Check out the new design

Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans * - Übersetzungen


Übersetzung der Bedeutungen Surah / Kapitel: An-Nisāʾ   Vers:
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ— وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِیْلًا ۟
4.122. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய நெருக்கத்தைப் பெற்றுத்தரும் நற்செயல்களில் ஈடுபட்டவர்களை நாம் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வோம். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அவனுடைய வாக்குறுதி உண்மையாகும். அவன் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை. அல்லாஹ்வைவிட சொல்லில் உண்மையானவன் யாரும் இல்லை.
Arabische Interpretationen von dem heiligen Quran:
لَیْسَ بِاَمَانِیِّكُمْ وَلَاۤ اَمَانِیِّ اَهْلِ الْكِتٰبِ ؕ— مَنْ یَّعْمَلْ سُوْٓءًا یُّجْزَ بِهٖ ۙ— وَلَا یَجِدْ لَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
4.123. முஸ்லிம்களே! பாதுகாப்பும் வெற்றியும் நீங்கள் விரும்புவது போன்றோ வேதக்காரர்கள் விரும்புவது போன்றோ அல்ல. அது செயல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். உங்களில் தீய செயல் புரிந்தவர் மறுமை நாளில் கூலி வழங்கப்படுவார். அல்லாஹ்வைத் தவிர பயனளிக்கும் வேறு பொறுப்பாளனையோ அவரை விட்டு துன்பத்தை அகற்றும் உதவியாளனையோ அவர்கள் பெற மாட்டார்கள்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ نَقِیْرًا ۟
4.124. ஆணாயினும் பெண்ணாயினும் உண்மையாகவே அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தால் அவர்கள்தான் சுவனத்தில் நுழைவார்கள். அவர்கள் செய்த நன்மைகளில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது. அது பேரீச்சங்கொட்டையின் மேற்புறத்தில் இருக்கும் புள்ளியின் அளவாக இருந்தாலும் சரியே.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَمَنْ اَحْسَنُ دِیْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ— وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِیْمَ خَلِیْلًا ۟
4.125. வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அல்லாஹ் விதித்தவற்றைப் பின்பற்றி, தூய்மையான எண்ணம் வைத்து, நற்செயல் புரிந்து இணைவைப்பையும் நிராகரிப்பையும் விட்டு முற்றிலும் நீங்கி, முஹம்மத் (ஸல்) அவர்களது மார்க்கத்தின் மூலமான இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுபவரை விட சிறந்த மார்க்கத்தையுடையவர் வேறு யாரும் இல்லை. தனது பூரண அன்புக்குரியவராக இப்ராஹீம் (அலை) அவர்களை தனது படைப்பினங்களிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொண்டான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطًا ۟۠
4.126. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் உரிமை அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அல்லாஹ் அறிவிலும் ஆற்றலிலும் நிர்வகிப்பதிலும் ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்துள்ளான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَیَسْتَفْتُوْنَكَ فِی النِّسَآءِ ؕ— قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِیْهِنَّ ۙ— وَمَا یُتْلٰی عَلَیْكُمْ فِی الْكِتٰبِ فِیْ یَتٰمَی النِّسَآءِ الّٰتِیْ لَا تُؤْتُوْنَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُوْنَ اَنْ تَنْكِحُوْهُنَّ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الْوِلْدَانِ ۙ— وَاَنْ تَقُوْمُوْا لِلْیَتٰمٰی بِالْقِسْطِ ؕ— وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ كَانَ بِهٖ عَلِیْمًا ۟
4.127. தூதரே! அவர்கள் பெண்களைக் குறித்தும் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளைக் குறித்தும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “நீங்கள் கேட்டதை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். உங்களின் பொறுப்புகளிலுள்ள அநாதைப் பெண்களைக்குறித்தும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மணக்கொடையையோ அனந்தரச்சொத்தையோ அளிக்காமல் அவர்களை மணமுடிப்பதை நீங்கள் விரும்பாதததோடு அவர்களின் செல்வங்களுக்கு ஆசைப்பட்டு அவர்களை மணமுடிப்பதையும் தடுத்துவைத்துக் கொள்வதைக் குறித்து அல்லாஹ்வின் வேதத்தில் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுபவற்றையும் தெளிவுபடுத்துகிறான். பலவீனமான சிறுவர்களுக்கு அளிக்க வேண்டிய வாரிசுரிமைக் குறித்தும் நீங்கள் அவர்களின் செல்வங்களைப் பிடுங்கி அவர்களின்மீது அநீதி இழைத்துவிடக்கூடாது என்பது குறித்தும் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அநாதைகளின் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுடன் நீதமாக நடந்துகொள்வதன் அவசியத்தையும் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். நீங்கள் அநாதைகளுக்கோ மற்றவர்களுக்கோ செய்யும் நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
Die Nutzen der Versen in dieser Seite:
• ما عند الله من الثواب لا يُنال بمجرد الأماني والدعاوى، بل لا بد من الإيمان والعمل الصالح.
1. அல்லாஹ்விடம் உள்ள நன்மைகளை வெற்று ஆசைகளாலும் வாதங்களாலும் பெற்றுவிட முடியாது. மாறாக ஈமானும் நற்செயலும் மிக அவசியமாகும்.

• الجزاء من جنس العمل، فمن يعمل سوءًا يُجْز به، ومن يعمل خيرًا يُجْز بأحسن منه.
2. செயலுக்கேற்ப கூலி வழங்கப்படும். தீய செயல் புரிந்தவர் அதற்கேற்பவே தண்டிக்கப்படுவார். நற்செயல் புரிந்தவர் அதைவிட சிறந்தமுறையில் கூலி வழங்கப்படுவார்.

• الإخلاص والاتباع هما مقياس قبول العمل عند الله تعالى.
3. உளத்தூய்மையும் சரியானவிதத்தில் பின்பற்றுதலுமே அல்லாஹ்விடம் நற்செயல் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான அளவீடாகும்.

• عَظّمَ الإسلام حقوق الفئات الضعيفة من النساء والصغار، فحرم الاعتداء عليهم، وأوجب رعاية مصالحهم في ضوء ما شرع.
4. பெண்கள், குழந்தைகள் போன்ற பலவீனர்களின் உரிமைகளில் இஸ்லாம் விஷேட கவனம் செலுத்துகின்றது. எனவேதான், அவர்களுக்கு அநீதி இழைப்பதைத் தடைசெய்து, மார்க்க அடிப்படையில் அவர்களின் நலன்களைப் பராமரிப்பதைக் கடமையாக்கியுள்ளது.

 
Übersetzung der Bedeutungen Surah / Kapitel: An-Nisāʾ
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans - Übersetzungen

Vom Tafsirzentrum für Quranwissenschaften herausgegeben.

Schließen