Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Mā’idah   Verse:
سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَكّٰلُوْنَ لِلسُّحْتِ ؕ— فَاِنْ جَآءُوْكَ فَاحْكُمْ بَیْنَهُمْ اَوْ اَعْرِضْ عَنْهُمْ ۚ— وَاِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ یَّضُرُّوْكَ شَیْـًٔا ؕ— وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَیْنَهُمْ بِالْقِسْطِ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
5.42. இந்த யூதர்கள் பொய்யை அதிகமாக செவியேற்கக்கூடியவர்கள்; வட்டி போன்ற தடுக்கப்பட்ட செல்வங்களை அதிகமாக உண்ணக்கூடியவர்கள். தூதரே!அவர்கள் உம்மிடம் தீர்ப்புக்கேட்டு வந்தால் நீர் விரும்பினால் தீர்ப்பளிப்பீராக அல்லது அவர்களை தீர்ப்பளிக்காது விட்டுவிடுவீராக. இரண்டில் எதை வேண்டுமானாலும் நீர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீர் அவர்களிடையே தீர்ப்பளிக்காமல் விட்டுவிட்டால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கையும் இழைத்துவிட முடியாது. அவர்கள் அக்கிரமக்காரர்களாவும் எதிரிகளாகவும் இருந்தாலும் நீர் அவர்களிடையே தீர்ப்பளித்தால் நீதியுடன் தீர்ப்பளிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்தக்கூடியவர்களை நேசிக்கிறான். தீர்ப்புக்கேட்பவர்கள் நீதிபதிக்கு எதிரிகளாக இருந்தாலும் சரியே.
Arabic Tafsirs:
وَكَیْفَ یُحَكِّمُوْنَكَ وَعِنْدَهُمُ التَّوْرٰىةُ فِیْهَا حُكْمُ اللّٰهِ ثُمَّ یَتَوَلَّوْنَ مِنْ بَعْدِ ذٰلِكَ ؕ— وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ ۟۠
5.43. இவர்களின் விவகாரம் மிகவும் ஆச்சரியமானது! ஏனெனில் தாங்கள் நம்பிக்கைகொண்டிருப்பதாக கூறும் அல்லாஹ்வின் தீர்ப்பை உள்ளடக்கிய தவ்ராத் அவர்களிடம் உள்ள நிலமையிலும், உம்மை நிராகரித்துவிட்டு நீர் வழங்கும் தீர்ப்பு அவர்களின் மனவிருப்பங்களுக்கு ஒத்ததாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் உம்மிடம் தீர்ப்புக்கேட்கின்றனர். பின்னர் உமது தீர்ப்பு அவர்களின் மனவிருப்பங்களுக்கு ஒத்ததாக அமையவில்லையெனில் அதனைப் புறக்கணித்துவிடுகிறார்கள். தம் வேதத்தில் உள்ளதையும் நிராகரித்து, உமது தீர்ப்பையும் புறக்கணித்துவிடுகிறார்கள். இவர்களது இச்செயல் நம்பிக்கையாளர்களின் செயலல்ல. எனவே இவர்கள் உம்மீதும் நீர் கொண்டுவந்ததன் மீதும் நம்பிக்கைகொண்டவர்களல்ல.
Arabic Tafsirs:
اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرٰىةَ فِیْهَا هُدًی وَّنُوْرٌ ۚ— یَحْكُمُ بِهَا النَّبِیُّوْنَ الَّذِیْنَ اَسْلَمُوْا لِلَّذِیْنَ هَادُوْا وَالرَّبّٰنِیُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَیْهِ شُهَدَآءَ ۚ— فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؕ— وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ ۟
5.44. நாம் மூஸாவின்மீது தவ்ராத்தை இறக்கினோம். அதில் நன்மையான விஷயங்களின்பால் வழிகாட்டுதலும் வெளிச்சம் பெறக்கூடிய ஒளியும் இருந்தன. இஸ்ராயீலின் மக்களில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்த தூதர்கள் அந்த வேதத்தின்படியே தீர்ப்பளித்தார்கள். திரிவுபடுத்தல் மாற்றுதல் ஆகியவற்றை விட்டும் வேதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியதனால், மக்களை வழிநடத்தும் அறிஞர்களும் சட்டவல்லுனர்களும் அதன்படியே தீர்ப்பளித்தார்கள். அது உண்மையானது என்பதற்கு அவர்களே சாட்சியாளர்களாக இருந்தார்கள். மக்கள் தங்கள் விவகாரங்களை அவர்களிடமே கொண்டு செல்கின்றனர். யூதர்களே! நீங்கள் மக்களுக்குப் பயப்படாதீர்கள். அல்லாஹ்வாகிய எனக்கே பயப்படுங்கள். அல்லாஹ் வேதத்தில் இறக்கிய கட்டளைக்குப் பகரமாக தலைமைத்துவம், அந்தஸ்து, சொத்து போன்ற அற்ப ஆதாயத்தைப் பெற்றுக் கொள்ளாதீர்கள். யார் அல்லாஹ் இறக்கியதன்படி தீர்ப்பளிக்காமல் இருப்பதை சரியெனக் கருதுகிறாரோ அல்லது அதனைவிடுத்து வேறு சட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறாரோ அல்லது அதனை பிற சட்டங்களுக்குச் சமமாகக் கருதுகிறாரோ அவர்கள்தாம் உண்மையில் நிராகரிப்பாளர்கள்.
Arabic Tafsirs:
وَكَتَبْنَا عَلَیْهِمْ فِیْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِ ۙ— وَالْعَیْنَ بِالْعَیْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ ۙ— وَالْجُرُوْحَ قِصَاصٌ ؕ— فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ؕ— وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
5.45. நாம் தவ்ராத்தில் யூதர்கள் மீது பின்வரும் விஷயத்தை கடமையாக்கினோம்: “வேண்டுமென்றே ஒரு மனிதரைக் கொலை செய்பவர் அதற்குப் பகரமாக கொலை செய்யப்படுவார். வேண்டுமென்றே கண்ணை நோண்டி எடுத்தவரின் கண்ணும் நோண்டி எடுக்கப்படும். வேண்டுமென்றே மூக்கை அறுத்தவரின் மூக்கும் அறுக்கப்படும். வேண்டுமென்றே காதை வெட்டியவரின் காதும் வெட்டப்படும். வேண்டுமென்றே பல்லை பிடுங்கியவரின் பல்லும் பிடுங்கப்படும். காயங்களுக்கு சமமான அளவு காயப்படுத்தப்படுவார்கள். யாரேனும் குற்றவாளியை மன்னித்துவிட்டால் அநியாயம் இழைத்தவரை மன்னித்ததனால் அது மன்னித்தவரின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைந்துவிடும். பழிவாங்குவதிலும் ஏனைய விடயங்களிலும் அல்லாஹ் இறக்கியதன்படி தீர்ப்பளிக்காதவர்கள்தாம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்கள்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• تعداد بعض صفات اليهود، مثل الكذب وأكل الربا ومحبة التحاكم لغير الشرع؛ لبيان ضلالهم وللتحذير منها.
1. பொய்கூறுதல், வட்டி வாங்கி உண்ணுதல், மார்க்கத்திற்கு வெளியே தீர்ப்புக்கேட்பதை விரும்புதல் போன்ற யூதர்களின் சில பண்புகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது அவர்களது வழிகேட்டைத் தெளிவுபடுத்தி அதனை எச்சரிப்பதற்காகவுமே.

• بيان شرعة القصاص العادل في الأنفس والجراحات، وهي أمر فرضه الله تعالى على من قبلنا.
2. உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கேற்ப நியாயமான முறையில் பழிவாங்கப்பட வேண்டும். இது அல்லாஹ் நமக்கு முன்னுள்ளவர்கள் மீது விதித்த கடமையாகும்.

• الحث على فضيلة العفو عن القصاص، وبيان أجرها العظيم المتمثّل في تكفير الذنوب.
3. பழிவாங்காமல் மன்னிப்பதன் சிறப்பு தெளிவாகிறது. பாவங்களுக்குப் பரிகாரமாக அமையுமளவுக்கு மகத்தான கூலி அதற்கு உண்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• الترهيب من الحكم بغير ما أنزل الله في شأن القصاص وغيره.
4. பழிவாங்குதல் மற்றும் இன்னபிற விஷயங்களில் அல்லாஹ்வின் சட்டத்தைக் கொண்டு தீர்ப்பளிக்காமல் இருப்பது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
Translation of the Meanings Surah: Al-Mā’idah
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close