Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Umurongo: (93) Isura: At Tawubat
اِنَّمَا السَّبِیْلُ عَلَی الَّذِیْنَ یَسْتَاْذِنُوْنَكَ وَهُمْ اَغْنِیَآءُ ۚ— رَضُوْا بِاَنْ یَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ ۙ— وَطَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
9.93. தகுந்த காரணமுடையோரைத் தண்டிக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தி விட்டு தண்டனைக்குரியோர் யார் என்பதைக் குறிப்பிடுகிறான். -தூதரே!- போர் புரிவதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றிருந்தும் போரை விட்டும் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதி கோருபவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள். பின்தங்கி வீடுகளில் இருப்போருடன் தங்கியிருப்பதன் மூலம் இழிவையும் அவமானத்தையும் தமக்கு அவர்கள் விரும்பினார்கள். அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். எனவே அவைகள் அறிவுரையால் பயனடையமாட்டா. இவ்வாறு முத்திரையிடப்பட்டதனால் அவர்களால் தங்களுக்கு நன்மையானதை அறிந்து அதனைத் தேர்ந்தெடுக்கவும் முடியாது; தீமையானதை அறிந்து அதிலிருந்து விலகிக் கொள்ளவும் முடியாது.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• المجاهدون سيحصِّلون الخيرات في الدنيا، وإن فاتهم هذا فلهم الفوز بالجنة والنجاة من العذاب في الآخرة.
1. முஜாஹிதுகள் இவ்வுலகிலேயே நன்மைகளைப் பெறுவார்கள். இவ்வுலகில் அவர்களுக்கு அது தவறினாலும் மறுமையில் அவர்களுக்கு சுவன வெற்றியும் மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்பும் உண்டு.

• الأصل أن المحسن إلى الناس تكرمًا منه لا يؤاخَذ إن وقع منه تقصير.
2. மேலதிகமாக மக்களுக்கு நன்மை செய்பவர்களிடம் ஏற்படும் குறை தண்டனைக்குரியதல்ல என்பதே அடிப்படையாகும்.

• أن من نوى الخير، واقترن بنيته الجازمة سَعْيٌ فيما يقدر عليه، ثم لم يقدر- فإنه يُنَزَّل مَنْزِلة الفاعل له.
3. ஒருவர் நன்மையை உறுதியாக செய்ய நாடி அதற்காக தன்னாலான முயற்சியும் செய்தும் அவரால் அந்த செயலைச் செய்ய முடியவில்லையெனில் அவர் அந்த செயலைச் செய்தவரைப் போன்றே கணக்கிடப்படுவார்.

• الإسلام دين عدل ومنطق؛ لذلك أوجب العقوبة والمأثم على المنافقين المستأذنين وهم أغنياء ذوو قدرة على الجهاد بالمال والنفس.
4. இஸ்லாம் நீதியான தர்க்க ரீதியான மார்க்கமாகும். எனவேதான் செல்வங்களாலும் உயிர்களாலும் போரிடுவதற்கு வசதியும் வலிமையும் இருந்தும் பின்தங்குவதற்கு அனுமதி கேட்கும் நயவஞ்சகர்களுக்கு தண்டனையையும் பாவத்தையும் அது விதியாக்கியுள்ளது.

 
Ibisobanuro by'amagambo Umurongo: (93) Isura: At Tawubat
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga