Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-A‘rāf   Verse:
وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِی الْاَرْضِ تَتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَنْحِتُوْنَ الْجِبَالَ بُیُوْتًا ۚ— فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
7.74. ஆத் சமூகம் பொய் கூறி, நிராகரிப்பில் நிலைத்திருந்ததால் அவர்களை அழித்த பிறகு அவர்களுக்குப் பின் நீங்கள் தோன்றியுள்ளீர்கள். உங்களது இடத்தில் உங்களை வாழவைத்து, அதில் நீங்கள் அனுபவித்துக்கொண்டு, உங்களது தேவைகளை அடைந்துகொள்வோராக உங்களை ஆக்கி உங்களுக்கு அல்லாஹ் புரிந்த அருளை நினைத்துப்பாருங்கள். பூமியின் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள். மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். பூமியில் குழப்பம் விளைவித்துத் திரிவதை விட்டுவிடுங்கள். அது இறைவனை நிராகரிப்பதையும் பாவங்கள் புரிவதையும் விட்டுவிடுவதாகும்.
Arabic Tafsirs:
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖ ؕ— قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
7.75. அவரது சமூகத்தில் கர்வம் கொண்ட தலைவர்களும் பெரியவர்களும் தாங்கள் பலவீனர்களாகக் கருதிய நம்பிக்கையாளர்களிடம் கேட்டார்கள்: “நம்பிக்கையாளர்களே! ஸாலிஹ் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை உண்மையாகவே நீங்கள் அறிவீர்களா?” பலவீனமாக கருதப்பட்ட நம்பிக்கையாளர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஸாலிஹ் எதைக் கொண்டு எங்களிடம் அனுப்பப்பட்டாரோ அதை நாங்கள்உண்மைப்படுத்துகிறோம், ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு நாங்கள் அடிபணிகிறோம். அதன் சட்டங்களின்படி செயல்படுவோம்.”
Arabic Tafsirs:
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا بِالَّذِیْۤ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
7.76. அவரது சமூகத்தில் கர்வம் கொண்டவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஏற்றுக் கொள்வதை நாங்கள் நிராகரிக்கிறோம். ஒருபோதும் அதன்மீது நம்பிக்கை கொள்ளவோ அதன்படி செயல்படவோ மாட்டோம்.”
Arabic Tafsirs:
فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَقَالُوْا یٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
7.77. எந்த ஒட்டகத்துக்கு அவர்கள் எத்தீங்கும் இழைத்துவிடக் கூடாது என அவர் அவர்களைத் தடைசெய்தாரோ அதனை, அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் கர்வம் கொண்டு அறுத்து விட்டார்கள். பரிகாசமாகவும் ஸாலிஹ் எச்சரிக்கும் விஷயம் சாத்தியமற்றது என்று கருதியும் அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! நீர் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்களில் ஒருவராக இருந்தால் நீர் எச்சரித்த வேதனை மிக்க தண்டனையை எங்களிடம் கொண்டுவாரும்.”
Arabic Tafsirs:
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟
7.78. நிராகரிப்பாளர்கள் அவசரமாக விரும்பிய வேதனை அவர்களிடம் வந்தது. கடுமையான பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. பூமியில் முகங்குப்புற வீழ்ந்து கிடப்பவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்களில் எவரும் அதிலிருந்து தப்ப முடியவில்லை.
Arabic Tafsirs:
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ وَلٰكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِیْنَ ۟
7.79. தனது சமூகம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நம்பிக்கையிழந்த பிறகு ஸாலிஹ் அவர்களைப் புறக்கணித்துவிட்டார். அவர்களிடம் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டதை நான் எடுத்துரைத்துவிட்டேன். உங்களுக்கு அச்சமூட்டி, ஆர்வமூட்டி அறிவுரை கூறிவிட்டேன். ஆயினும் நன்மையின்பால் ஆர்வமூட்டி தீமையை விட்டுத் தடுப்பதில் ஆர்வமுள்ள நலம் விரும்பிகளை நீங்கள் விரும்புவதில்லை.”
Arabic Tafsirs:
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
7.80. லூத் தனது சமூகத்தைக் கண்டித்தவராகக் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக: “ஓரினச் சேர்க்கை என்னும் அருவருப்பான காரியத்தில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா? நீங்கள் புதிதாகஉருவாக்கியுள்ள இந்தக் காரியத்தில் உங்களுக்கு முன் எவரும் ஈடுபடவில்லை.
Arabic Tafsirs:
اِنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ— بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ۟
7.81. உங்களின் இச்சையைத் தணித்துக் கொள்வதற்காக உங்களுக்காக படைக்கப்பட்ட பெண்களை விடுத்து ஆண்களிடம் செல்கிறீர்கள். அறிவுக்கும் இயல்புக்கும் மார்க்கத்திற்கும் மாற்றமான காரியத்தில் ஈடுபடுகிறீர்கள். உங்களது இச்செயலில் பகுத்தறிவு, கேட்டறிவு, மனித இயல்பு ஆகிய எதனையும் பின்பற்றவில்லை. மனித வரம்பை மீறி ஆரோக்கியமான சிந்தனை, நல் இயல்பை விட்டும் நெறிபிறழ்ந்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறிவிட்டீர்கள்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• الاستكبار يتولد غالبًا من كثرة المال والجاه، وقلة المال والجاه تحمل على الإيمان والتصديق والانقياد غالبًا.
1. கர்வம் பெரும்பாலும் பணம் பதவி அதிகரிப்பதனால் ஏற்படுகிறது. பெரும்பாலும் குறைந்த செல்வமும் பதவியும் ஈமான் கொள்வதற்கும்,நம்பி அடிபணிவதற்கும் தூண்டுகின்றன.

• جواز البناء الرفيع كالقصور ونحوها؛ لأن من آثار النعمة: البناء الحسن مع شكر المنعم.
2. மாளிகைகள் போன்ற உயர்கட்டிடங்கள் கட்டலாம். ஏனெனில் அருட்கொடையாளனுக்கு செலுத்தப்படும் நன்றியுடன் கட்டப்படும் அழகிய கட்டடம் அருட்கொடையின் வெளிப்பாடாகும்.

• الغالب في دعوة الأنبياء أن يبادر الضعفاء والفقراء إلى الإصغاء لكلمة الحق التي جاؤوا بها، وأما السادة والزعماء فيتمردون ويستعلون عليها.
3. பெரும்பாலும் நபிமார்களது அழைப்புப் பணியில் அவர்கள் கொண்டு வந்ந சத்தியத்தை பலவீனர்களும் ஏழைகளுமே விரைந்து ஏற்றுக்கொள்கிறார்கள். தலைவர்களோ கர்வம் கொள்கிறார்கள். நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்கள்.

• قد يعم عذاب الله المجتمع كله إذا كثر فيه الخَبَث، وعُدم فيه الإنكار.
4. ஒரு சமூகத்தில் தீமைகள் பெருகி அது தடுக்கப்படாவிட்டால் சில வேளை முழு சமூகத்தையும் அல்லாஹ்வின் வேதனை தாக்கும்.

 
Translation of the Meanings Surah: Al-A‘rāf
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close