Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Fatwir   Umurongo:
وَالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ مِنَ الْكِتٰبِ هُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ ؕ— اِنَّ اللّٰهَ بِعِبَادِهٖ لَخَبِیْرٌ بَصِیْرٌ ۟
35.31. -தூதரே!- நாம் உமக்கு வஹியாக அறிவித்த வேதம் சந்தேகமற்ற உண்மையாகும். முந்தைய வான வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக அதனை அல்லாஹ் இறக்கியுள்ளான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். ஒவ்வொரு சமூகத்தின் தூதருக்கும் அக்காலத்தில் அவர்களுக்குத் தேவையானவற்றை அவன் வஹியாக அறிவிக்கிறான்.
Ibisobanuro by'icyarabu:
ثُمَّ اَوْرَثْنَا الْكِتٰبَ الَّذِیْنَ اصْطَفَیْنَا مِنْ عِبَادِنَا ۚ— فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهٖ ۚ— وَمِنْهُمْ مُّقْتَصِدٌ ۚ— وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَیْرٰتِ بِاِذْنِ اللّٰهِ ؕ— ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ ۟ؕ
35.32. பின்னர் எல்லா சமூகங்களைவிடவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகமான முஹம்மதின் சமூகத்திற்கு குர்ஆனை நாம் வழங்கினோம். அவர்களில் கடமையானவற்றை விட்டுவிட்டு தடுக்கப்பட்டவற்றில் ஈடுபட்டு தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் கடமையானவற்றைச் செய்து தடுக்கப்பட்டுள்ளவற்றை விட்டும் விலகி ஆனால் இறைவனுக்கு விருப்பமான சில காரியங்களைச் செய்யாமல் அவன் வெறுக்கும் சில காரியங்களில் ஈடுபட்ட நடுநிலையாளர்களும் இருக்கிறார்கள். அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு நன்மையின்பால் முந்தக்கூடியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு கடமையான மற்றும் இறைவனுக்கு கடமையான, விருப்பமான செயல்களைச் செய்தார்கள். தடுக்கப்பட்ட மற்றும் இறைவன் வெறுக்கக்கூடிய செயல்களை விட்டும் தவிர்ந்திருந்தார்கள். மேற்கூறப்பட்ட -இச்சமுதாயத்தின் தேர்வு, அதற்குக் குர்ஆன் வழங்கப்பட்டமை ஆகிய- அனைத்தும் அல்லாஹ்வின் மாபெரும் பாக்கியமாகும். அதற்கு இணையான வேறு அருட்கொடை எதுவும் இல்லை.
Ibisobanuro by'icyarabu:
جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ۚ— وَلِبَاسُهُمْ فِیْهَا حَرِیْرٌ ۟
35.33. தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் நிலையான சுவனங்களில் பிரவேசிப்பார்கள். அங்கு அவர்களுக்கு தங்கக் காப்புகளும் முத்தும் அணிவிக்கப்படும். அவர்களின் ஆடை பட்டாக இருக்கும்.
Ibisobanuro by'icyarabu:
وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْۤ اَذْهَبَ عَنَّا الْحَزَنَ ؕ— اِنَّ رَبَّنَا لَغَفُوْرٌ شَكُوْرُ ۟ۙ
35.34. அவர்கள் சுவனத்தில் நுழைந்த பிறகு கூறுவார்கள்: “நரகத்தில் நுழைந்து விடுவோமோ என்று எங்களுக்கு ஏற்பட்ட பயத்தினால் உண்டான கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நிச்சயமாக எங்களின் இறைவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான்.
Ibisobanuro by'icyarabu:
١لَّذِیْۤ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖ ۚ— لَا یَمَسُّنَا فِیْهَا نَصَبٌ وَّلَا یَمَسُّنَا فِیْهَا لُغُوْبٌ ۟
35.35. அவனே தன் அருளால் எங்களின் எந்த சக்தி, ஆற்றலுமின்றி நிலையான வீட்டில் எங்களைத் தங்க வைத்தான். -இனி அங்கிருந்து எங்கும் செல்ல வேண்டியதில்லை-. அங்கு சிரமமோ, களைப்போ எங்களுக்கு ஏற்படாது.
Ibisobanuro by'icyarabu:
وَالَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَ ۚ— لَا یُقْضٰی عَلَیْهِمْ فَیَمُوْتُوْا وَلَا یُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا ؕ— كَذٰلِكَ نَجْزِیْ كُلَّ كَفُوْرٍ ۟ۚ
35.36. தேர்ந்தெடுக்கப்பட்ட தன் அடியார்களுக்கு வழங்கப்படும் வெகுமதியை குறிப்பிட்ட இறைவன் அவர்களில் இழிவடைந்தவர்களான நிராகரிப்பாளர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையைக் குறித்து கூறுகிறான்: அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்கள் மரணித்து வேதனையிலிருந்து விடுதலை பெறக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு மரணம் ஏற்படாது. நரக வேதனையிலும் சிறிதளவும் அவர்களுக்குக் குறைக்கப்படாது. இவ்வாறு இறைவனின் அருட்கொடையை மறுக்கும் ஒவ்வொருவருக்கும் மறுமை நாளில் கூலி கொடுக்கிறோம்.
Ibisobanuro by'icyarabu:
وَهُمْ یَصْطَرِخُوْنَ فِیْهَا ۚ— رَبَّنَاۤ اَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَیْرَ الَّذِیْ كُنَّا نَعْمَلُ ؕ— اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا یَتَذَكَّرُ فِیْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِیْرُ ؕ— فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ نَّصِیْرٍ ۟۠
35.37. அவர்கள் உயர்ந்த தொனியில் கத்துவார்கள், உதவி தேடுவார்கள். “எங்கள் இறைவா! நரகத்திலிருந்து எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் உலகில் செய்து கொண்டிருந்ததற்கு மாறாக உன் திருப்தியை பெற்று உனது தண்டனையிலிருந்து தப்பும் நோக்கில் நற்செயல்கள் செய்கின்றோம்” என்று அவர்கள் கூக்குரலிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு விடையளிப்பான்: “படிப்பினை பெறக்கூடியவர்கள் படிப்பினை பெறும் அளவுக்கு, அல்லாஹ்வின் பக்கம் திரும்பி நற்செயல் புரியும் அளவுக்கு நாம் உங்களுக்கு வாழ்நாளை வழங்கவில்லையா? அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரித்தவர்களாக தூதர்கள் உங்களிடம் வந்தனர்? இனி உங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இனி இதற்குப் பிறகு நீங்கள் எந்தச் சாக்குப்போக்கும் கூற முடியாது. நரக வேதனையை அனுபவியுங்கள். நிராகரித்து, பாவங்கள் புரிந்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனையை விட்டும் காப்பாற்றும் அல்லது அவர்களை விட்டும் அதனைக் குறைக்கும் உதவியாளர்கள் யாரும் இல்லை.
Ibisobanuro by'icyarabu:
اِنَّ اللّٰهَ عٰلِمُ غَیْبِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
35.38. நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள மறைவான விஷயங்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டுத் தப்ப முடியாது. திட்டமாக அவன் தன் அடியார்கள் தன் உள்ளங்களில் மறைத்து வைத்திருக்கும் நன்மையையும் தீமையையும் நன்கறிந்தவன்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• فضل أمة محمد صلى الله عليه وسلم على سائر الأمم.
1. மற்ற சமூகங்களை விட நபியவர்களின் சமூகத்தின் சிறப்பு.

• تفاوت إيمان المؤمنين يعني تفاوت منزلتهم في الدنيا والآخرة.
2. நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையிலும் வேறுபாடுகள் காணப்படுவது, அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அடையக்கூடிய அந்தஸ்துகள் பலவாறாக இருக்கின்றன என்பதாகும்.

• الوقت أمانة يجب حفظها، فمن ضيعها ندم حين لا ينفع الندم.
3.நேரம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் அமானிதமாகும். அதனை யார் வீணாக்கிவிடுவாரோ கைசேதம் பலனளிக்காத இடத்தில் கைசேதப்படுவார்.

• إحاطة علم الله بكل شيء.
4. அனைத்தையும் சூழந்த அல்லாஹ்வின் அறிவு.

 
Ibisobanuro by'amagambo Isura: Fatwir
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga