Check out the new design

Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. * - Índice de traducciones


Traducción de significados Capítulo: Al-Nisaa   Versículo:
وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ۚ— كِتٰبَ اللّٰهِ عَلَیْكُمْ ۚ— وَاُحِلَّ لَكُمْ مَّا وَرَآءَ ذٰلِكُمْ اَنْ تَبْتَغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ ؕ— فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِیْضَةً ؕ— وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا تَرٰضَیْتُمْ بِهٖ مِنْ بَعْدِ الْفَرِیْضَةِ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟
4.24. திருமண உறவில் இருக்கும் பெண்களையும் மணமுடித்துக் கொள்வதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆனால் போரில் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு நீங்கள் உரிமையாக்கிக் கொண்ட அடிமைப்பெண்கள் இதிலிருந்து விதிவிலக்காவார்கள். அவர்கள் கருத்தரிக்கவில்லை என்பதை ஒரு மாதவிடாயின் மூலம் உறுதிசெய்த பின் நீங்கள் அவர்களுடன் உறவுவைத்துக் கொள்ளலாம். மேற்கூறப்பட்டவை அனைத்தும் அல்லாஹ் உங்கள்மீது விதித்த சட்டங்களாகும். மேற்கூறப்பட்டவர்களைத் தவிர மற்ற பெண்களை நீங்கள் உங்கள் செல்வங்களின் மூலம் விபச்சாரத்தைத் தவிர்ந்து உங்களது கற்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக திருமணம் செய்வதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். நீங்கள் மணமுடித்து அனுபவித்த பெண்களுக்கு அல்லாஹ் உங்கள்மீது கடமையாக்கிய மணக்கொடையை அளித்துவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாகப் பேசி மணக்கொடையை கூட்டிக்கொள்வதிலோ குறைத்துக் கொள்வதிலோ உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் தான் படைத்தவற்றைக் குறித்து நன்கறிந்தவன். அவர்களைக் குறித்து எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தனது நிர்வகித்தல் மற்றும் சட்டமியற்றுதல் போன்றவற்றில் அவன் ஞானம்மிக்கவன்.
Las Exégesis Árabes:
وَمَنْ لَّمْ یَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ یَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ مِّنْ فَتَیٰتِكُمُ الْمُؤْمِنٰتِ ؕ— وَاللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِكُمْ ؕ— بَعْضُكُمْ مِّنْ بَعْضٍ ۚ— فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ وَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ بِالْمَعْرُوْفِ مُحْصَنٰتٍ غَیْرَ مُسٰفِحٰتٍ وَّلَا مُتَّخِذٰتِ اَخْدَانٍ ۚ— فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ اَتَیْنَ بِفَاحِشَةٍ فَعَلَیْهِنَّ نِصْفُ مَا عَلَی الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ ؕ— ذٰلِكَ لِمَنْ خَشِیَ الْعَنَتَ مِنْكُمْ ؕ— وَاَنْ تَصْبِرُوْا خَیْرٌ لَّكُمْ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
4.25. ஆண்களே! உங்களில் போதுமான செல்வத்தைப் பெறாததால் சுதந்திரமான பெண்களை மணமுடிக்க சக்திபெறாதவர் மற்றவர்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண்களில் இறைநம்பிக்கையுடையோராக நீங்கள் கருதுவோரை மணமுடித்துக் கொள்ளலாம். உங்களின் ஈமானின் உண்மை நிலையையும் உங்கள் நிலமைகளின் உள்ரங்கங்களையும் அல்லாஹ்வே நன்கறிந்தவன். நீங்களும் அவர்களும் மார்க்க அடிப்படையிலும் மனிதர்கள் என்ற அடிப்படையிலும் சமமானவர்களே. எனவே அவர்களைத் திருமணம் செய்வதை வெறுப்பாகக் கருத வேண்டியதில்லை. அவர்களுடைய உரிமையாளர்களின் அனுமதியோடு, அவர்களுக்கு அளிக்க வேண்டிய மணக்கொடையை குறைவின்றியும் தாமதப்படுத்தாமலும் அளித்து மணந்துகொள்ளுங்கள். அந்த அடிமைப் பெண்கள் வெளிப்படையாக விபச்சாரத்தில் ஈடுபடாத, மறைமுகமாக விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கள்ளக்காதலர்களை ஏற்படுத்தாத கற்பொழுக்கமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் திருமணமானபிறகு விபச்சாரத்தில் ஈடுபட்டால் சுதந்திரமான பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதியான ஐம்பது கசையடிகள் அடிக்கப்பட வேண்டும். அவர்கள் திருமணம் செய்த சுதந்திரமான பெண்களைப் போன்று கல்லெறிந்து கொல்லப்பட மாட்டார்கள். நம்பிக்கைகொண்ட அடிமைப்பெண்களை மணந்துகொள்ளலாம் என்ற அனுமதி தாம் விபச்சாரத்தில் விழுந்துவிடுவோம் என்ற அச்சத்துடன் சுதந்திரப் பெண்களைத் திருமணம் செய்வதற்கு வசதியற்றவர்களுக்கு மாத்திரமே. அடிமைப்பெண்களை மணமுடித்து அடிமைக் குழந்தைகளைப் பெறாதிருக்கும் பொருட்டு அவர்களை மணமுடிக்காமல் பொறுமையாக இருப்பதே உங்களுக்குச் சிறந்ததாகும். தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். உங்களில் சுதந்திரமான பெண்களை மணக்க இயலாதவர்களுக்கு அடிமைப்பெண்களை மணக்க அனுமதித்ததும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.
Las Exégesis Árabes:
یُرِیْدُ اللّٰهُ لِیُبَیِّنَ لَكُمْ وَیَهْدِیَكُمْ سُنَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ وَیَتُوْبَ عَلَیْكُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
4.26. அல்லாஹ் இந்த சட்டங்களை விதிப்பதன் மூலம் அவன் தன் மார்க்கத்தின் வரையறைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்கு நலன்பயப்பவற்றையும் தெளிவுபடுத்த விரும்புகிறான்.மேலும் நீங்கள் முன்சென்ற தூதர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, அனுமதித்தல் தடைசெய்தல் என்பவற்றில் அவர்களது வழிமுறைகள், அவர்களது நற்பண்புகள், அவர்களது நன்நடத்தைகள் என்பவற்றின் பக்கம் உங்களுக்கு வழிகாட்ட விரும்புகிறான். நீங்கள் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படாமல் அவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அவன் விரும்புகிறான். அடியார்களுக்கு நன்மைதரும் விஷயங்களை அவன் நன்கறிந்தவன். அதற்கேற்பவே அவன் சட்டங்களை வழங்குகிறான். சட்டமியற்றுவதிலும் அடியார்களின் விவகாரங்களை நிர்வகிப்பதிலும் அவன் ஞானம்மிக்கவன்.
Las Exégesis Árabes:
Beneficios de los versículos de esta página:
• حُرمة نكاح المتزوجات: حرائر أو إماء حتى تنقضي عدتهن أيًّا كان سبب العدة.
1. சுதந்திரமானவளோ அடிமையோ யாராக இருந்தாலும் திருமண உறவில் இருக்கும் போது அவர்களை மணமுடிக்கக் கூடாது. என்ன காரணத்திற்காக இத்தாவில் இருந்தாலும் அவர்களின் "இத்தா" காலம் நிறைவடையும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

• أن مهر المرأة يتعين بعد الدخول بها، وجواز أن تحط بعض مهرها إذا كان بطيب نفس منها.
2. உடலுறவுகொண்ட பிறகே மணக்கொடை உறுதியாகிறது. மனைவி மனமுவந்து அனுமதியளித்தால் மணக்கொடையை குறைத்துக் கொள்ளலாம்.

• جواز نكاح الإماء المؤمنات عند عدم القدرة على نكاح الحرائر؛ إذا خاف على نفسه الوقوع في الزنى.
3. சுதந்திரமான பெண்களை மணமுடித்துக்கொள்ள இயலாதவர் விபச்சாரத்தில் விழுந்துவிடுவோமோ என்று அஞ்சினால் நம்பிக்கைகொண்ட அடிமைப்பெண்களை மணமுடித்துக் கொள்ளலாம்.

• من مقاصد الشريعة بيان الهدى والضلال، وإرشاد الناس إلى سنن الهدى التي تردُّهم إلى الله تعالى.
4. நேர்வழியையும் வழிகேட்டையும் தெளிவுபடுத்துவது, அல்லாஹ்வின் பக்கம் கொண்டுசெல்லும் நேர்வழியின் வழிமுறைகளைத் தெளிவுபடுத்துவது இஸ்லாமிய சட்டதிட்டங்களின் இலக்குகளில் ஒன்றாகும்.

 
Traducción de significados Capítulo: Al-Nisaa
Índice de Capítulos Número de página
 
Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. - Índice de traducciones

Emitido por el Centro Tafsir de Estudios Coránicos.

Cerrar