Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Anbiyā’   Verse:
وَالَّتِیْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِیْهَا مِنْ رُّوْحِنَا وَجَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰیَةً لِّلْعٰلَمِیْنَ ۟
21.91. -தூதரே!- விபச்சாரத்திலிருந்து தன் கற்பைப் பாதுகாத்துக்கொண்ட மர்யமின் சம்பவத்தையும் நினைவு கூர்வீராக. அல்லாஹ் அவளிடம் வானவரை அனுப்பி அவளுக்குள் தன் ஆன்மாவை ஊதினான். அவள் ஈஸாவை சுமந்தாள். அவரைத் தந்தையின்றிப் படைத்ததனால் அவளும் அவளுடைய மகன் ஈஸாவும் அல்லாஹ்வின் வல்லமைக்கும் அவனால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் மக்களுக்கு சான்றாக இருந்தார்கள்.
Arabic Tafsirs:
اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً ۖؗ— وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ ۟
21.92. -மனிதர்களே!- உங்களின் இந்த மார்க்கம் ஒரே மார்க்கம்தான். ஓரிறைக் கொள்கையான இஸ்லாம் என்னும் மார்க்கமே அது. நானே உங்களின் இறைவன். எனவே வணக்க வழிபாட்டை எனக்கு மட்டுமே நிறைவேற்றுங்கள்.
Arabic Tafsirs:
وَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَیْنَهُمْ ؕ— كُلٌّ اِلَیْنَا رٰجِعُوْنَ ۟۠
21.93. மக்கள் பலவாறாகப் பிரிந்து விட்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ் ஒருவனையே வணங்கக்கூடியவர்களாகவும் சிலர் அவனுக்கு இணைகளை ஏற்படுத்தக்கூடியவர்களாகவும் சிலர் அவனை நிராகரிப்பவர்களாகவும் சிலர் நம்பிக்கையாளர்களாகவும் ஆகிவிட்டார்கள். இவர்கள் அனைவரும் மறுமை நாளில் நம்மிடம் மட்டுமே திரும்ப வேண்டும். நாம் அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவோம்.
Arabic Tafsirs:
فَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْیِهٖ ۚ— وَاِنَّا لَهٗ كٰتِبُوْنَ ۟
21.94. அவர்களில் யார் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்ட நிலையில் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களின் நற்செயல் ஒருபோதும் நிராகரிக்கப்படாது. மாறாக அல்லாஹ் அவனுக்கு நன்றி செலுத்தி அவனுடைய நன்மைகளை பன்மடங்காக்கிக் கொடுப்பான். மறுமை நாளில் தம் செயல்பதிவேட்டை பெற்றுக்கொண்டு அவர் மகிழ்ச்சியடைவார்.
Arabic Tafsirs:
وَحَرٰمٌ عَلٰی قَرْیَةٍ اَهْلَكْنٰهَاۤ اَنَّهُمْ لَا یَرْجِعُوْنَ ۟
21.95. நிராகரிப்பின் காரணமாக நாம் அழித்த ஊர்மக்கள் பாவமன்னிப்புக் கோரி அது ஏற்றுக்கொள்ளப்பட இவ்வுலகிற்குத் திரும்பிவருவது சாத்தியமற்றதாகும்.
Arabic Tafsirs:
حَتّٰۤی اِذَا فُتِحَتْ یَاْجُوْجُ وَمَاْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ یَّنْسِلُوْنَ ۟
21.96. யஃஜுஜ், மஃஜுஜ் என்ற சமூகத்தவர்கள் அடைக்கப்பட்டுள்ள தடுப்பு திறக்கப்படும்வரை ஒருபோதும் திரும்பிவர மாட்டார்கள். அப்போது அவர்கள் பூமியின் உயரமான ஒவ்வொரு பகுதியிலிருந்தும் விரைவாக வெளிப்படுவார்கள்.
Arabic Tafsirs:
وَاقْتَرَبَ الْوَعْدُ الْحَقُّ فَاِذَا هِیَ شَاخِصَةٌ اَبْصَارُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— یٰوَیْلَنَا قَدْ كُنَّا فِیْ غَفْلَةٍ مِّنْ هٰذَا بَلْ كُنَّا ظٰلِمِیْنَ ۟
21.97. அவர்கள் வெளிப்படுவதன்மூலம் மறுமை நாள் நெருங்கிவிடும். அதன் பயங்கரங்களும் துன்பங்களும் வெளிப்பட்டுவிடும். அதன் பயங்கரத்தால் நிராகரிப்பாளர்களின் பார்வைகள் அப்படியே திறந்த நிலையில் இருக்கும். அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! நாங்கள் மாபெரும் இந்த நாளுக்காக எந்த முன்னேற்பாடும் செய்யாமல் உலகில் வீணாக, அலட்சியமாக இருந்தோமே! அது மாத்தரமின்றி நாங்கள் நிராகரித்தும் பாவங்களில் ஈடுபட்டும் அநியாயக்காரர்களாகவல்வா இருந்தோம்!”
Arabic Tafsirs:
اِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ حَصَبُ جَهَنَّمَ ؕ— اَنْتُمْ لَهَا وٰرِدُوْنَ ۟
21.98. -இணைவைப்பாளர்களே!- நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கிய சிலைகளும் தம்மை வணங்கியதை ஏற்றுக்கொண்ட மனிதர்கள் மற்றும் ஜின்களும் நரகத்தின் எரிபொருள்களாக இருப்பீர்கள். நீங்களும் உங்களின் தெய்வங்களும் அந்த நரகத்தில் நுழைவீர்கள்.
Arabic Tafsirs:
لَوْ كَانَ هٰۤؤُلَآءِ اٰلِهَةً مَّا وَرَدُوْهَا ؕ— وَكُلٌّ فِیْهَا خٰلِدُوْنَ ۟
21.99. வணங்கப்படுகின்ற இவை உண்மையான தெய்வங்களாக இருந்திருந்தால் தம்மை வணங்கியவர்களுடன் நரகத்தில் நுழைந்திருக்காது. வணங்கியவர்கள், வணங்கப்பட்டவை என அனைவரும் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது.
Arabic Tafsirs:
لَهُمْ فِیْهَا زَفِیْرٌ وَّهُمْ فِیْهَا لَا یَسْمَعُوْنَ ۟
21.100. அங்கு அவர்கள் -அனுபவிக்கும் துன்பங்களால்- பெரும் மூச்சு உண்டு. அவர்களுக்கு நிகழ்ந்திருக்கும் பயங்கரத்தின் கடுமையினால் எந்த சப்தத்தையும் நரகில் செவியுற மாட்டார்கள்.
Arabic Tafsirs:
اِنَّ الَّذِیْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰۤی ۙ— اُولٰٓىِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَ ۟ۙ
21.101. (நிச்சயமாக வணங்கப்பட்ட வானவர்களும் ஈஸாவும் நரகத்தில் நுழைவார்கள் என்று இணைவைப்பாளர்கள் கூறியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக ஈஸாவைப்போன்று அல்லாஹ் யாரை நற்பேறு பெற்றவர்கள் என்று முன்னரே அவனுடைய அறிவில் முடிவு செய்யப்பட்டவர்கள் நரகத்திலிருந்து தூரமாக்கப்படுவார்கள்.”
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• التنويه بالعفاف وبيان فضله.
1. கற்பொழுக்கம் புகழப்பட்டு அதன் சிறப்பும் தெளிவபடுத்தப்பட்டுள்ளது.

• اتفاق الرسالات السماوية في التوحيد وأسس العبادات.
2. ஓரிறைக்கொள்கையிலும் வணக்க வழிபாட்டின் அடிப்படைகளிலும் வானலோக ஷரீஅத்துகள் அனைத்தும் ஒன்றுபட்டுள்ளன.

• فَتْح سد يأجوج ومأجوج من علامات الساعة الكبرى.
3. யஃஜுஜ், மஃஜுஜ் என்ற சமூகத்தவர்களின் தடுப்பு திறந்துவிடப்படுவது மறுமை நாளின் பெரும் அடையாளங்களில் ஒன்றாகும்.

• الغفلة عن الاستعداد ليوم القيامة سبب لمعاناة أهوالها.
4. மறுமை நாளுக்காக தயாராகுவதில் அலட்சியமாக இருப்பது அதன் பயங்கரங்களை அனுபவிப்பதற்குக் காரணமாகும்.

 
Translation of the Meanings Surah: Al-Anbiyā’
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close