத்து அதில் தங்கள் மனஇச்சைக்கு ஒத்துப் போகக்கூடியவற்றை வெளிப்படுத்துகின்றனர். முஹம்மது நபியின் வர்ணனைகள் போன்ற தமது மனஇச்சைக்கு மாற்றமானதை மறைக்கின்றனர். அரேபியர்களே! நீங்களும் உங்கள் முன்னோர்களும் அறியாதவற்றையெல்லாம் இந்த குர்ஆனின் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டீர்கள். தூதரே! “அல்லாஹ்தான் அதனை இறக்கினான்” என்று நீர் அவர்களிடம் கூறுவீராக. பின்னர் அவர்களுக்கு மரணம் வரும்வரை அவர்களின் வழிகேட்டிலும் அறியாமையிலும் பரிகாசம்செய்தவர்களாக அவர்களை விட்டுவிடுவீராக.
Arabic Tafsirs:
وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ مُّصَدِّقُ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَلِتُنْذِرَ اُمَّ الْقُرٰی وَمَنْ حَوْلَهَا ؕ— وَالَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ یُؤْمِنُوْنَ بِهٖ وَهُمْ عَلٰی صَلَاتِهِمْ یُحَافِظُوْنَ ۟
6.92. தூதரே! மக்காவாசிகளையும் உலகின் கிழக்கு, மேற்கில் உள்ள அனைவரையும் - அவர்கள் நேர்வழி அடையும் பொருட்டு - நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக நாமே இந்தக் குர்ஆனை உம்மீது இறக்கினோம். இது பாக்கியம் நிறைந்த, தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தும் வேதமாகும். மறுமை நாளை உண்மைப்படுத்துபவர்கள் இந்தக் குர்ஆனை உண்மைப்படுத்துகிறார்கள்; அதன்படி செயல்படுகிறார்கள்; தொழுகையை அதற்குரிய நிபந்தனைகள், கடமைகள் மற்றும் சுன்னத்துகளுடன் மார்க்கம் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுகிறார்கள்.
Arabic Tafsirs:
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِیَ اِلَیَّ وَلَمْ یُوْحَ اِلَیْهِ شَیْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ ؕ— وَلَوْ تَرٰۤی اِذِ الظّٰلِمُوْنَ فِیْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓىِٕكَةُ بَاسِطُوْۤا اَیْدِیْهِمْ ۚ— اَخْرِجُوْۤا اَنْفُسَكُمْ ؕ— اَلْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ غَیْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ اٰیٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ ۟
6.93. ‘அல்லாஹ் மனிதன் மீது எந்த ஒன்றையும் இறக்கவில்லை’ அல்லது அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வஹி அறிவிக்காத நிலையில் அவன் எனக்கு வஹி அறிவித்துள்ளான் என்று கூறுவது அல்லது ‘அல்லாஹ் குர்ஆனை இறக்கியது போல நானும் இறக்குவேன்’ என்று கூறி அல்லாஹ்வின் மீது அபாண்டமாக பொய் கூறுபவர்களை விட மிகப் பெரிய அக்கிரமக்காரன் யாரும் இல்லை. தூதரே! நீர் இந்த அநியாயக்காரர்களை அவர்களுக்கு மரணம் நேரும் வேளையில் காணவேண்டுமே! வானவர்கள் தங்கள் கைகளால் அவர்களை அடித்தவர்களாக, வேதனைப்படுத்தியவர்களாகக் கூறுவார்கள், “உங்களின் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள். நாங்கள் அவற்றைக் கைப்பற்றிக் கொள்வோம். நபித்துவம், இறை அறிவிப்பு, அல்லாஹ் இறக்கியது போன்று இறக்குவேன் என்று வாதிட்டு அபாண்டமாக அல்லாஹ்வின் மீது பொய் கூறியதனாலும் அல்லாஹ்வின் சான்றுகளை நம்பாமல் கர்வம் கொண்டதனாலும் இன்றைய தினம் உங்களுக்கு இழிவுதரும் வேதனையை கூலியாக வழங்குவோம். அதனை நீர் இழிவான நிலைமையில் பார்ப்பீர்.
Arabic Tafsirs:
وَلَقَدْ جِئْتُمُوْنَا فُرَادٰی كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّتَرَكْتُمْ مَّا خَوَّلْنٰكُمْ وَرَآءَ ظُهُوْرِكُمْ ۚ— وَمَا نَرٰی مَعَكُمْ شُفَعَآءَكُمُ الَّذِیْنَ زَعَمْتُمْ اَنَّهُمْ فِیْكُمْ شُرَكٰٓؤُا ؕ— لَقَدْ تَّقَطَّعَ بَیْنَكُمْ وَضَلَّ عَنْكُمْ مَّا كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟۠
6.94. மீண்டும் எழுப்பப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இன்றைய தினம் நீங்கள் நம்மிடம் தனித்தனியாக வந்துள்ளீர்கள். பணமோ பதவியோ எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கள் முதலில் படைக்கப்பட்டவாறு நிர்வாணமாகவும், பாதணியின்றியும், விருத்தசேதனம் செய்யப்படாமலும் வந்துள்ளீர்கள். நாம் உங்களுக்கு வழங்கிய செல்வங்களையெல்லாம் உலகில் உங்களையும் மீறி விட்டு வந்துவிட்டீர்கள். உங்களுடைய தரகர்களாக, வணக்கத்திலே அல்லாஹ்வுக்கு இணையாக நீங்கள் கருதிக்கொண்டிருந்த உங்களது தெய்வங்களை நாம் உங்களுடன் காணவில்லை. உங்களிடையேயுள்ள தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிட்டன. அவர்கள் பரிந்துரை செய்பவர்கள், அல்லாஹ்வுக்கு இணையானவர்கள் என்ற உங்களது எண்ணமும் உங்களை விட்டும் மறைந்து சென்றுவிட்டது.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• إنزال الكتب على الأنبياء هو سُنَّة الله في المرسلين، والنبي عليه الصلاة والسلام واحد منهم.
1. தூதர்களுக்கு வேதங்களை இறக்குவது தூதர்களாக அனுப்பப்பட்டோர் விடயத்தில் அல்லாஹ்வின் வழிமுறையாகும். நபியவர்களும் அவர்களில் ஒருவர்தாம்.

• أعظم الناس كذبًا وفرية هو الذي يكذب على الله تعالى، فينسب أو ينفي ويثبت في حق الله تعالى أمرًا ليس عليه دليل صحيح.
2. உரிய ஆதாரமின்றி அல்லாஹ்வைக் குறித்து ஒரு விடயம் இருப்பதாகவோ அல்லது இல்லையென்பதாகவோ, அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனே மனிதர்களில் மிகப் பெரும் பொய்யனும் அபாண்டம் சுமத்தியவனுமாவான்.

• كل أحد يبعث يوم القيامة فردًا متجردًا عن المناصب والألقاب، فقيرًا، ويحاسب وحده.
3. மறுமை நாளில் ஒவ்வொருவரும் தனித் தனியாக, பதவி, பட்டம் ஆகியவற்றை விட்டும் நீங்கியவராகவும் ஏழையாகவும் எழுப்பப்பட்டு தனியாகவே விசாரணை செய்யப்படுவார்கள்.

 
Translation of the Meanings Surah: Al-An‘ām
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close