Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Hajj   Verse:
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّهٗ یُحْیِ الْمَوْتٰی وَاَنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟ۙ
22.6. -உங்களைப் படைத்தல், அதன் கட்டங்கள், உங்களில் பிறப்பவர்களின் நிலமைகள் ஆகிய- நாம் உங்களுக்குக் குறிப்பிட்டவை, உங்களைப் படைத்த அல்லாஹ்வே சந்தேகமற்ற உண்மையாளன், நீங்கள் வணங்கும் உங்கள் சிலைகளல்ல என்பதை நம்பிக்கைகொள்வதற்கும், அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிக்கக்கூடியன், நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன், எதுவும் அவனுக்கு இயலாததல்ல என்பதை நம்பிக்கை கொள்வதற்குமேயாகும்.
Arabic Tafsirs:
وَّاَنَّ السَّاعَةَ اٰتِیَةٌ لَّا رَیْبَ فِیْهَا ۙ— وَاَنَّ اللّٰهَ یَبْعَثُ مَنْ فِی الْقُبُوْرِ ۟
22.7. மறுமை நாள் நிச்சயமாக வந்தே தீரும், அது வந்துவிடுவதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவன் மரணித்தவர்களுக்கு அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக நிச்சயமாக அவர்களை அவர்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து எழுப்பியே தீருவான் என்பதையும் நீங்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
Arabic Tafsirs:
وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّلَا هُدًی وَّلَا كِتٰبٍ مُّنِیْرٍ ۟ۙ
2.8. நிராகரிப்பாளர்களில் சிலர், அல்லாஹ்வின் ஏகத்துவத்தில் தர்க்கம் புரிகின்றனர். ஆனால் அவர்களிடம் சத்தியத்தை அடைந்துகொள்ளும் அறிவும் இல்லை. அதனை அவர்களுக்கு அறிவிக்கும் ஒரு வழிகாட்டியையும் அவர்கள் பின்பற்றவுமில்லை. அதற்கு வழிகாட்டும், அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட ஒளிவீசும் வேதமும் அவர்களிடமில்லை.
Arabic Tafsirs:
ثَانِیَ عِطْفِهٖ لِیُضِلَّ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ— لَهٗ فِی الدُّنْیَا خِزْیٌ وَّنُذِیْقُهٗ یَوْمَ الْقِیٰمَةِ عَذَابَ الْحَرِیْقِ ۟
22.9. அவன் மக்களை நம்பிக்கைகொள்வதை விட்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை விட்டும் தடுப்பதற்காக கர்வத்தினால் தன் கழுத்தை திருப்பிக்கொள்கிறான். இத்தகைய பண்புகளை உடையவனுக்கு இவ்வுலகில் அடையப்போகும் வேதனையால் இழிவுதான் உண்டு. மறுமையில் சுட்டெரிக்கும் நெருப்பின் வேதனையை அவனுக்குச் சுவைக்கச் செய்வோம்.
Arabic Tafsirs:
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ یَدٰكَ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟۠
22.10. அவனிடம் கூறப்படும்: “நீ அனுபவிக்கும் இந்த வேதனை உன்னுடைய நிராகரிப்பு மற்றும் பாவங்களினால் நீ சம்பாதித்ததாகும். எந்தப் பாவமுமின்றி அல்லாஹ் தன் படைப்புகளில் யாரையும் வேதனை செய்யமாட்டான்.”
Arabic Tafsirs:
وَمِنَ النَّاسِ مَنْ یَّعْبُدُ اللّٰهَ عَلٰی حَرْفٍ ۚ— فَاِنْ اَصَابَهٗ خَیْرُ ١طْمَاَنَّ بِهٖ ۚ— وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ ١نْقَلَبَ عَلٰی وَجْهِهٖ ۫ۚ— خَسِرَ الدُّنْیَا وَالْاٰخِرَةَ ؕ— ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِیْنُ ۟
22.11. மக்களில் சிலர் தடுமாற்றமுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சந்தேகத்துடனே அல்லாஹ்வை வணங்குகிறார்கள். ஆரோக்கியம், செல்வம் போன்ற ஏதேனும் நன்மை அவர்களுக்கு ஏற்பட்டால் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையிலும் அவனை வணங்குவதிலும் நிலைத்திருக்கிறார்கள். ஆனால் வறுமை, நோய் போன்ற சோதனைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டால் தங்களின் மார்க்கத்தை துர்ச்சகுனமாகக் கருதி, மதம்மாறி விடுகிறார்கள். அவர்கள் இவ்வுலகையும் இழந்துவிட்டார்கள். ஏனெனில் அவனது நிராகரிப்பு அவனுக்கு உலகில் எழுதப்படாத எவ்வித பாக்கியத்தையும் அதிகரிக்காது. அல்லாஹ்வின் வேதனையைப் பெறுவதன் மூலம் மறுவுலகையும் இழந்துவிட்டார்கள். இதுதான் தெளிவான இழப்பாகும்.
Arabic Tafsirs:
یَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهٗ وَمَا لَا یَنْفَعُهٗ ؕ— ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِیْدُ ۟ۚ
22.12. அவர்கள் அல்லாஹ்வைவிடுத்து சிலைகளை வணங்குகிறார்கள். அவைகளுக்கு மாறுசெய்தால் அவைகளால் அவனுக்கு பாதிப்பையோ அவற்றுக்கு அவன் கட்டுப்பட்டால் அவனுக்குப் பலனையோ அவற்றால் ஏற்படுத்தமுடியாது. எவ்வித பலனையும் தீங்கையும் அளிக்க இயலாத சிலைகளை அழைப்பது சத்தியத்தை விட்டு தூரமாக வழிகெட்டுச் செல்வதாகும்.
Arabic Tafsirs:
یَدْعُوْا لَمَنْ ضَرُّهٗۤ اَقْرَبُ مِنْ نَّفْعِهٖ ؕ— لَبِئْسَ الْمَوْلٰی وَلَبِئْسَ الْعَشِیْرُ ۟
22.13. சிலைகளை வணங்கும் இந்த நிராகரிப்பாளன், பலனை விட அதிக உறுதியான பாதிப்பை ஏற்படுத்துவோரையே அழைக்கின்றான். பலனை விட அதிக பாதிப்பையே ஏற்படுத்தும் அந்த தெய்வங்கள் மோசமானவையாகும்! அவற்றிடம் உதவி தேடுவோருக்கு அது மோசமான உதவியாளனாகும். அதனுடன் சகவாசம் கொள்வோருக்கு அது மோசமான தோழனாகும்!
Arabic Tafsirs:
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ— اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟
22.14. தன்னை நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்யக்கூடியவன். தான் நாடியவர்களுக்குக் கருணை காட்டுவான். தான் நாடியவர்களைத் தண்டிப்பான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.
Arabic Tafsirs:
مَنْ كَانَ یَظُنُّ اَنْ لَّنْ یَّنْصُرَهُ اللّٰهُ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ فَلْیَمْدُدْ بِسَبَبٍ اِلَی السَّمَآءِ ثُمَّ لْیَقْطَعْ فَلْیَنْظُرْ هَلْ یُذْهِبَنَّ كَیْدُهٗ مَا یَغِیْظُ ۟
22.15. நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உதவிசெய்ய மாட்டான் என்று எண்ணுபவர் தன் வீட்டின் கூரையில் ஒரு கயிற்றை நீட்டட்டும். பின்னர் அவர் அதைக்கொண்டு பூமியை விட்டும் தொங்கி அதை தன்னை மாய்த்துக்கொள்ளட்டும். பின்னர் தன் மனதில் தேங்கியிருந்த கோபம் தணிந்துவிடுகிறதா என்று பார்க்கட்டும். பிடிவாதமுடையவன் விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும் அல்லாஹ் தன் தூதருக்கு உதவி செய்யக்கூடியவன்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• أسباب الهداية إما علم يوصل به إلى الحق، أو هادٍ يدلهم إليه، أو كتاب يوثق به يهديهم إليه.
1. நேர்வழியை அடைந்துகொள்வதற்கான காரணிகள்: சத்தியத்தை அடையச்செய்யும் அறிவு அல்லது அதற்கு வழிகாட்டும் வழிகாட்டி, அல்லது அதற்கு வழிகாட்டும் நம்பிக்கைக்குரிய வேதம்.

• الكبر خُلُق يمنع من التوفيق للحق.
2. கர்வம் சத்தியத்தை அடைந்துகொள்வதை விட்டும் தடுக்கும் பண்பாகும்.

• من عدل الله أنه لا يعاقب إلا على ذنب.
3. பாவம் செய்யாமல் நிச்சயமாக அல்லாஹ் யாரையும் தண்டிப்பதில்லை என்பது அவனது நீதியிலுள்ளதாகும்.

• الله ناصرٌ نبيَّه ودينه ولو كره الكافرون.
4. நிராகரிப்பாளர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன் தூதருக்கும் மார்க்கத்துக்கும் உதவி செய்யக்கூடியவன்தான்.

 
Translation of the Meanings Surah: Al-Hajj
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close