Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Mā’idah   Verse:
اِنَّمَا یُرِیْدُ الشَّیْطٰنُ اَنْ یُّوْقِعَ بَیْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِی الْخَمْرِ وَالْمَیْسِرِ وَیَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ ۚ— فَهَلْ اَنْتُمْ مُّنْتَهُوْنَ ۟
5.91. போதை மற்றும் சூதாட்டத்தை ஷைத்தான் அலங்கரித்துக்காட்டுவதன் மூலம் உள்ளங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தவும் இறைநினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் திருப்பிவிடுவதையுமே நாடுகின்றான். நம்பிக்கையாளர்களே! இந்த பாவமான காரியங்களை நீங்கள் விட்டு விடுவீர்களா என்ன? அதுவே உங்களுக்கு உகந்ததாகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனவே நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.
Arabic Tafsirs:
وَاَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا ۚ— فَاِنْ تَوَلَّیْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰی رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
5.92. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். மாறுசெய்வதிலிருந்து விலகியிருங்கள். நீங்கள் இதனைப் புறக்கணித்தால் அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துரைப்பதுதான் நம் தூதர் மீதுள்ள கடமையாகும். அவர் எடுத்துரைத்துவிட்டார். நீங்கள் நேர்வழி அடைந்தால் அது உங்களுக்குத்தான் நல்லது. நீங்கள் தீங்கிழைத்தால் அதன் கேடு உங்களையே சாரும்.
Arabic Tafsirs:
لَیْسَ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِیْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوْا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّاَحْسَنُوْا ؕ— وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠
5.93. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு, அவனை நெருங்குவதற்காக நற்செயல்கள் புரிந்தவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை அஞ்சியோராகவும் அவன் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்களாகவும் இருந்துகொண்டு தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர்ந்துகொண்டால் மது அருந்துவது தடைசெய்யப்படுவதற்கு முன் அருந்தியதற்கு அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அதன் பின் ‘அல்லாஹ் நம்மைக் கண்காணிக்கிறான்’ என்ற உணர்வு அவர்களிடம் மேலோங்கி அவனைப் பார்ப்பது போன்றே அவனை வணங்க ஆரம்பித்தார்கள். தன்னைப் பார்ப்பது போன்றே தன்னை வணங்கக்கூடியவர்கள், எப்பொழுதுமே அல்லாஹ் தம்மைக் கண்காணிக்கின்றான் என்ற உணர்வுடன் இருப்பதனால் அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். இதுதான் ஒரு நம்பிக்கையாளனை தனது செயற்பாடுகளை அழகிய முறையிலும் திறமையாகவும் செய்வதற்குத் தூண்டுகிறது.
Arabic Tafsirs:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَیَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَیْءٍ مِّنَ الصَّیْدِ تَنَالُهٗۤ اَیْدِیْكُمْ وَرِمَاحُكُمْ لِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّخَافُهٗ بِالْغَیْبِ ۚ— فَمَنِ اعْتَدٰی بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِیْمٌ ۟
5.94. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் போது ஏதாவது தரை வேட்டைப் பிராணியை அனுப்பி வைத்து அவன் உங்களைச் சோதிப்பான். அவற்றில் சிறியதை உங்களின் கைகளால் பிடித்துவிடலாம், பெரியதை உங்களின் ஈட்டியால் வேட்டையாடிவிடலாம். அல்லாஹ்வின் அறிவைப் பரிபூரணமாக நம்பிக்கைகொண்டதனால், மறைவில் தன்னை அஞ்சுவோர் யார் என்பதை அடையாளப்படுத்தி விசாரணை செய்வதற்காகவே அல்லாஹ் இவ்வாறான விஷயங்களை ஏற்படுத்துகிறான். தனது செயல்கள் மறைய முடியாத தன்னைப் படைத்தவனுக்கு அஞ்சியதனால் வேட்டையாடாமல் தவிர்ந்து கொள்கிறான். யார் வரம்புமீறி இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடி விடுவாரோ - அல்லாஹ் தடுத்த செயல்களைச் செய்ததனால் - அவருக்கு மறுமைநாளில் வேதனைமிக்க தண்டனை உண்டு.
Arabic Tafsirs:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّیْدَ وَاَنْتُمْ حُرُمٌ ؕ— وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ یَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْیًا بٰلِغَ الْكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِیْنَ اَوْ عَدْلُ ذٰلِكَ صِیَامًا لِّیَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ؕ— عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ؕ— وَمَنْ عَادَ فَیَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟
5.95. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் போது தரை மிருகங்களை வேட்டையாடாதீர்கள். யார் வேண்டுமென்றே வேட்டையாடிக் கொன்றுவிடுவாரோ அவர் அதுபோன்ற ஒட்டகத்தையோ ஆட்டையோ மாட்டையோ பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். முஸ்லிம்களிடையே நீதிமிக்க இரு மனிதர்கள் இதை முடிவுசெய்ய வேண்டும். அவர்கள் இருவரின் தீர்ப்பில் முடிவாவதை மக்காவிற்கு அனுப்பப்பட்டு ஹரமில் பலியிடப்படும் அல்லது ஹரமிலுள்ள சில ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக அதற்கான தொகையைக் கொடுத்துவிட வேண்டும் (ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு அளவு உணவு அளிக்கப்பட வேண்டும்) அல்லது அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும். இவையனைத்தும் வேட்டையாடியவர் தாம் செய்த செயலின் விளைவை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். தடைஉத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னால், புனித எல்லையில் வேட்டையாடியது இஹ்ராம் அணிந்த நிலையில் தரைவாழ் மிருகங்களை வேட்டையாடியது ஆகியவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அவ்வாறு செய்பவரை அல்லாஹ் தண்டித்துப் பழிவாங்குவான். அவன் வல்லமைமிக்கவன். தான் நாடினால் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவர்களை தண்டிப்பதும் அவனது வல்லமையில் உள்ளவைதான். அதிலிருந்து அவனை யாராலும் தடுக்கமுடியாது.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• عدم مؤاخذة الشخص بما لم يُحَرَّم أو لم يبلغه تحريمه.
1. தடைசெய்யப்படுவதற்கு முன்னரே அல்லது தடைசெய்யப்பட்டதை அறிவதற்கு முன்னரே ஒருவர் அதில் ஈடுபட்டுவிட்டால் அவர் குற்றம்பிடிக்கப்பட மாட்டார்.

• تحريم الصيد على المحرم بالحج أو العمرة، وبيان كفارة قتله.
2. ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வேட்டையாடியதற்குறிய பரிகாரமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• من حكمة الله عز وجل في التحريم: ابتلاء عباده، وتمحيصهم، وفي الكفارة: الردع والزجر.
3. அல்லாஹ் தடைசெய்தவற்றின் நோக்கங்களில் ஒன்று, அடியார்களை சோதிப்பதாகும். பரிகாரத்தின் நோக்கம் எச்சரிப்பதும் கண்டிப்பதுமாகும்.

 
Translation of the Meanings Surah: Al-Mā’idah
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close