Check out the new design

Übersetzung der Bedeutungen des edlen Qurans - Tamilische Übersetzung - Omar Sharif * - Inhaltsverzeichnis der Übersetzungen

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Übersetzung der Bedeutungen Surah: Āl ʿImrān   Vers (Ayah):

ஆலஇம்ரான்

الٓمَّٓ ۟ۙۚ
அலிஃப் லாம் மீம்.
Arabische Tafsire:
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَیُّ الْقَیُّوْمُ ۟ؕ
அல்லாஹ், அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை; (அவன் என்றும்) உயிருள்ளவன்; (தன்னில்) நிலையானவன் (படைப்புகளை நிர்வகிப்பவன்).
Arabische Tafsire:
نَزَّلَ عَلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ وَاَنْزَلَ التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۟ۙ
(நபியே!) (இவ்)வேதத்தை சத்தியத்துடன் உம்மீது அவன் இறக்கினான்; அது, தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக்கூடியதாகும். இன்னும், (இதற்கு முன்னர் நபி மூஸாவின் மீது) தவ்ராத்தையும் (நபி ஈஸாவின் மீது) இன்ஜீலையும் இறக்கினான்.
Arabische Tafsire:
مِنْ قَبْلُ هُدًی لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ ؕ۬— اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟ؕ
இதற்கு முன்னர் (தவ்ராத்தையும் இன்ஜீலையும் இஸ்ராயீலுடைய) மக்களுக்கு நேர்வழி காட்டியாக (இறக்கினான்). இன்னும், (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தை (உம்மீது) இறக்கினான். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களுக்கு கடினமான தண்டனையுண்டு. அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான்.
Arabische Tafsire:
اِنَّ اللّٰهَ لَا یَخْفٰی عَلَیْهِ شَیْءٌ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ۟ؕ
நிச்சயமாக அல்லாஹ் - அவனைவிட்டு எந்த ஒரு பொருளும் மறைந்துவிட முடியாது. அது பூமியில் இருந்தாலும் சரி, வானத்திலிருந்தாலும் சரி.
Arabische Tafsire:
هُوَ الَّذِیْ یُصَوِّرُكُمْ فِی الْاَرْحَامِ كَیْفَ یَشَآءُ ؕ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
அவன் கர்ப்பப்பைகளில் தான் நாடியவாறு உங்களை உருவமைக்கிறான்; மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை.
Arabische Tafsire:
هُوَ الَّذِیْۤ اَنْزَلَ عَلَیْكَ الْكِتٰبَ مِنْهُ اٰیٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ ؕ— فَاَمَّا الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ زَیْغٌ فَیَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِیْلِهٖ ؔۚ— وَمَا یَعْلَمُ تَاْوِیْلَهٗۤ اِلَّا اللّٰهُ ۘؐ— وَالرّٰسِخُوْنَ فِی الْعِلْمِ یَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖ ۙ— كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ۚ— وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟
(நபியே!) அவன் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான். அதில் பொருள் தெளிவான (முஹ்கம்) வசனங்கள் உள்ளன. அவைதான் வேதத்தின் அடிப்படையாகும். இன்னும், பொருள் தெரிய முடியாத வேறு (முதஷாபிஹ்) வசனங்களும் உள்ளன. ஆக, தங்கள் உள்ளங்களில் கோணல், (சந்தேகம்) உள்ளவர்கள் குழப்பத்தை தேடியும் (மறைக்கப்பட்ட) அதன் விளக்கத்தை தேடியும் அதில் பொருள் தெரியமுடியாதவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதன் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அறியமாட்டார். கல்வியில் தேர்ச்சியடைந்தவர்களோ, “அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (முஹ்கம், முதஷாபிஹ்) எல்லாம் எங்கள் இறைவனிடமிருந்துதான் (இறக்கப்பட்டவை)’’ என்று கூறுவார்கள். நிறைவான அறிவுடையவர்களைத் தவிர (யாரும்) நல்லுபதேசம் பெறமாட்டார்.
Arabische Tafsire:
رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَیْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ— اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ ۟
“எங்கள் இறைவா! நீ எங்களை நேர்வழி செலுத்திய பின்னர் எங்கள் உள்ளங்களை கோணலாக்கிவிடாதே! இன்னும், உன்னிடமிருந்து (உனது) கருணையை எங்களுக்கு வழங்கு! நிச்சயமாக நீதான் மகா கொடைவள்ளல் ஆவாய்!
Arabische Tafsire:
رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠
“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ ஒரு நாளில் மக்களை ஒன்று சேர்ப்பாய். அதில் அறவே சந்தேகம் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்கை மீற மாட்டான்.’’
Arabische Tafsire:
 
Übersetzung der Bedeutungen Surah: Āl ʿImrān
Inhaltsverzeichnis der Suren Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen des edlen Qurans - Tamilische Übersetzung - Omar Sharif - Inhaltsverzeichnis der Übersetzungen

Übersetzung von Sh. ʿUmar Sharif ibn ʿAbd As-Salām.

Schließen