Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Hūd   Verse:
قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَاٰتٰىنِیْ مِنْهُ رَحْمَةً فَمَنْ یَّنْصُرُنِیْ مِنَ اللّٰهِ اِنْ عَصَیْتُهٗ ۫— فَمَا تَزِیْدُوْنَنِیْ غَیْرَ تَخْسِیْرٍ ۟
11.63. ஸாலிஹ் தம் சமூகத்தாரிடம் மறுத்தவராக கூறினார்: “என் சமூகமே! நான் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீதிருந்து, அவன் எனக்கு தூதுத்துவம் என்னும் அருளையும் வழங்கியிருக்க, அவன் எனக்கு எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டதை விட்டுவிட்டு அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னை யார்தான் காப்பாற்ற முடியும்? நீங்கள் எனக்கு வழிகேட்டையும் அவனது திருப்பொருத்தத்தை விட்டும் விலகிச் செல்வதையே அதிகரிக்கிறீர்கள்.
Arabic Tafsirs:
وَیٰقَوْمِ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ قَرِیْبٌ ۟
11.64. என் சமூகமே! இது என்னுடைய நம்பகத் தன்மைக்கு சான்றான அல்லாஹ் அனுப்பிய பெண் ஒட்டகமாகும். அல்லாஹ்வின் பூமியில் அதனை மேய விட்டு விடுங்கள். அதற்கு எந்த இடையூறும் ஏற்படுத்திவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதனைக் கொன்று சிறிது நேரத்தில் வேதனை உங்களைத் தாக்கி விடும்.
Arabic Tafsirs:
فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِیْ دَارِكُمْ ثَلٰثَةَ اَیَّامٍ ؕ— ذٰلِكَ وَعْدٌ غَیْرُ مَكْذُوْبٍ ۟
11.65. நிராகரிப்பில் மிகைத்துச் சென்று அந்த ஒட்டகத்தைக் கொன்றார்கள். ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் ஒட்டகத்தைக் கொன்றதிலிருந்து மூன்று நாட்களுக்கு உங்களது இடத்தில் வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளுங்கள். பின்னர் அல்லாஹ்வின் வேதனை நிச்சயமாக உங்களைத் தாக்கியே தீரும். அதற்குப் பின் வேதனை வருவது நிகழ்ந்தேறும் வாக்குறுதி அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அது பொய்யுமல்ல. மாறாக அது உண்மையான எச்சரிக்கையாகும்.”
Arabic Tafsirs:
فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا صٰلِحًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْیِ یَوْمِىِٕذٍ ؕ— اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِیُّ الْعَزِیْزُ ۟
11.66. அவர்களை அழிக்குமாறு நமது நம்முடைய கட்டளை வந்த போது நாம் ஸாலிஹையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் காப்பாற்றினோம். அந்த நாளின் இழிவு, அவமானத்திலிருந்து அவர்களைப் பாதுகாத்தோம். -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் மிகைத்த வல்லமை மிக்கவனாக இருக்கின்றான். அவனை யாராலும் மிகைத்துவிட முடியாது. எனவேதான் அவன் பொய்ப்பித்த சமூகங்களை அழித்து விட்டான்.
Arabic Tafsirs:
وَاَخَذَ الَّذِیْنَ ظَلَمُوا الصَّیْحَةُ فَاَصْبَحُوْا فِیْ دِیَارِهِمْ جٰثِمِیْنَ ۟ۙ
11.67. அழிவை உண்டாக்கும் ஒரு பயங்கர சப்தம் சமூத் கூட்டத்தாரை தாக்கியது. அதன் பயங்கரத்தால் அவர்கள் செத்துமடிந்தார்கள். அவர்களின் முகங்களில் மண் ஒட்டி முகங்குப்புற வீழ்ந்துகிடந்தார்கள்.
Arabic Tafsirs:
كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ؕ— اَلَاۤ اِنَّ ثَمُوْدَاۡ كَفَرُوْا رَبَّهُمْ ؕ— اَلَا بُعْدًا لِّثَمُوْدَ ۟۠
11.68. அவர்கள் தங்களின் ஊர்களில் செல்வச் செழிப்போடு வசிக்காதவர்களைப் போன்று ஆகிவிட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள், ஸமூத் சமூகம் தங்கள் இறைவனை நிராகரித்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
Arabic Tafsirs:
وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی قَالُوْا سَلٰمًا ؕ— قَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِیْذٍ ۟
11.69. வானவர்கள் மனித உருவில் இப்ராஹீமிடம் வந்து அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இஸ்ஹாக் என்னும் மகன் பிறப்பான் என்றும் பின்னர் யஅகூப் என்னும் மகன் பிறப்பான் என்றும் நற்செய்தி கூறினார்கள். வானவர்கள் அவருக்கு சலாம் கூறினார்கள். அவரும் சலாமுக்குப் பதிலளித்து விட்டு, விரைவாகச் சென்று அவர்களை மனிதர்கள் என்று எண்ணி அவர்கள் உண்பதற்காக பொரித்த காளைக்கன்றைக் கொண்டுவந்தார்.
Arabic Tafsirs:
فَلَمَّا رَاٰۤ اَیْدِیَهُمْ لَا تَصِلُ اِلَیْهِ نَكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ— قَالُوْا لَا تَخَفْ اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمِ لُوْطٍ ۟ؕ
11.70. அவர்களின் கைகள் காளைக் கன்றின் மாமிசத்தின்பால் செல்லாததையும் அவர்கள் சாப்பிட மறுத்ததையும் இப்ராஹீம் கண்டு ஐயமுற்று அவர் மனதில் அவர்களைக் குறித்த பயத்தை மறைத்துக் கொண்டார். அவருடைய பயத்தை உணர்ந்த வானவர்கள் அவரிடம், “பயப்படாதீர். நாங்கள் லூத்தின் சமூகத்தைத் தண்டிப்பதற்காக அல்லாஹ் எம்மை அவர்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள்.
Arabic Tafsirs:
وَامْرَاَتُهٗ قَآىِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ ۙ— وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ یَعْقُوْبَ ۟
11.71. இப்ராஹீமின் மனைவி சாரா நின்று கொண்டிருந்தார். நாம் சாராவுக்கு இஸ்ஹாக் என்னும் மகன் பிறப்பான் என்றும் இஸ்ஹாக்கிற்கு யஅகூப் என்னும் மகன் பிறப்பான் என்ற மகிழ்வூட்டும் நற்செய்தியை கூறினோம். அவள் சிரித்தாள். தாம் செவியுற்றதைக் கொண்டு மகிழச்சியடைந்தாள்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• عناد واستكبار المشركين حيث لم يؤمنوا بآية صالح عليه السلام وهي من أعظم الآيات.
1.ஸாலிஹ் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்று மிகப் பெரிய சான்றாகும். ஆயினும் பிடிவாதத்திலே நிலைத்து, பெருமையடித்து இருந்த இணைவைப்பாளர்கள் அந்த சான்றுகளை நம்பிக்கை கொள்ளவில்லை.

• استحباب تبشير المؤمن بما هو خير له.
2. நம்பிக்கையாளனுக்கு நலவான ஒன்றை கொண்டு நற்செய்தி கூறுவது விரும்பத்தக்கது.

• مشروعية السلام لمن دخل على غيره، ووجوب الرد.
3. மற்றவர்களிடம் நுழையும் போது சலாம் கூற வேண்டும். அதற்குப் பதிலளிப்பது கட்டாயமாகும்.

• وجوب إكرام الضيف.
4. விருந்தாளியை உபசரிப்பது கடமையாகும்.

 
Translation of the Meanings Surah: Hūd
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close