Check out the new design

Fassarar ma'anonin Alkura'ni mai girma - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - Jerin ginshikan taken fassarorin

XML CSV Excel API
Please review the Terms and Policies

Fassarar Ma'anoni Sura: Al'alaq   Aya:

அல்அலக்

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ
(நபியே! அகிலங்கள் அனைத்தையும்) படைத்த உம் இறைவனின் பெயரால் படிப்பீராக!
Tafsiran larabci:
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۟ۚ
அவன் மனிதனைக் கருவிலிருந்து படைத்தான்.
Tafsiran larabci:
اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۟ۙ
படிப்பீராக! இன்னும் உம் இறைவன் பெரும் கண்ணியவான் ஆவான்.
Tafsiran larabci:
الَّذِیْ عَلَّمَ بِالْقَلَمِ ۟ۙ
அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.
Tafsiran larabci:
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ یَعْلَمْ ۟ؕ
மனிதனுக்கு அவன் அறியாததைக் கற்பித்தான்.
Tafsiran larabci:
كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَیَطْغٰۤی ۟ۙ
அவ்வாறல்ல! நிச்சயமாக மனிதன் (நிராகரிப்பிலும் பாவத்திலும்) எல்லை மீறுகிறான்,
Tafsiran larabci:
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰی ۟ؕ
(காரணம், இறையருளை விட்டுத்) தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால்.
Tafsiran larabci:
اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجْعٰی ۟ؕ
நிச்சயமாக மீட்சி உம் இறைவனின் பக்கம்தான் இருக்கிறது.
Tafsiran larabci:
اَرَءَیْتَ الَّذِیْ یَنْهٰی ۟ۙ
(நபியே!) தடுப்பவனை நீர் பார்த்தீரா?
Tafsiran larabci:
عَبْدًا اِذَا صَلّٰی ۟ؕ
ஓர் அடியாரை அவர் தொழும்போது அவன் தடுக்கிறான்.
Tafsiran larabci:
اَرَءَیْتَ اِنْ كَانَ عَلَی الْهُدٰۤی ۟ۙ
நீர் பார்த்தீரா! அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Tafsiran larabci:
اَوْ اَمَرَ بِالتَّقْوٰی ۟ؕ
அல்லது, அவர் நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Tafsiran larabci:
اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
பார்த்தீரா? அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால்,
Tafsiran larabci:
اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
Tafsiran larabci:
كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬— لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ
அவ்வாறல்ல! (அவன் தனது தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் நெற்றி முடியைக் கடுமையாகப் பிடிப்போம். (பின்னர், அவனை நரகத்தில் வீசி எறிவோம்).
Tafsiran larabci:
نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ
பொய் கூறுகின்ற, குற்றம் புரிகின்ற (அவனுடைய) நெற்றி முடியை (பிடித்து நரகத்தில் எறிவோம்).
Tafsiran larabci:
فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
Tafsiran larabci:
سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ
நரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம்.
Tafsiran larabci:
كَلَّا ؕ— لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟
அவ்வாறல்ல, அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (அவனளவில்) நெருங்குவீராக!
Tafsiran larabci:
 
Fassarar Ma'anoni Sura: Al'alaq
Teburin jerin sunayen surori Lambar shafi
 
Fassarar ma'anonin Alkura'ni mai girma - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - Jerin ginshikan taken fassarorin

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

Rufewa