Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Hūd   Verse:
قَالَ یٰنُوْحُ اِنَّهٗ لَیْسَ مِنْ اَهْلِكَ ۚ— اِنَّهٗ عَمَلٌ غَیْرُ صَالِحٍ ۗ— فَلَا تَسْـَٔلْنِ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ؕ— اِنِّیْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟
11.46. அல்லாஹ் நூஹிடம் கூறினான்: “நூஹே! நீர் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்ட உம் மகன் நான் காப்பாற்றுவதாக வாக்களித்த உம் குடும்பத்தைச் சார்ந்தவன் அல்ல. ஏனெனில் அவன் நிராகரிப்பாளன். உம்முடைய கேள்வி உமக்குப் பொருத்தமற்ற கேள்வியாகும். உம் தரத்தில் இருப்பவர்களுக்கு அது உகந்ததல்ல. உமக்கு அறிவில்லாத விஷயங்களைக் குறித்து என்னிடம் கேட்காதீர். நீர் அறிவீனர்களில் ஒருவராக ஆகி என் அறிவுக்கும் நோக்கத்திற்கும் முரணானவற்றைக் கேட்பதை விட்டும் நான் உம்மை எச்சரிக்கிறேன்.”
Arabic Tafsirs:
قَالَ رَبِّ اِنِّیْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْـَٔلَكَ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؕ— وَاِلَّا تَغْفِرْ لِیْ وَتَرْحَمْنِیْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
11.47. நூஹ் கூறினார்: “என் இறைவா! எனக்கு அறிவில்லாத விஷயங்களை உன்னிடம் கேட்பதை விட்டும் என்னை பாதுகாக்கும்படி நான் உன்னிடம் உதவி தேடுகிறன். நீ என் பாவத்தை மன்னித்து என்மீது கருணை காட்டவில்லையென்றால் மறுமையில் தமது பங்குகளை இழந்து நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாகி விடுவேன்.
Arabic Tafsirs:
قِیْلَ یٰنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَیْكَ وَعَلٰۤی اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ ؕ— وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ یَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟
11.48. அல்லாஹ் நூஹிடம் கூறினான்: “நூஹே! கப்பலிலிருந்து நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் உம்மீதும், உமக்குப் பிறகு உருவாகும் உம்முடன் கப்பலில் இருந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள் மீதும் அல்லாஹ் பொழிந்த ஏராளமான அருட்கொடைகளைக் கொண்டும் பூமியில் இறங்குவீராக. அவர்களின் சந்ததிகளிலிருந்து நிராகரிப்பாளர்களும் தோன்றுவார்கள். நாம் இவ்வுலக வாழ்வில் அவர்களை அனுபவிக்கச் செய்வோம். அவர்கள் வாழ்வதற்குத் தேவையானவற்றை வழங்குவோம். பின்னர் மறுமை நாளில் வேதனை மிக்க தண்டனை நம்மிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கும்.
Arabic Tafsirs:
تِلْكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهَاۤ اِلَیْكَ ۚ— مَا كُنْتَ تَعْلَمُهَاۤ اَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هٰذَا ۛؕ— فَاصْبِرْ ۛؕ— اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِیْنَ ۟۠
11.49. நூஹின் இந்த சம்பவம் மறைவான செய்திகளில் உள்ளவையாகும். தூதரே! நீரும் உம் சமூகமும் நாம் உமக்கு அறிவித்த இந்த வஹிக்கு முன்னர் இதனை அறிந்திருக்கவில்லை. நூஹ் பொறுமை செய்தது போல் நீரும் உம் சமூகத்தினரின் தொல்லைகளையும் நிராகரிப்பையும் பொறுத்துக் கொள்வீராக. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பவர்களுக்கே வெற்றி நிச்சயம்.
Arabic Tafsirs:
وَاِلٰی عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ— قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— اِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ ۟
11.50. ஆத் சமூகத்தின் பக்கம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். அவர் அவர்களிடம் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாரையும் இணையாக்காதீர்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் பொய்யர்களாகவே இருக்கின்றீர்கள்.
Arabic Tafsirs:
یٰقَوْمِ لَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا ؕ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی الَّذِیْ فَطَرَنِیْ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
11.51. என் சமூகமே! என் இறைவனிடமிருந்து நான் எடுத்துரைக்கும் அழைப்புப் பணிக்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி என்னைப் படைத்த அல்லாஹ்விடமே உள்ளது. நீங்கள் இதனை விளங்கிக் கொண்டு நான் உங்களை எதனை நோக்கி அழைக்கிறேனோ அதனை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா?
Arabic Tafsirs:
وَیٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا وَّیَزِدْكُمْ قُوَّةً اِلٰی قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِیْنَ ۟
11.52. என் சமூகமே! அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். பின்னர் உங்கள் பாவங்களை விட்டு விட்டு அவன் பக்கமே திரும்புங்கள். -பாவங்களில் மிகப் பெரியது இணைவைப்பாகும்.- அதற்கு வெகுமதியாக அல்லாஹ் உங்கள் மீது பெரு மழையைப் பொழியச் செய்வான். அதிகமான பிள்ளைகளையும் செல்வங்களையும் வழங்கி உங்களுடைய மதிப்பை மென்மேலும் அதிகரிப்பான். எனது அழைப்பை புறக்கணித்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் எனது அழைப்பைப் புறக்கணித்ததனாலும் அல்லாஹ்வை நீங்கள் நிராகரித்ததனாலும் நான் கொண்டு வந்ததை பொய்ப்பித்ததனாலும் குற்றவாளிகளாகி விடுவீர்கள்.
Arabic Tafsirs:
قَالُوْا یٰهُوْدُ مَا جِئْتَنَا بِبَیِّنَةٍ وَّمَا نَحْنُ بِتَارِكِیْۤ اٰلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟
11.53. அவருடைய சமூகத்தார் கூறினார்கள்: “ஹூதே! நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்வதற்கு நீர் எங்களிடம் எந்த தெளிவான சான்றையும் கொண்டுவரவில்லை. ஆதாரமற்ற உம் பேச்சை நம்பி எங்கள் தெய்வங்களை வணங்குவதை விட்டுவிட மாட்டோம். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்ற உமது வாதத்திலும் நாங்கள் உம்மை நம்பப்போவதில்லை.”
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• لا يملك الأنبياء الشفاعة لمن كفر بالله حتى لو كانوا أبناءهم.
1. தங்களின் பிள்ளைகளாக இருந்தாலும், அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்காக பரிந்துரை செய்யும் அதிகாரம் இறைத்தூதர்களுக்குக் கூட இல்லை.

• عفة الداعية وتنزهه عما في أيدي الناس أقرب للقبول منه.
2. அழைப்பாளனின் பக்குவமும் மக்களிடமுள்ளவற்றை விட்டும் ஒதுங்கியிருப்பதும் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு நெருக்கமானதாகும்.

• فضل الاستغفار والتوبة، وأنهما سبب إنزال المطر وزيادة الذرية والأموال.
3. பாவமன்னிப்புக் கோருதல் மற்றும் அல்லாஹ்வின்பால் மீளுதலின் சிறப்பு தெளிவாகிறது. அவை மழை பொழிவதற்கும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும்அதிகரிப்பு ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கின்றது.

 
Translation of the Meanings Surah: Hūd
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close