Check out the new design

Übersetzung der Bedeutungen des edlen Qurans - Tamilische Übersetzung - Omar Sharif * - Inhaltsverzeichnis der Übersetzungen

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Übersetzung der Bedeutungen Surah: Al-Baqarah   Vers (Ayah):
مَا نَنْسَخْ مِنْ اٰیَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَیْرٍ مِّنْهَاۤ اَوْ مِثْلِهَا ؕ— اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மாற்றினாலும் அல்லது அதை நாம் மறக்கடித்தாலும் அதைவிடச் சிறந்ததை அல்லது அது போன்றதைக் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா?
Arabische Tafsire:
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ், அவனுக்கே வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி உரியது என்பதை நீர் அறியவில்லையா? இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு பொறுப்பாளருமில்லை; உதவியாளருமில்லை.
Arabische Tafsire:
اَمْ تُرِیْدُوْنَ اَنْ تَسْـَٔلُوْا رَسُوْلَكُمْ كَمَا سُىِٕلَ مُوْسٰی مِنْ قَبْلُ ؕ— وَمَنْ یَّتَبَدَّلِ الْكُفْرَ بِالْاِیْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
(இதற்கு) முன்னர் மூஸாவிடம் கேள்வி கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் நீங்கள் கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இந்த தூதரையும் அவர் கூறுவதையும்) நம்பிக்கை கொள்வதற்கு பதிலாக (அதை) நிராகரிப்பதை எடுத்துக் கொள்வாரோ அவர் திட்டமாக நேர்வழியிலிருந்து வழிதவறிவிட்டார்.
Arabische Tafsire:
وَدَّ كَثِیْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ یَرُدُّوْنَكُمْ مِّنْ بَعْدِ اِیْمَانِكُمْ كُفَّارًا ۖۚ— حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْحَقُّ ۚ— فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰی یَاْتِیَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
வேதக்காரர்களில் அதிகமானவர்கள் - அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவானதற்கு பின்னர், அவர்களுடைய உள்ளங்களில் (உங்கள் மீது) உள்ள பொறாமையினால், - “நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு பின்னர் உங்களை நிராகரிப்பாளர்களாக மாற்ற வேண்டுமே” என்று விரும்புகிறார்கள். ஆக, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவருகின்ற வரை (அவர்களை) மன்னித்து விடுங்கள்! இன்னும், புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Arabische Tafsire:
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ— وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
இன்னும், நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள். இன்னும், நீங்கள் நன்மையில் எதை உங்களுக்காக முற்படுத்துவீர்களோ அல்லாஹ்விடம் (மறுமையில்) அதைப் பெறுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
Arabische Tafsire:
وَقَالُوْا لَنْ یَّدْخُلَ الْجَنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ— تِلْكَ اَمَانِیُّهُمْ ؕ— قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
இன்னும், “யார் யூதர்களாக, அல்லது கிறித்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களைத் தவிர (எவரும்) சொர்க்கத்தில் நுழையவே மாட்டார்” என (அவர்கள்) கூறினார்கள். அவை அவர்களுடைய வீண் நம்பிக்கைகளாகும்! (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.”
Arabische Tafsire:
بَلٰی ۗ— مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ ۪— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟۠
அவ்வாறன்று! எவர், தான் நன்மை செய்பவராக இருந்த நிலையில் தனது முகத்தை (முற்றிலும்) அல்லாஹ்விற்குப் பணியவைப்பாரோ, அவருக்கு அவருடைய கூலி அவருடைய இறைவனிடம் (நிறைவாக) உண்டு. இன்னும், அவர்கள் மீது பயமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Arabische Tafsire:
 
Übersetzung der Bedeutungen Surah: Al-Baqarah
Inhaltsverzeichnis der Suren Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen des edlen Qurans - Tamilische Übersetzung - Omar Sharif - Inhaltsverzeichnis der Übersetzungen

Übersetzung von Sh. ʿUmar Sharif ibn ʿAbd As-Salām.

Schließen