Check out the new design

Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. * - Índice de traducciones


Traducción de significados Capítulo: Al-Nisaa   Versículo:
وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ— وَّاٰتَیْتُمْ اِحْدٰىهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَیْـًٔا ؕ— اَتَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟
4.20. நீங்கள் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணக்க விரும்புவது உங்கள்மீது குற்றமாகாது. ஆனால் நீங்கள் அவர்களுக்கு மணக்கொடையாக பெருஞ்செல்வத்தைக் கொடுத்திருந்தாலும் எதையும் அவர்களிடமிருந்து திரும்பப் பெறக்கூடாது. நீங்கள் கொடுத்ததை வாங்குவது பகிரங்கமான இட்டுக்கட்டாகவும் தெளிவான பாவமாகவும் கருதப்படுகிறது.
Las Exégesis Árabes:
وَكَیْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰی بَعْضُكُمْ اِلٰی بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟
4.21. நீங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து இன்பம் அனுபவித்து ஒருவர் மற்றவரின் இரகசியங்களை அறிந்தபிறகு எவ்வாறு உங்களால் அளித்த மணக்கொடையை திரும்பப் பெற முடியும்? இதன்பிறகும் நீங்கள் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை விரும்புவது பாவமான, அவலட்சனமான காரியமாகும். உங்களிடம் அவர்கள் மிக உறுதியான ஒப்பந்தத்தையும் எடுத்துள்ளார்கள். அது அல்லாஹ்வுடைய மார்க்கத்தின்படி அவர்களை ஆகுமாக்கிக் கொள்வதாகும்.
Las Exégesis Árabes:
وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ— اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ— وَسَآءَ سَبِیْلًا ۟۠
4.22. உங்களின் தந்தையர் மணமுடித்துக்கொண்ட பெண்களை மணமுடித்துக் கொள்ளாதீர்கள். அது தடுக்கப்பட்டதாகும். ஆயினும் அறியாமைக் காலத்தில் நடந்துமுடிந்தவற்றைத்தவிர. அதற்காக நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் அவ்வாறு மணமுடித்துக் கொள்வது மானக்கேடான காரியமாகவும் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கக்கூடியதாகவும் தீய வழியாகவும் இருக்கின்றது.
Las Exégesis Árabes:
حُرِّمَتْ عَلَیْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِیْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَاُمَّهٰتُ نِسَآىِٕكُمْ وَرَبَآىِٕبُكُمُ الّٰتِیْ فِیْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآىِٕكُمُ الّٰتِیْ دَخَلْتُمْ بِهِنَّ ؗ— فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ ؗ— وَحَلَآىِٕلُ اَبْنَآىِٕكُمُ الَّذِیْنَ مِنْ اَصْلَابِكُمْ ۙ— وَاَنْ تَجْمَعُوْا بَیْنَ الْاُخْتَیْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۙ
4.23. உங்களின் தாய், அதற்கு மேலுள்ள தாயின்தாய், அவளது தந்தைவழி அல்லது தாய்வழிப் பாட்டி, உங்களின் மகள்கள், அதற்குக் கீழுள்ள பேத்திகள், மகனின் பெண்பிள்ளைகள் அதற்குக் கீழுள்ளவர்கள், கூடப்பிறந்த அல்லது தாய் அல்லது தந்தைவழிச் சகோதரிகள், உங்கள் தந்தையின் சகோதரிகள், உங்கள் பெற்றோரின் தந்தைவழிச் சகோதரிகள், தாயின் சகோதரிகள், உங்கள் பெற்றோரின் தாய்வழிச் சகோதரிகள், சகோதர சகோதரிகளின் பெண்பிள்ளைகளும் அவர்களது பிள்ளைகள், உங்களுக்குப் பாலூட்டிய செவிலித்தாய்மார்கள், உங்களின் பால்குடிச் சகோதரிகள், நீங்கள் உறவுகொண்ட அல்லது உறவுகொள்ளாத உங்கள் மனைவியரின் தாய்மார்கள், உங்கள் மனைவியரின் முந்தைய கணவனுக்குப் பிறந்து பெரும்பாலும் உங்களுடன் வீட்டில் வளரும் பிள்ளைகள், உங்கள் மகன்களின் மனைவியர் ஆகியோரை மணமுடித்துக் கொள்வது உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் மனைவியரின் முந்தைய கணவனுக்குப் பிறந்த மகள்கள் உங்கள் வீட்டில் வளரவில்லையென்றாலும் இதுதான் சட்டமாகும். ஆனால் நீங்கள் அவர்களின் தாயான உங்கள் மனைவியோடு இன்னும் உடலுறவு கொள்ளவில்லையெனில் அந்தப் பெண்களை மணமுடித்துக் கொள்ளலாம். உங்கள் சொந்த மகன்களின் மனைவிமார்களை அவர்கள் உடலுறவில் ஈடுபடாவிட்டாலும் திருமணம் செய்வது உங்களுக்குத் தடையாகும். உங்களது பால்குடி மகன்களுக்கும் இதே சட்டமாகும். இரண்டு சகோதரிகளை சேர்த்து மணமுடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. பால்குடி சகோதரிகளுக்கும் இதே சட்டம்தான். அறியாமைக் காலத்தில் நடந்து முடிந்த இது போன்றவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். அதேபோல் ஒரு பெண்ணையும் அவளது பெற்றோரின் சகோதரிகளில் ஒருவரையும் ஏககாலத்தில் மனைவியாக வைத்திருப்பது நபிவழியின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது,
Las Exégesis Árabes:
Beneficios de los versículos de esta página:
• إذا دخل الرجل بامرأته فقد ثبت مهرها، ولا يجوز له التعدي عليه أو الطمع فيه، حتى لو أراد فراقها وطلاقها.
1. ஒருவன் தன் மனைவியுன் உடலுறவு கொண்டுவிட்டால் அவன் மீதுள்ள மணக்கொடை உறுதியாகிவிடுகிறது. எனவே அந்த விஷயத்தில் வரம்புமீறவோ பேராசைகொள்ளவோ கூடாது. அவளை அவன் பிரிந்து விவாகரத்து செய்ய நினைத்தாலும் சரியே.

• حرم الله تعالى نكاح زوجات الآباء؛ لأنه فاحشة تمقتها العقول الصحيحة والفطر السليمة.
2. தந்தையரின் மனைவியரை மணமுடித்துக்கொள்வதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஏனெனில் இது ஆரோக்கியமான மனித அறிவு வெறுக்கக்கூடிய அருவருப்பான காரியமாகும்.

• بين الله تعالى بيانًا مفصلًا من يحل نكاحه من النساء ومن يحرم، سواء أكان بسبب النسب أو المصاهرة أو الرضاع؛ تعظيمًا لشأن الأعراض، وصيانة لها من الاعتداء.
3. திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட பெண்கள் வம்சம் அல்லது திருமணம் அல்லது பால்குடி போன்ற உறவுகளினால் திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட பெண்கள் யார் என்பதை தெள்ளத்தெளிவாக அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான். மானத்தின் மகிமையைப் பேணி அத்துமீறலிலிருந்து பாதுகாக்கவுமே இவ்வாறு தௌிவுபடுத்தியுள்ளான்.

 
Traducción de significados Capítulo: Al-Nisaa
Índice de Capítulos Número de página
 
Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán. - Índice de traducciones

Emitido por el Centro Tafsir de Estudios Coránicos.

Cerrar