Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Verse: (42) Surah: Al-Anbiyā’
قُلْ مَنْ یَّكْلَؤُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِ ؕ— بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ ۟
21.42. -தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “அளவிலாக் கருணையாளன் உங்கள் மீது வேதனையை இறக்கி உங்களை அழிக்க நாடினால் இரவிலும் பகலிலும் உங்களைப் பாதுகாப்பவர் யார்? மாறாக அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரைகளை நினைவுபடுத்துவதையும் அவனின் ஆதாரங்களையும் புறக்கணிக்கிறார்கள். அறியாமையினால் அவர்கள் அவற்றைக்குறித்து எதையும் சிந்திப்பதில்லை.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• بيان كفر من يستهزئ بالرسول، سواء بالقول أو الفعل أو الإشارة.
1. தூதரைப் பரிகாசம் செய்வது நிராகரிப்பாகும். அது சொல்லாகவோ, செயலாகவோ, சைகையாகவோ இருந்தாலும் சரியே.

• من طبع الإنسان الاستعجال، والأناة خلق فاضل.
2. அவசரப்படுவது மனிதனின் இயற்கை தன்மையாகும். நிதானம் சிறந்த பண்பாகும்.

• لا يحفظ من عذاب الله إلا الله.
3. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அல்லாஹ்வைத் தவிர யாராலும் காப்பாற்ற முடியாது.

• مآل الباطل الزوال، ومآل الحق البقاء.
4. அசத்தியத்தின் முடிவு அழிவே. சத்தியத்தின் முடிவு நிலைப்பதே.

 
Translation of the Meanings Verse: (42) Surah: Al-Anbiyā’
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close