Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Mā’idah   Verse:
لُعِنَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ؕ— ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟
5.78. இஸ்ராயீலின் மக்களிலுள்ள நிராகரிப்பாளர்களை தன் அருளிலிருந்து தூரமாக்கிவிட்டதாக அல்லாஹ் தாவூதுக்கு இறக்கிய சபூர் என்னும் வேதத்திலும் மர்யமின் மகன் ஈசாவுக்கு இறக்கிய இன்ஜீல் என்னும் வேதத்திலும் கூறுகிறான். அவர்கள் அல்லாஹ் தடைசெய்ததில் வரம்புமீறியதனாலும் பாவங்கள் புரிந்ததனாலும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்டார்கள்.
Arabic Tafsirs:
كَانُوْا لَا یَتَنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ؕ— لَبِئْسَ مَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟
5.79. அவர்கள் பாவங்கள் புரிவதைவிட்டும் மக்களைத் தடுக்கவில்லை. மாறாக தங்களைத் தடுப்பவர்கள் யாரும் இல்லாததால் பாவங்கள் புரிபவர்கள் வெளிப்படையாகவே பாவங்கள் புரிந்தார்கள். பாவங்களைத் தடுக்காமல் அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகவும் மோசமான காரியமாகும்.
Arabic Tafsirs:
تَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یَتَوَلَّوْنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ اَنْفُسُهُمْ اَنْ سَخِطَ اللّٰهُ عَلَیْهِمْ وَفِی الْعَذَابِ هُمْ خٰلِدُوْنَ ۟
5.80. தூதரே! யூதர்களிலுள்ள இந்த நிராகரிப்பாளர்களில் பெரும்பாலோர் இணைவைப்பாளர்களை நேசிப்பவர்களாகவும் அவர்களின் பக்கம் சாய்வோராகவும் உம்மையும் ஓரிறைவனை வணங்குபவர்களையும் எதிர்ப்பவர்களாகவும் நீர் காண்பீர். நிராகரிப்பாளர்களுடன் நட்புக்கொள்வதற்கு அவர்கள் முன்வருவது மோசமானதாகும். அதுவே அல்லாஹ் அவர்கள் மீது கோபம்கொண்டு அவர்களை நரகத்தில் நுழைவிப்பதற்கான காரணமாகும். அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேறவே முடியாது. அங்கு அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அதிலிருந்து அவர்கள் ஒரு போதும் வெளியேற முடியாது.
Arabic Tafsirs:
وَلَوْ كَانُوْا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِیِّ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِیَآءَ وَلٰكِنَّ كَثِیْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
5.81. இந்த யூதர்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டிருந்தால் நம்பிக்கையாளர்களை விடுத்து இணைவைப்பாளர்களை நேசிப்பவர்களாகவும் அவர்களின் பக்கம் சாய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பாளர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த யூதர்களில் அதிகமானோர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவது அவனையும் விசுவாசிகளையும் நேசித்தல் ஆகியவற்றை விட்டும் வெளியேறியவர்களே.
Arabic Tafsirs:
لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الْیَهُوْدَ وَالَّذِیْنَ اَشْرَكُوْا ۚ— وَلَتَجِدَنَّ اَقْرَبَهُمْ مَّوَدَّةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰی ؕ— ذٰلِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّیْسِیْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
5.82. தூதரே! உம்மீதும் நீர் கொண்டுவந்ததன் மீதும் நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளர்களுக்கு மற்ற மக்களைவிட யூதர்களும், சிலை வணங்கிகளும் ஏனைய இணைவைப்பாளர்களுமே கடும் பகைவர்களாக இருப்பதை நீர் காண்பீர். காரணம், அந்த யூதர்களிடம் காணப்படும் கர்வமும் பொறாமையும் குரோதமுமேயாகும். உம்மீது நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமானவர்களாகத் தம்மை கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களை நீர் காண்பீர். நம்பிக்கையாளர்களுடன் அவர்கள் நெருக்கமாயிருப்பதற்குக் காரணம் அவர்களில் அறிஞர்களும் வணக்கசாலிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பணிவானவர்கள். கர்வம் கொள்வதில்லை. ஏனெனில் கர்வம்கொள்பவனின் உள்ளத்தை சத்தியம் சென்றடையாது.
Arabic Tafsirs:
وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَی الرَّسُوْلِ تَرٰۤی اَعْیُنَهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَقِّ ۚ— یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟
5.83. நஜாசியையும் அவரது தோழர்களையும் போன்ற இவர்கள் இளகியமனம் கொண்டவர்கள். ஈஸா (அலை) அவர்கள் கொண்டுவந்ததை அவர்கள் அறிந்து வைத்திருந்ததனால் குர்ஆனிலிருந்து இறக்கப்பட்டதைச் செவியுற்று அது சத்தியமே என அறிந்துகொண்டபோது உள்ளச்சத்தால் அழுகிறார்கள். “எங்கள் இறைவா! உன் தூதர் முஹம்மது மீது நீ இறக்கியதை நாங்கள் நம்பிவிட்டோம். எனவே மறுமைநாளில் சாட்சிகூறும் இந்த சமூகமான முஹம்மது (ஸல்) அவர்களது சமுதாயத்துடன் எங்களையும் பதிவுசெய்வாயாக” என்று கூறுகிறார்கள்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• ترك الأمر بالمعروف والنهي عن المنكر موجب لِلَّعْنِ والطرد من رحمة الله تعالى.
1. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதை விட்டு விடுவது அல்லாஹ்வின் சாபத்திற்கும் அவனது அருளை விட்டும் தூரமாக்கப்படுவதற்கும் அவசியம் இட்டுச்செல்வதாகும்.

• من علامات الإيمان: الحب في الله والبغض في الله.
2. அல்லாஹ்வுக்காக நேசம்கொள்வதும் அல்லாஹ்வுக்காக பகைமை பாராட்டுவதும் ஈமானின் அடையாளங்களாகும்.

• موالاة أعداء الله توجب غضب الله عز وجل على فاعلها.
3. அல்லாஹ்வின் எதிரிகளுடன் நேசம்கொள்பவர் மீது அல்லாஹ்வின் கோபம் விதியாகிவிடும்.

• شدة عداوة اليهود والمشركين لأهل الإسلام، وفي المقابل وجود طوائف من النصارى يدينون بالمودة للإسلام؛ لعلمهم أنه دين الحق.
4. யூதர்களும் இணைவைப்பாளர்களும் முஸ்லிம்களை கடுமையாக எதிர்ப்பவர்கள். அவர்களுக்கு மாறாக கிறிஸ்தவர்களில் சில குழுக்கள் இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதை அறிந்திருப்பதால் இஸ்லாத்தை நேசிக்கின்றனர்.

 
Translation of the Meanings Surah: Al-Mā’idah
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close