Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Anfāl   Verse:
وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِیْحُكُمْ وَاصْبِرُوْا ؕ— اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟ۚ
8.46. உங்களது சொல்லிலும் செயலிலும், எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். கருத்துவேறுபட்டு விடாதீர்கள். அது உங்கள் பலவீனத்திற்கும் கோழைத்தனத்துக்கும் பலத்தை இழப்பதற்கும் காரணமாகும். எதிரிகளைச் சந்திக்கும் போது பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் உதவி மற்றும் ஆதரவளித்தல் மூலம் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். யாருடன் அல்லாஹ் இருக்கின்றானோ எவ்வித சந்தேகமுமின்றி அவனே வெற்றியாளன்.
Arabic Tafsirs:
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟
8.47. மக்காவிலிருந்து பெருமைக்காகவும் மக்களிடம் காட்டுவதற்காவும் புறப்பட்ட இணைவைப்பாளர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு மக்களைத் தடுக்கிறார்கள். அதில் நுழைவதை விட்டும் அவர்களைத் தடுக்கின்றனர். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் சூழ்ந்தவனாக இருக்கின்றான். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Arabic Tafsirs:
وَاِذْ زَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْیَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّیْ جَارٌ لَّكُمْ ۚ— فَلَمَّا تَرَآءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰی عَقِبَیْهِ وَقَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكُمْ اِنِّیْۤ اَرٰی مَا لَا تَرَوْنَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ ؕ— وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟۠
8.48. -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த பின்வரும் அருட்கொடைகளை நினைவுகூருங்கள்: “இணைவைப்பாளர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். முஸ்லிம்களுக்கு எதிராக போரிடுமாறு அவர்களை ஊக்கப்படுத்தினான். அவர்களிடம் கூறினான்: “இன்று உங்களை மிகைப்பவர்கள் யாரும் இல்லை. நான் உங்களுக்கு உதவிபுரியக் கூடியவன். உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடியவன்.” நம்பிக்கையாளர்களுடன் உதவிபுரியும் வானவர்களும், இணைவைப்பாளர்களுடன் கைவிடும் ஷைத்தானும் சேர்ந்து கொண்டு இரு அணிகளும் சந்தித்த போது ஷைத்தான் பின்வாங்கி ஓடிவிட்டான். அவன் இணைவைப்பாளர்களிடம் கூறினான்: “உங்களைவிட்டும் நான் நீங்கி விட்டேன். நம்பிக்கையாளர்களுக்கு உதவிபுரிவதற்காக வந்த வானவர்களை நான் காண்கிறேன். அல்லாஹ் என்னை அழித்து விடுவான் என்று நான் அஞ்சுகிறேன். அவன் தண்டிப்பதில் கடுமையானவன். அவனுடைய தண்டனையை யாராலும் தாங்க முடியாது.”
Arabic Tafsirs:
اِذْ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰۤؤُلَآءِ دِیْنُهُمْ ؕ— وَمَنْ یَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
8.49. நயவஞ்சகர்களும் பலவீனமான நம்பிக்கையாளர்களும் பின்வருமாறு கூறியதை நினைவுகூருங்கள்: “இந்த முஸ்லிம்களை அவர்களின் மார்க்கம் ஏமாற்றி விட்டது. ஆள் மற்றும் ஆயுத பலத்தில் அவர்கள் குறைவாகவும் அவர்களது எதிரிகள் அதிகமாகவும் இருந்தாலும் பலம் குன்றிய அவர்களே வெற்றிபெறுவர் என அவர்களுக்கு வாக்களிக்கின்றது. ” அல்லாஹ்வை மட்டுமே சார்ந்து, அவன் வாக்களித்த வெற்றியின் மீது நம்பிக்கைகொண்டோருக்கு அல்லாஹ் உதவி செய்வான், எவ்வளவு பலவீனம் இருந்தாலும் அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டான் என்பதை இவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தான் அமைத்த விதிகளில், சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.
Arabic Tafsirs:
وَلَوْ تَرٰۤی اِذْ یَتَوَفَّی الَّذِیْنَ كَفَرُوا الْمَلٰٓىِٕكَةُ یَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ۚ— وَذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟
8.50. -தூதரே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது நீர் அவர்களைக் காண வேண்டுமே! அவர்கள் முன்னோக்கினால் அவர்களின் முகங்களில் அடித்தவாறு பின்வாங்கி ஓடினால் முதுகுகளில் அடித்தவாறு வானவர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள். அவர்களிடம் கூறுவார்கள்: -“நிராகரிப்பாளர்களே!- எரிக்கக்கூடிய வேதனையைச் சுவையுங்கள்.” நீர் அதனைக் கண்டால் பெரும் விஷயத்தைக் கண்டவராவீர்.
Arabic Tafsirs:
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَیْدِیْكُمْ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟ۙ
8.51. -நிராகரிப்பாளர்களே!- உங்களது உயிர்களைக் கைப்பற்றும் போது அளிக்கப்படும் வேதனைமிக்க இந்த தண்டனையும் மண்ணறையிலும் மறுமையிலும் அளிக்கப்படும் பொசுக்கக்கூடிய இந்த வேதனையும் இவ்வுலகில் உங்களின் கைகள் சம்பாதித்த தீவினைகளின் காரணமாக ஏற்படக்கூடியதாகும். அல்லாஹ் மனிதர்கள் மீது அநீதி இழைப்பதில்லை. அவன் அவர்களிடையே நீதியுடன் தீர்ப்பளிக்கிறான். அவனே நீதிமிக்க தீர்ப்பாளன்.
Arabic Tafsirs:
كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ— وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ— اِنَّ اللّٰهَ قَوِیٌّ شَدِیْدُ الْعِقَابِ ۟
8.52. இந்நிராகரிப்பாளர்களுக்கு இறங்கிய இவ்வேதனை அவர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. மாறாக எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் இருந்த நிராகரிப்பாளர்களின் மீதும் நடைமுறைப்படுத்திய வழிமுறையே இதுவாகும். பிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த சமூகங்கள் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்தபோது அவர்களையும் அது பீடித்தது. அவர்களின் பாவங்களின் காரணமாக அவன் அவர்களை கண்ணியமான ஆற்றல் உடைய ஒருவனின் பிடியாகப் பிடித்தான். அவர்கள் மீது தன் தண்டனையை இறக்கினான். நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன். யாராலும் அவனை அடக்கவோ மிகைக்கவோ முடியாது. தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• البَطَر مرض خطير ينْخَرُ في تكوين شخصية الإنسان، ويُعَجِّل في تدمير كيان صاحبه.
1. கர்வம் மனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் அரிப்பை உண்டாக்கும் ஆபத்தான நோயாகும். அது அவனது அழிவைத் துரிதப்படுத்துகிறது.

• الصبر يعين على تحمل الشدائد والمصاعب، وللصبر منفعة إلهية، وهي إعانة الله لمن صبر امتثالًا لأمره، وهذا مشاهد في تصرفات الحياة.
2. பொறுமையே துன்பங்களையும் கஷ்டங்களை தாங்கிக் கொள்வதற்கு உதவிபுரிகிறது. பொறுமைக்கு ஆன்மீகப் பலனும் உண்டு. அல்லாஹ்வின் ஏவலுக்குக் கட்டுப்படும் விதமாக பொறுமை காத்தோருக்கு அல்லாஹ் உதவி புரிவதே அப்பயனாகும். வாழ்வின் பல்வேறு நடவடிக்கைகளிலும் இதை உணரமுடியும்.

• التنازع والاختلاف من أسباب انقسام الأمة، وإنذار بالهزيمة والتراجع، وذهاب القوة والنصر والدولة.
3. முரண்பாடுகளும், கருத்து வேற்றுமைகளும் சமூகம் பிளவுபடுவதற்கான காரணிகளில் ஒன்றாகும். அது சமூகம் தோல்வியுற்று பின்வாங்கிவிடும் என்பதற்கும், பலத்தையும் வெற்றியையும் நாட்டையும் இழக்க வேண்டி வரும் என்பதற்குமான எச்சரிக்கையாகும்.

• الإيمان يوجب لصاحبه الإقدام على الأمور الهائلة التي لا يُقْدِم عليها الجيوش العظام.
4. இறை நம்பிக்கை, பெரும் படைகள் கூட செய்யத் துணியாத பாரிய விடயங்களைச் செய்வதற்கான துணிவை நம்பிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

 
Translation of the Meanings Surah: Al-Anfāl
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close