Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-Baqarah   Verse:
وَقَالَتِ الْیَهُوْدُ لَیْسَتِ النَّصٰرٰی عَلٰی شَیْءٍ ۪— وَّقَالَتِ النَّصٰرٰی لَیْسَتِ الْیَهُوْدُ عَلٰی شَیْءٍ ۙ— وَّهُمْ یَتْلُوْنَ الْكِتٰبَ ؕ— كَذٰلِكَ قَالَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ ۚ— فَاللّٰهُ یَحْكُمُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
2.113. ‘கிருஸ்தவர்கள் சரியான மார்க்கத்தில் இல்லை’ என்று யூதர்கள் கூறுகிறார்கள். ‘யூதர்கள் சரியான மார்க்கத்தில் இல்லை’ என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் தாம் நிராகரித்தவை உண்மையானவையே என்பதையும், தூதர்கள் அனைவரையும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதையும் தமது வேதத்தில் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் இந்தச் செயல், தூதர்கள் அனைவரையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்கள் அனைத்தையும் நிராகரித்த, எதுவும் அறியாத இணைவைப்பாளர்களின் செயலை ஒத்திருக்கிறது. கருத்துவேறுபட்ட இவர்கள் அனைவரிடையே மறுமைநாளில் தன் அடியார்களுக்கு அறிவித்த நீதியைக்கொண்டு அல்லாஹ் தீர்ப்பளிப்பான். அல்லாஹ் இறக்கிய அனைத்தின்மீதும் நம்பிக்கைகொள்ளாமல் எந்த வெற்றியும் இல்லை என்பதே அந்த நீதியாகும்.
Arabic Tafsirs:
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ یُّذْكَرَ فِیْهَا اسْمُهٗ وَسَعٰی فِیْ خَرَابِهَا ؕ— اُولٰٓىِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ یَّدْخُلُوْهَاۤ اِلَّا خَآىِٕفِیْنَ ؕ۬— لَهُمْ فِی الدُّنْیَا خِزْیٌ وَّلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟
2.114. பள்ளிவாயில்களில் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்படுவதைத் தடுப்பவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் யாருமில்லை. அவன் அங்கு தொழுவதை, அல்லாஹ்வை நினைவுகூருவதை, குர்ஆன் ஓதுவதைத் தடுக்கிறான். அவற்றை இடிப்பதன் மூலமோ அவற்றில் நடைபெறும் வணக்க வழிபாட்டைத் தடுப்பதன் மூலமோ அவற்றைப் பாழாக்க முயல்கிறான். பாழாக்க முயலும் இவர்களுக்கு அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் மக்களை அவனுடைய பள்ளிவாயில்களை விட்டுத் தடுத்ததனாலும் பயந்தவர்களாகவே அன்றி அவற்றில் நுழைவதற்குத் தகுதி இல்லை. இவ்வுலகில் இவர்கள் நம்பிக்கையாளர்களால் இழிவுபடுத்தப்படுவார்கள். அல்லாஹ்வின் பள்ளிவாயில்களை விட்டு மக்களைத் தடுத்ததனால் மறுமையில் பெரும் வேதனையும் உண்டு.
Arabic Tafsirs:
وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۗ— فَاَیْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِیْمٌ ۟
2.115. கிழக்கு, மேற்கு மற்றும் அவையிரண்டிற்கு இடைப்பட்டவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் தான் நாடியவற்றைக் கொண்டு அடியார்களை ஏவுகிறான். நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வையே நோக்குகிறீர்கள். அவன் உங்களை பைத்துல் முகத்தஸை நோக்கும்படியோ கஅபாவை நோக்கும்படியோ ஏவினால், அல்லது நீங்கள் முன்னோக்கும் திசையில் தவறிறைத்தால் அல்லது அதனை முன்னோக்குவது உங்களுக்குக் கடினமாக இருந்தால் அதனால் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. ஏனெனில் திசைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். தன் அருளாலும் இலகுபடுத்தலாலும் படைப்புகளுடன் விசாலத்தன்மையுடன் நடப்பவன். அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவன் நன்கறிந்தவன்.
Arabic Tafsirs:
وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ— سُبْحٰنَهٗ ؕ— بَلْ لَّهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ ۟
2.116. யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள், “அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக்கொண்டான் என்று.” இதனை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன். அவன் படைப்புகளை விட்டும் தேவையற்றவன். தேவையுடையவர்கள்தாம் மகனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மாறாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. படைப்புகள் அனைத்தும் அவனது அடிமைகளே, அவனுக்குக் கட்டுப்பட்டவைகள்தாம். தான் நாடியவாறு அவற்றை நடத்துகிறான்.
Arabic Tafsirs:
بَدِیْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
2.117. அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவற்றில் உள்ளவற்றையும் முன்மாதிரியின்றி ஆரம்பத்தில் படைத்தவன். அவன் ஏதேனும் ஒரு விஷயத்தை நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுகிறான். அது அவன் நாடியவாறு ஆகிவிடுகிறது. அவனுடைய கட்டளையைத் தடுப்பவர் யாருமில்லை.
Arabic Tafsirs:
وَقَالَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ لَوْلَا یُكَلِّمُنَا اللّٰهُ اَوْ تَاْتِیْنَاۤ اٰیَةٌ ؕ— كَذٰلِكَ قَالَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّثْلَ قَوْلِهِمْ ؕ— تَشَابَهَتْ قُلُوْبُهُمْ ؕ— قَدْ بَیَّنَّا الْاٰیٰتِ لِقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟
2.118. வேதக்காரர்களிலும் இணைவைப்பாளர்களிலும் அறியாதவர்கள் சத்தியத்தை எதிர்த்தவர்களாகக் கூறுகிறார்கள், “அல்லாஹ் ஏன் எங்களுடன் நேரடியாகப் பேசவில்லை? அல்லது எமக்கென பிரத்யேகமானதொரு புலன் ரீதியான அற்புதத்தை ஏன் எங்களுக்குத் தரவில்லை?.” இதற்கு முன்னர் தம் தூதர்களை நிராகரித்த சமூகமும் இவ்வாறே கூறியது. அவர்களின் காலங்களும் இடங்களும் வெவ்வேறாக இருந்தாலும் இவர்களின் உள்ளங்களும் இவர்களுக்கு முன்னர் நிராகரித்து முரண்பட்டோரின் உள்ளங்களும் நிராகரிப்பு, பிடிவாதம், அத்துமீறல் போன்றவற்றில் ஒன்றுபட்டுவிட்டன. தமக்குச் சத்தியம் தெரியும்போது அதன் மீது உறுதியான நம்பிக்கை கொள்வோருக்கு சான்றுகளை நாம் தெளிவுபடுத்திவிட்டோம். எந்தச் சந்தேகமும் அவர்களை அண்டவில்லை; பிடிவாதம் அவர்களைத் தடுக்கவில்லை.
Arabic Tafsirs:
اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِیْرًا وَّنَذِیْرًا ۙ— وَّلَا تُسْـَٔلُ عَنْ اَصْحٰبِ الْجَحِیْمِ ۟
2.119. தூதரே! அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்கு சுவனம் உண்டு என்று நற்செய்தி கூறுவதற்காகவும் அவனை நிராகரித்தவர்களுக்கு நரகம் உண்டு என்று எச்சரிப்பதற்காகவும் சந்தேகமற்ற இந்த மார்க்கத்தைக் கொண்டு நாம் உம்மை அனுப்பியுள்ளோம். தெளிவாக எடுத்துரைப்பதுதான் உம்மீதுள்ள கடமையாகும். உம்மீது நம்பிக்கைகொள்ளாத நரகவாசிகளைக் குறித்து அல்லாஹ் உம்மிடம் கேட்க மாட்டான்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• الكفر ملة واحدة وإن اختلفت أجناس أهله وأماكنهم، فهم يتشابهون في كفرهم وقولهم على الله بغير علم.
1. நிராகரிப்பு என்பது ஒரே மார்க்கம்தான், அதனைப் பின்பற்றுபவர்கள் வெவ்வேறானவர்களாக, வெவ்வேறு இடங்களிலுள்ளவர்களாக இருந்தாலும் சரியே. அவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதில், அவனைக்குறித்து ஆதாரமற்ற விஷயங்களைக் கூறுவதில் ஒத்தவர்களாகவே இருக்கின்றனர்.

• أعظم الناس جُرْمًا وأشدهم إثمًا من يصد عن سبيل الله، ويمنع من أراد فعل الخير.
2. அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுப்பவரும், நன்மை செய்யக்கூடியவர்களைத் தடுப்பவருமே பெரும் குற்றவாளிகள்.

• تنزّه الله تعالى عن الصاحبة والولد، فهو سبحانه لا يحتاج لخلقه.
3. மனைவியையோ மகனையோ ஏற்படுத்திக் கொள்வதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவன் தன் படைப்புகளிடத்தில் தேவையற்றவன்.

 
Translation of the Meanings Surah: Al-Baqarah
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close