Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Anfāl   Verse:
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ یَكُ مُغَیِّرًا نِّعْمَةً اَنْعَمَهَا عَلٰی قَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ۙ— وَاَنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
8.53. கடுமையான இந்த வேதனைக்குக் காரணம் இதுதான்: இறைநம்பிக்கை, நேர்வழியில் நடத்தல், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தல் என்ற நல்ல நிலையிலிருந்து, நிராகரிப்பு, பாவங்கள் மற்றும் நன்றி மறத்தல் என்ற தீய நிலைக்கு தம்மைத் தாமே மாற்றும் வரை அல்லாஹ் ஒரு சமூகத்திற்கு அளித்த அருட்கொடைகளை அவர்களிடமிருந்து பிடுங்க மாட்டான். தன் அடியார்கள் பேசுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களைக் குறித்து அவன் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
Arabic Tafsirs:
كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ— وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— كَذَّبُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ ۚ— وَكُلٌّ كَانُوْا ظٰلِمِیْنَ ۟
8.54. இந்த நிராகரிப்பாளர்களின் நிலைமை இவர்களுக்கு முன்னர் நிராகரித்த பிர்அவ்னின் சமூகம் மற்றும் அவர்களுக்கு முந்தைய நிராகரித்த சமூகங்களை ஒத்திருக்கின்றது. அவர்கள் தங்கள் இறைவனின் சான்றுகளை நிராகரித்தார்கள். அவர்கள் செய்த பாவங்களினால் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிர்அவ்னின் சமூகத்தை அவன் கடலில் மூழ்கடித்து அழித்தான். பிர்அவ்னின் சமூகமும் அவர்களுக்கு முந்தைய சமூகங்களும் அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்களாக, அவனுக்கு மற்றவர்களை இணையாக்கக்கூடியவர்களாக இருந்ததனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களை அவனுடைய வேதனைக்குத் தகுதியாக்கிக் கொண்டார்கள். எனவேதான் அவர்கள் மீது தண்டனையை இறக்கினான்.
Arabic Tafsirs:
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الَّذِیْنَ كَفَرُوْا فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۖۚ
8.55. பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லக் கூடியவைகளில் மிகவும் கெட்டவை அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களாவர். சான்றுகள் அனைத்தும் அவர்களிடம் வந்தாலும் நிராகரிப்பில் நிலைத்திருப்பதனால் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அவர்களிடமுள்ள பகுத்தறிவு, செவிப்புலன், பார்வை ஆகிய நேர்வழிக்கான சாதனங்கள் செயலிழந்துவிட்டன.
Arabic Tafsirs:
اَلَّذِیْنَ عٰهَدْتَّ مِنْهُمْ ثُمَّ یَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِیْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا یَتَّقُوْنَ ۟
8.56. தூதரே! -பனூ குரைழா போன்ற- நீர் அவர்களுடன் ஒப்பந்தம் செய்த பின்னர் அல்லாஹ்வை அஞ்சாது ஒவ்வொரு முறையும் அதனை முறித்துவிடுவோர் தங்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதுமில்லை. தம்மீது எடுக்கப்பட்ட உறுதிமொழிகளைக் கடைபிடிப்பதும் இல்லை.
Arabic Tafsirs:
فَاِمَّا تَثْقَفَنَّهُمْ فِی الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
8.57. -தூதரே!- ஒப்பந்தங்களை முறிக்கும் இவர்களை போரில் நீர் சந்தித்தால் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் பொருட்டு அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் கடும் தண்டனையை அளிப்பீராக. இதனால் அவர்கள் உம்முடன் போர் புரிவதற்கும் உமக்கெதிராக உமது எதிரிகளுக்கு உதவி புரிவதற்கும் அஞ்சுவார்கள்.
Arabic Tafsirs:
وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِیَانَةً فَانْۢبِذْ اِلَیْهِمْ عَلٰی سَوَآءٍ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْخَآىِٕنِیْنَ ۟۠
8.58. -தூதரே!- உமக்கு விளங்கும் ஏதாவது அடையாளத்தினால் நீர் ஒப்பந்தம் செய்த ஒரு சமூகம் மோசடியில் ஈடுபட்டு ஒப்பந்தத்தை முறித்துவிடும் என்று நீர் அஞ்சினால் அவர்களின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து அவர்களுக்கு அறிவித்துவிடுவீராக. அப்போதுதான் ஒப்பந்தம் முறிந்த தகவல் இருசாராரிடமும் சமமாகச் சென்றடையும். அவர்களிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர்களைத் தாக்கிவிடாதீர். ஏனெனில் அவர்களிடம் தெரிவிப்பதற்கு முன்பே அவர்களைத் தாக்குவது துரோகமாகும். துரோகமிழைப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை அவன் வெறுக்கிறான். எனவே துரோகமிழைப்பதை விட்டும் நீரும் எச்சரிக்கையாக இருப்பீராக.
Arabic Tafsirs:
وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَبَقُوْا ؕ— اِنَّهُمْ لَا یُعْجِزُوْنَ ۟
8.59. நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிவிட்டதாக எண்ண வேண்டாம். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. மாறாக அது அவர்களை அடைந்தே தீரும்.
Arabic Tafsirs:
وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَیْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِیْنَ مِنْ دُوْنِهِمْ ۚ— لَا تَعْلَمُوْنَهُمْ ۚ— اَللّٰهُ یَعْلَمُهُمْ ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فِیْ سَبِیْلِ اللّٰهِ یُوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
8.60. -நம்பிக்கையாளர்களே!- ஈட்டி எறிதல் போன்ற உங்களால் ஆள் மற்றும் ஆயுத பலத்தைத் தயார் செய்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் பாதையில் தடுத்துவைக்கப்பட்ட குதிரைகளை தயாராக வைத்திருங்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும் நீங்கள் காலச்சக்கரத்தின் கேட்டில் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிராகரிப்பாளர்களான உங்களின் எதிரிகளையும் இவர்கள் அல்லாத வேறு மக்களையும் நீங்கள் அச்சமுறச் செய்யலாம். நீங்கள் அவர்களையும் அவர்கள் மறைத்து வைத்திருக்கும் பகைமையையும் அறிய மாட்டீர்கள். அல்லாஹ்வே அவர்களையும் அவர்கள் உள்ளத்தில் மறைத்துவைத்திருக்கும் பகைமையையும் அறிவான். நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் குறைவாகவோ அதிகமாகவோ எதைச் செலவு செய்தாலும் இவ்வுலகில் அல்லாஹ் அதனை உங்களுக்கு வழங்குவான். மறுமையில் அதற்கான வெகுமதியை குறைவின்றி நிறைவாக வழங்குவான். அவனுடைய பாதையில் செலவு செய்வதன் பக்கம் விரையுங்கள்.
Arabic Tafsirs:
وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
8.61. -தூதரே!- அவர்கள் போரை விட்டு விட்டு சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால் நீரும் சமாதானத்தின் பக்கம் சாய்வீராக. அவர்களுடன் ஒப்பந்தம் செய்வீராக. அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைப்பீராக. அவன் உம்மை ஒருபோதும் கைவிட மாட்டான். நிச்சயமாக அவன் அவர்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• من فوائد العقوبات والحدود المرتبة على المعاصي أنها سبب لازدجار من لم يعمل المعاصي، كما أنها زجر لمن عملها ألا يعاودها.
1. பாவங்களுக்கான நிர்ணயம் செய்யப்பட்ட தண்டனைகளால் ஏற்படும் நன்மைகளில் சில: பாவங்கள் புரியாதவர்கள் பாவம் செய்யாமல் தவிர்ந்து கொள்வார்கள். பாவமிழைத்தவர்கள் மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் தடுக்கப்படுவார்கள்.

• من أخلاق المؤمنين الوفاء بالعهد مع المعاهدين، إلا إن وُجِدت منهم الخيانة المحققة.
2. ஒப்பந்தம் செய்தவர்களோடு ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவது நம்பிக்கையாளர்களின் பண்பாகும். ஒப்பந்தம் செய்தோர் துரோகமிழைத்தது நிரூபிக்கப்பட்டாலே தவிர.

• يجب على المسلمين الاستعداد بكل ما يحقق الإرهاب للعدو من أصناف الأسلحة والرأي والسياسة.
3. எதிரிகளை அச்சுறுத்தும் அனைத்துவிதமான ஆயுதங்கள், ஆலோசனைகள் அரசியல் செயற்பாடுகள் போன்றவற்றைத் தயார்படுத்திக்கொள்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

• جواز السلم مع العدو إذا كان فيه مصلحة للمسلمين.
4. முஸ்லிம்களுக்கு நன்மை இருக்கும் பட்சத்தில் எதிரிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.

 
Translation of the Meanings Surah: Al-Anfāl
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close