Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Baqarah   Verse:
وَاقْتُلُوْهُمْ حَیْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَیْثُ اَخْرَجُوْكُمْ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ— وَلَا تُقٰتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتّٰی یُقٰتِلُوْكُمْ فِیْهِ ۚ— فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْ ؕ— كَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِیْنَ ۟
2.191. அவர்களை சந்திக்கும் இடங்களில் கொல்லுங்கள். அவர்கள் உங்களை வெளியேற்றிய மக்காவிலிருந்து அவர்களையும் வெளியேற்றுங்கள். ஒரு நம்பிக்கையாளனை அவனுடைய மார்க்கத்தை விட்டுத் தடுத்து நிராகரிப்பின் பக்கம் கொண்டு செல்லும் குழப்பம் கொலையை விடக்கொடியது. மஸ்ஜிதுல் ஹராமை கண்ணியப்படுத்தும் பொருட்டு அங்கு அவர்களாகவே போரைத் தொடங்கும்வரை நீங்கள் போரைத் தொடங்காதீர்கள். அவர்கள் போரைத் தொடங்கிவிட்டால் அவர்களைக் கொல்லுங்கள். மஸ்ஜிதுல் ஹராமில் வரம்புமீறியதற்கு கொலையே நிராகரிப்பாளர்களுக்கான கூலியாகும்.
Arabic Tafsirs:
فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
2.192. அவர்கள் உங்களுடன் போர் புரிதல், தங்களின் நிராகரிப்பு எக்பவற்றிலிருந்து விலகிவிட்டால் நீங்களும் விலகிக் கொள்ளுங்கள். தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் முந்தைய பாவங்களின் காரணமாக அவர்களைத் தண்டிக்க மாட்டான். அவன் அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அவர்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான்.
Arabic Tafsirs:
وَقٰتِلُوْهُمْ حَتّٰی لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّیَكُوْنَ الدِّیْنُ لِلّٰهِ ؕ— فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَی الظّٰلِمِیْنَ ۟
2.193. நிராகரிப்பவர்கள், இணைவைப்பையும், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதையும் நிராகரிப்பதையும் விட்டுவிடும்வரையும், அல்லாஹ்வுடைய மார்க்கம் மிகைக்கும் வரையும் அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதையும், அவனை நிராகரிப்பதையும் விட்டுவிட்டால் நீங்களும் விலகிக் கொள்ளுங்கள்; அவர்களுடன் போரிடாதீர்கள். அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்து அவனை நிராகரிக்கும் அநியாயக்காரர்களைத்தவிர வேறு யாரிடமும் பகைமை இல்லை.
Arabic Tafsirs:
اَلشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌ ؕ— فَمَنِ اعْتَدٰی عَلَیْكُمْ فَاعْتَدُوْا عَلَیْهِ بِمِثْلِ مَا اعْتَدٰی عَلَیْكُمْ ۪— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
2.194. அல்லாஹ் உங்களுக்கு ஹரமில் நுழைவதற்கு அனுமதியளித்த ஏழாம் ஆண்டின் புனிதமான மாதம் இணைவைப்பாளர்கள் உங்களைத் தடுத்த ஆறாம் ஆண்டின் புனிதமான மாதத்திற்கு பகரமாகும். புனிதங்களிலும் - புனித மாதம், புனித நகரம், இஹ்ராம் போன்றவை - வரம்பு மீறியவர்களிடமிருந்து பழிவாங்கப்படுகிறது. யாரேனும் இவற்றில் உங்கள்மீது வரம்பு மீறினால் அவர்கள் உங்களுடன் நடந்துகொண்டவாறே நீங்களும் நடந்துகொள்ளுங்கள். வரம்புமீறி விடாதீர்கள். அல்லாஹ் அவன் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை நேசிக்க மாட்டான். அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றில் வரம்புமீறுவதில் அவனை அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னை அஞ்சக்கூடியவர்களுக்கு உதவுபவனாகவும், ஆதரவளிப்பவனாகவும் இருக்கின்றான்.
Arabic Tafsirs:
وَاَنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَیْدِیْكُمْ اِلَی التَّهْلُكَةِ ۛۚ— وَاَحْسِنُوْا ۛۚ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟
2.195. ஜிஹாத் மற்றும் அதுபோன்ற இறைவழிபாட்டில் செல்வங்களை செலவு செய்யுங்கள். ஜிஹாதையும் அவனுடைய பாதையில் செலவழிப்பதையும் விட்டுவிட்டோ உங்களின் அழிவுக்குக் காரணமானவற்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலமோ உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களின் வணக்க வழிபாடு, கொடுக்கல் வாங்கல்கள், பண்புகள் ஆகியவற்றில் சிறந்தமுறையில் செயலாற்றுங்கள். எல்லா விவகாரங்களிலும் சிறந்தமுறையில் செயல்படுபவர்களேயே அல்லாஹ் நேசிக்கின்றான். அவன் அவர்களுக்கு மகத்தான நன்மைகளை வழங்குகிறான்; நேரான வழியைக் காட்டுகிறான்.
Arabic Tafsirs:
وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ ؕ— فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰی یَبْلُغَ الْهَدْیُ مَحِلَّهٗ ؕ— فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ بِهٖۤ اَذًی مِّنْ رَّاْسِهٖ فَفِدْیَةٌ مِّنْ صِیَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍ ۚ— فَاِذَاۤ اَمِنْتُمْ ۥ— فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَی الْحَجِّ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ فِی الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْ ؕ— تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ؕ— ذٰلِكَ لِمَنْ لَّمْ یَكُنْ اَهْلُهٗ حَاضِرِی الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟۠
2.196. அல்லாஹ்வின் திருப்திக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். நோயினாலோ எதிரிகளினாலோ நீங்கள் அவற்றை முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களால் இயன்ற பலிப்பிராணிகளை அறுத்து உங்களின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள். பலிப்பிராணி அறுக்கப்படும் இடத்தை அடையும்வரை தலைமுடியை மழிக்கவோ குறைக்கவோ செய்யாதீர்கள். அது ஹரமை விட்டுத் தடுக்கப்பட்டால் தடுக்கப்பட்ட இடத்திலேயே அறுத்துக் கொள்ளுங்கள். அது தடுக்கப்படவில்லையெனில் ஹரமில் அறுக்கப்படும் நாளான துல்ஹஜ் பத்தாம் தினத்திலும் அதற்கு அடுத்த "அய்யாமுத் தஷ்ரீக்" என்னும் மூன்று நாட்களிலும் அறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளியாக அல்லது தலையில் பேன் போன்ற பூச்சிகளால் பாதிக்கப்பட்டு, உங்களின் தலைமுடியை மழித்துக் கொள்வதில் எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் அதற்கான பரிகாரத்தை அளித்துவிடுங்கள். அதற்கான பரிகாரம், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது ஹரமில் உள்ள ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டை அறுத்து ஹரமிலுள்ள ஏழைகளுக்கு அதனைப் பங்கிட வேண்டும். நீங்கள் அச்சமற்றவர்களாக இருந்து ஹஜ்ஜுடைய காலத்தில் உம்ராவையும் நிறைவேற்றி அதே வருடம் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்கும் வரை இஹ்ராமின் மூலம் தடைசெய்யப்பட்டவற்றை அனுபவிக்க (தமத்துஃ முறையில் நிய்யத் வைக்க) விரும்பினால், ஒரு ஆட்டை அறுத்து அல்லது ஒட்டகத்திலோ, மாட்டிலோ ஏழு பங்கில் ஒருவராக இணைந்து உங்களால் இயன்றதைப் பலியிட்டுவிடுங்கள். உங்களால் பலிப்பிராணியை பெறமுடியவில்லையெனில் அதற்குப் பகரமாக ஹஜ்ஜின் கிரியைகளுக்குரிய காலத்தில் மூன்று நாட்களும், வீடுதிரும்பிய பிறகு ஏழுநாட்களும் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். மொத்தம் முழுமையான பத்து நாட்களாகும். தமத்துஃ முறையில் நிய்யத் வைத்து பலிப்பிராணியை பலியிடுவது, முடியாதபட்சத்தில் நோன்பு நோற்பது என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லை மற்றும் அதன் அருகில் வசிக்காதவர்களுக்காகும். ஹரமிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு தமத்துஃ முறையில் ஹஜ் செய்வதற்கு எவ்விதத் தேவையுமில்லை. அவர்கள் அருகில் வசிப்பதால் வெறும் தவாப் மாத்திரம் போதுமானது. ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவை நிறைவேற்றவேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் விதித்த கட்டளைகளையும் வரம்புகளையும் பேணி அவனுக்கு அஞ்சுங்கள். தன்னுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• مقصود الجهاد وغايته جَعْل الحكم لله تعالى وإزالة ما يمنع الناس من سماع الحق والدخول فيه.
1. ஜிஹாதின் நோக்கம், மக்கள் சத்தியத்தைச் செவியேற்பதற்கும் அதனை ஏற்றுக் கொள்வதற்கும் தடையாக இருக்கும் விஷயங்களை அகற்றி அதிகாரம் அனைத்தையும் அல்லாஹ்வுக்கு ஆக்குவதேயாகும்.

• ترك الجهاد والقعود عنه من أسباب هلاك الأمة؛ لأنه يؤدي إلى ضعفها وطمع العدو فيها.
2. ஜிஹாதை விட்டுவிடுதலும் புறக்கணித்தலும் சமூகம் வீழ்ச்சியடைவதற்கான காரணிகளில் ஒன்றாகும். இது சமூகத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம்களை வீழ்த்தலாம் என்ற ஒரு பேராசையை எதிரிகளுக்கு வழங்குகிறது.

• وجوب إتمام الحج والعمرة لمن شرع فيهما، وجواز التحلل منهما بذبح هدي لمن مُنِع عن الحرم.
3.ஹஜ்ஜையும் உம்ராவையும் ஆரம்பித்தவர்கள் பரிபூரணமாக செய்து முடிக்கவேண்டும். ஆனால் ஆரம்பித்த பின் ஹரமிற்கு செல்லமுடியாமல் தடுக்கப்பட்டவர் பலிப்பிராணியைப் பலியிட்டு அவ்விரண்டு வழிபாடுகளிலிருந்தும் விடுபடலாம்.

 
Translation of the Meanings Surah: Al-Baqarah
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close