Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Anbiyā’   Verse:

அல்அன்பியா

Objectives of the Surah:
إثبات الرسالة وبيان وحدة غاية الأنبياء وعناية الله بهم.
இறைத்தூது உண்டென்பதை நிறுவுதலும் நபிமார்களின் இலக்கையும் அவர்களுக்கான அல்லாஹ்வின் பராமரிப்பையும் தெளிவுபடுத்தல்

اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِیْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ ۟ۚ
21.3. மறுமை நாளில் தமது செயல்களுக்காக விசாரணை நடைபெறுவது மக்களை நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ உலகில் ஈடுபாடுகொண்டதனால் மறுமையைப் புறக்கணித்தவர்களாக அலட்சியத்தில் உள்ளார்கள்.
Arabic Tafsirs:
مَا یَاْتِیْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنْ رَّبِّهِمْ مُّحْدَثٍ اِلَّا اسْتَمَعُوْهُ وَهُمْ یَلْعَبُوْنَ ۟ۙ
21.2. தமது இறைவனிடமிருந்து புதிதாக எந்தவொரு குர்ஆன் வசனம் வந்தாலும் அதனை அவர்கள் பயனற்ற முறையிலேயே செவியேற்கிறார்கள். மாறாக அவர்கள் விளையாட்டாகவும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்தாதவர்களாகவுமே செவியேற்கிறார்கள்.
Arabic Tafsirs:
لَاهِیَةً قُلُوْبُهُمْ ؕ— وَاَسَرُّوا النَّجْوَی ۖۗ— الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ— هَلْ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۚ— اَفَتَاْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟
21.3. அவர்களின் உள்ளங்கள் அதனைவிட்டும் அலட்சியமாக இருக்கும் நிலையிலேயே செவியேற்கிறார்கள். நிராகரித்து அநியாயக்காரர்களான இவர்கள் தங்களிடையே இரகசியமாக, “தன்னைத் தூதர் என்று கூறிக்கொள்ளும் இவர் நிச்சயமாக உங்களைப்போன்ற மனிதர்தானே. உங்களைவிட அவருக்கு எந்த சிறப்பும் இல்லையே. அவர் கொண்டுவந்தது சூனியமாகும். நிச்சயமாக அவர் உங்களைப்போன்ற மனிதர்தான், அவர் கொண்டுவந்தது சூனியம்தான் என்பதை அறிந்துகொண்டே அவரைப் பின்பற்றுகிறீர்களா?” என்று கூறிக்கொள்கிறார்கள்.
Arabic Tafsirs:
قٰلَ رَبِّیْ یَعْلَمُ الْقَوْلَ فِی السَّمَآءِ وَالْاَرْضِ ؗ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
21.4. நபியவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இரகசியமாகக் கூறுவதை என் இறைவன் அறிவான். வானங்களிலும் பூமியிலும் பேசக்கூடியவரிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அனைத்தையும் அவன் அறிவான். அவன் தன் அடியார்கள் பேசக்கூடியதை செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Arabic Tafsirs:
بَلْ قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍ بَلِ افْتَرٰىهُ بَلْ هُوَ شَاعِرٌ ۖۚ— فَلْیَاْتِنَا بِاٰیَةٍ كَمَاۤ اُرْسِلَ الْاَوَّلُوْنَ ۟
21.5. மாறாக முஹம்மது கொண்டுவந்ததைக் குறித்து அவர்கள் தடுமாற்றத்தில் இருந்தார்கள். சில சமயங்களில் கூறினார்கள்: “இவை குழப்பமான கனவுகள். இவற்றிற்கு எந்த விளக்கமும் கூறமுடியாது, என்று.” சில சமயங்களில் கூறினார்கள்: “இல்லை, இதற்கு ஒரு அடிப்படையே இல்லாமல் இதனைப் புனைந்து கூறியுள்ளார், என்று.” சில சமயங்களில் கூறினார்கள்: “இவர் ஒரு கவிஞர், என்று. அவர் தம் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் முந்தைய தூதர்கள் கொண்டு வந்ததைப்போல ஒரு அற்புதத்தைக் கொண்டு வரட்டும். முந்தைய தூதர்கள் அற்புதங்களைக் கொண்டுவந்தார்கள். உதாரணமாக மூஸாவின் கைத்தடி, ஸாலிஹின் பெண் ஒட்டகம்.
Arabic Tafsirs:
مَاۤ اٰمَنَتْ قَبْلَهُمْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا ۚ— اَفَهُمْ یُؤْمِنُوْنَ ۟
21.6. இவ்வாறு ஆலோசனை கூறும் இவர்களுக்கு முன்னால் இவர்களைப்போன்று சான்றுகள் இறக்கப்பட வேண்டுமென்று ஆலோசனை கூறி, அவை வழங்கப்பட்ட எந்த ஊர்வாசிகளும் நம்பிக்கைகொள்ளவில்லை. மாறாக அவர்கள் அவற்றை பொய்பித்துவிட்டார்கள் அதனால் அவர்களை நாம் அழித்தோம். இவர்கள் மட்டும் நம்பிக்கைகொள்ளவா போகிறார்கள்?
Arabic Tafsirs:
وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ فَسْـَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
21.7. -தூதரே!- நாம் உமக்கு முன்னர் மனிதர்களில் ஆண்களையே தூதர்களாக அனுப்பி அவர்களுக்கு வஹி அறிவித்தோம். நாம் வானவர்களைத் தூதர்களாக அனுப்பவில்லை. நீங்கள் அதனை அறியாதவர்களாக இருந்தால் உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
Arabic Tafsirs:
وَمَا جَعَلْنٰهُمْ جَسَدًا لَّا یَاْكُلُوْنَ الطَّعَامَ وَمَا كَانُوْا خٰلِدِیْنَ ۟
21.8. நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்ணாத சடலமாக ஆக்கவில்லை. மாறாக மற்றவர்களைப் போல அவர்களும் உணவு உண்டார்கள். அவர்கள் உலகில் மரணிக்காமல் நிலைத்திருப்பவர்களுமல்லர்.
Arabic Tafsirs:
ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَیْنٰهُمْ وَمَنْ نَّشَآءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِیْنَ ۟
21.9. பின்னர் நாம் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். அவர்களையும் நாம் நாடிய நம்பிக்கைகொண்டவர்களையும் நாம் அழிவிலிருந்து காப்பாற்றி அல்லாஹ்வை நிராகரித்து பாவங்கள் புரிந்து வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்.
Arabic Tafsirs:
لَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ كِتٰبًا فِیْهِ ذِكْرُكُمْ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
21.10. நாம் உங்களுக்கு குர்ஆனை இறக்கியுள்ளோம். நீங்கள் அதனை உண்மைப்படுத்தி அதன்படி செயல்பட்டால் அதில் உங்களுக்கு கண்ணியமும் பெருமையும் உள்ளது. அதனை நீங்கள் புரியமாட்டீர்களா? எனவே அதனை நம்பிக்கைகொண்டு, அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதன் பால் விரையுங்கள்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• قُرْب القيامة مما يستوجب الاستعداد لها.
1. மறுமை நாள் நெருங்கி வருவது. அதற்காக முன்னேற்பாடுகள் செய்வதைக் கட்டாயமாக்குகின்றது.

• انشغال القلوب باللهو يصرفها عن الحق.
2. மனம் வீணான விஷயங்களில் ஈடுபாடு கொள்வது சத்தியத்தைவிட்டும் திருப்பிவிடுகிறது.

• إحاطة علم الله بما يصدر من عباده من قول أو فعل.
3. அல்லாஹ் அடியார்களின் சொல், செயலை சூழ்ந்து அறிந்துள்ளான்.

• اختلاف المشركين في الموقف من النبي صلى الله عليه وسلم يدل على تخبطهم واضطرابهم.
4. நபியவர்களைக் குறித்த இணைவைப்பாளர்களின் முரணான நிலைப்பாடுகள் அவர்களின் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் காட்டுகிறது.

• أن الله مع رسله والمؤمنين بالتأييد والعون على الأعداء.
5. அல்லாஹ் தூதர்களுடனும் விசுவாசிகளுடனும் ஆதரவளித்துக்கொண்டும் எதிரிகளுக்கு எதிராக உதவி செய்துகொண்டும் இருக்கின்றான்.

• القرآن شرف وعز لمن آمن به وعمل به.
6. அல்குர்ஆன் அதனை நம்பி அதன்படி செயற்பட்டவருக்கு சிறப்பாகவும் கண்ணியமாகவும் உள்ளது.

 
Translation of the Meanings Surah: Al-Anbiyā’
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close