Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Hajj   Verse:
اُذِنَ لِلَّذِیْنَ یُقٰتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْا ؕ— وَاِنَّ اللّٰهَ عَلٰی نَصْرِهِمْ لَقَدِیْرُ ۟ۙ
22.39. தமது எதிரிகளினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதனால் தம்முடன் போர்தொடுக்கும் இணைவைப்பாளர்களுக்கு எதிராக போரிடுவதற்கு அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அனுமதியளித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் போரில்லாமல் நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்ய ஆற்றலுடையவன்தான். ஆயினும் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவதைக்கொண்டு நம்பிக்கையாளர்களைச் சோதிப்பதற்கு அவனது ஞானம் தீர்மானித்துள்ளது.
Arabic Tafsirs:
١لَّذِیْنَ اُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ بِغَیْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ یَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ ؕ— وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِیَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ یُذْكَرُ فِیْهَا اسْمُ اللّٰهِ كَثِیْرًا ؕ— وَلَیَنْصُرَنَّ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ ؕ— اِنَّ اللّٰهَ لَقَوِیٌّ عَزِیْزٌ ۟
22.40. “எங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர எங்களுக்கு வேறு இறைவன் இல்லை” என்று கூறியதற்காகவே அவர்கள் நிராகரிப்பாளர்களால் தங்களின் வீடுகளிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அல்லாஹ் தூதர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் எதிரிகளுக்கு எதிராக போரிடுவதைக் கடமையாக்காவிட்டால் அந்த எதிரிகள் வணக்கஸ்தலங்களின் மீது வரம்புமீறியிருப்பார்கள். துறவிகளின் மடங்களையும் கிருஸ்தவர்களின் தேவாலயங்களையும் யூதர்களின் வழிபாட்டுத்தலங்களையும் முஸ்லிம்கள் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூரும் தொழுகைக்காக தயார் செய்யப்பட்ட அவர்களின் பள்ளிவாயில்களையும் தகர்த்திருப்பார்கள். தன் மார்க்கத்திற்கும் தூதருக்கும் உதவிபுரிபவர்களுக்கு அல்லாஹ் நிச்சயம் உதவிபுரிவான். நிச்சயமாக தன் மார்க்கத்திற்கு உதவிபுரிபவர்களுக்கு உதவிபுரிய அல்லாஹ் சக்தியுடையவன். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது.
Arabic Tafsirs:
اَلَّذِیْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ؕ— وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ۟
22.41. உதவிசெய்வதாக எம்மால் வாக்களிக்கபட்ட இவர்கள்தான் அவர்களின் எதிரிகளுக்கெதிராக நாம் வெற்றியை வழங்கி பூமியில் ஆட்சியதிகாரம் வழங்கினால் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுவார்கள்; தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்குவார்கள்; மார்க்கம் ஏவிய விஷயங்களை ஏவுவார்கள்; தடுத்த தீமையான விஷயங்களைத் தடுப்பார்கள். நன்மையளிப்பது, தண்டனையளிப்பது என எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்விடமே உள்ளது.
Arabic Tafsirs:
وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّثَمُوْدُ ۟ۙ
22.42. -தூதரே!- உம் சமூகம் உம்மை பொய்ப்பித்தால் நீர் பொறுமையாக இருப்பீராக. நீர் ஒன்றும் தனது சமூகத்தால் பொய்ப்பிக்கப்படும் முதலாவது தூதர் அல்ல. உம் சமூகத்திற்கு முன்னர் நூஹின் சமூகம் அவரையும், ஆத் சமூகம் ஹூதை, ஸமூத் சமூகம் சாலிஹை பொய்ப்பித்தனர்.
Arabic Tafsirs:
وَقَوْمُ اِبْرٰهِیْمَ وَقَوْمُ لُوْطٍ ۟ۙ
22.43. இப்ராஹீமின் சமூகம், லூத்தின் சமூகத்தினர் தங்களின் தூதர்களை நிராகரித்துள்ளார்கள்.
Arabic Tafsirs:
وَّاَصْحٰبُ مَدْیَنَ ۚ— وَكُذِّبَ مُوْسٰی فَاَمْلَیْتُ لِلْكٰفِرِیْنَ ثُمَّ اَخَذْتُهُمْ ۚ— فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟
22.44. மத்யன்வாசிகள் ஷுஐபை பொய்பித்தார்கள். ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தவரும் மூஸாவை பொய்பித்தார்கள். நாம் அவர்களை உடனுக்குடன் தண்டிக்காமல் விட்டுப் பிடிப்பதற்காக அவர்களை விட்டு தண்டனையைத் தாமதப்படுத்தினோம். பின்னர் அவர்களை வேதனையால் பிடித்தேன். அவர்களுக்கு எதிராக எனது மறுப்பு எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அவர்களின் நிராகரிப்பினால் அவர்களை நான் அழித்துவிட்டேன்.
Arabic Tafsirs:
فَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا وَهِیَ ظَالِمَةٌ فَهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا ؗ— وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَّقَصْرٍ مَّشِیْدٍ ۟
22.45. -நிராகரிப்பினால் அநியாயம் செய்துகொண்டிருந்த நிலையில்- நாம் பூண்டோடு அழித்த எத்தனையோ ஊர்கள் உள்ளன. அவற்றின் வீடுகள் வசிக்க யாருமின்றி வெற்றிடமாக இடிந்து கிடக்கின்றன. எத்தனையோ கிணறுகள் அதனைப் பயன்படுத்துவோர் அழிக்கப்பட்டதனால் பாழடைந்து இருக்கின்றன. அலங்கரிக்கப்பட்ட எத்தனையோ உயரமான மாளிகைகள்! அவற்றினால் அங்கு வசித்தவர்களை வேதனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.
Arabic Tafsirs:
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ یَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ یَّسْمَعُوْنَ بِهَا ۚ— فَاِنَّهَا لَا تَعْمَی الْاَبْصَارُ وَلٰكِنْ تَعْمَی الْقُلُوْبُ الَّتِیْ فِی الصُّدُوْرِ ۟
22.46. அந்த அழிக்கப்பட்ட ஊர்களின் அடையாளங்களைக் காண்பதற்காக, தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பிக்கும் இவர்கள் பூமியில் பயணம் செய்ய வேண்டாமா? அவ்வாறு செய்தால் தங்களின் அறிவால் சிந்தித்து படிப்பினை பெறலாம். அறிவுரைபெற வேண்டி அவர்களின் சம்பவங்களை ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்க வேண்டாமா? நிச்சயமாக பார்வை குருடாகிப்போவது குருடல்ல. மாறாக அகப்பார்வை குருடாவதே அழிவை ஏற்படுத்தும் குருடாகும். அகப்பார்வையை இழந்தவரால் படிப்பினை பெறவோ, அறிவுரை பெறவோ முடியாது.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• إثبات صفتي القوة والعزة لله.
1. சக்தி, கண்ணியம் ஆகிய இரு பண்புகள் அல்லாஹ்வுக்கு இருப்பதை உறுதிப்படுத்தல்.

• إثبات مشروعية الجهاد؛ للحفاظ على مواطن العبادة.
2. வழிபாட்டுத்தலங்களை பாதுகாப்பதற்காக ஜிஹாது செய்யும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

• إقامة الدين سبب لنصر الله لعبيده المؤمنين.
3. மார்க்கத்தை நிலைநாட்டுவது நம்பிக்கையாளர்களான தனது அடியார்களுக்கு அல்லாஹ் உதவி செய்வதற்குக் காரணமாகும்.

• عمى القلوب مانع من الاعتبار بآيات الله.
4. உள்ளத்தில் உள்ள குருட்டுத் தன்மை அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு படிப்பினை பெறுவதற்குத் தடையாகும்.

 
Translation of the Meanings Surah: Al-Hajj
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close