Check out the new design

Übersetzung der Bedeutungen des edlen Qurans - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans * - Inhaltsverzeichnis der Übersetzungen


Übersetzung der Bedeutungen Surah: An-Nisāʾ   Vers (Ayah):
لَا خَیْرَ فِیْ كَثِیْرٍ مِّنْ نَّجْوٰىهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍ بَیْنَ النَّاسِ ؕ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟
4.114. அவர்கள் இரகசியமாகப் பேசும் பெரும்பாலான விஷயங்களில் எந்த நன்மையும் பயனும் இல்லை. ஆயினும் அவர்களின் பேச்சுகள் தர்மம் செய்யத் தூண்டுதல் அல்லது மார்க்கமும் அறிவும் கூறும் நல்ல விஷயங்களைச் செய்யத் தூண்டுதல் அல்லது முரண்பட்டவர்களிடையே சமாதானத்திற்கான அழைப்பு விடுத்தல் ஆகியவற்றிற்காக இருந்தாலே தவிர. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவ்வாறு செய்பவர்களுக்கு விரைவில் நாம் பெரும் நன்மைகளை வழங்கிடுவோம்.
Arabische Tafsire:
وَمَنْ یُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُ الْهُدٰی وَیَتَّبِعْ غَیْرَ سَبِیْلِ الْمُؤْمِنِیْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰی وَنُصْلِهٖ جَهَنَّمَ ؕ— وَسَآءَتْ مَصِیْرًا ۟۠
4.115. யார் தூதருடன் முரண்பட்டு, அவர் கொண்டு வந்தது சத்தியம்தான் என்பதைத் தெளிவாக அறிந்தபின்னரும் அதற்கு மாறாகச் செயல்படுவாரோ, நம்பிக்கைகொண்டவர்களின் பாதையை விடுத்து வேறு பாதையைப் பின்பற்றிச் செல்வாரோ - அவர் தமக்காக தேர்ந்தெடுத்தவற்றிலேயே அவரை நாம் விட்டுவிடுவோம். வேண்டுமென்றே அவர் சத்தியத்தை மறுத்ததனால் நாம் அவருக்கு வழிகாட்ட மாட்டோம். அவரை நரகத்தில் பிரவேசிக்கச் செய்வோம். அதன் வெப்பத்தை அவர் அனுபவிப்பார். நரகவாதிகளுக்கு அது மோசமான திரும்புமிடமாகும்.
Arabische Tafsire:
اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ؕ— وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِیْدًا ۟
4.116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக மற்றவர்கள் ஆக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். மாறாக இணைவைப்பவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார். இந்த இணைவைப்பைத்தவிர மற்ற பாவங்களை தான் நாடியவர்களுக்கு தன் அருளால் அவன் மன்னித்துவிடுகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக வேறு ஒருவரை ஆக்கிக்கொண்டவர் சத்தியத்தைவிட்டும் தூரமான வழிகேட்டில் விழுந்துவிட்டார். ஏனெனில் அவர் படைப்பாளனையும் படைப்புகளையும் சரிசமமாக்கிவிட்டார்.
Arabische Tafsire:
اِنْ یَّدْعُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اِنٰثًا ۚ— وَاِنْ یَّدْعُوْنَ اِلَّا شَیْطٰنًا مَّرِیْدًا ۟ۙ
4.117. இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வுடன் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட - லாத், உஸ்ஸா - போன்ற பெண்களின் பெயர்களைத் தாங்கிய சிலைகளையே வணங்குகிறார்கள். அவற்றால் அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ பலனளிக்கவோ முடியாது. உண்மையில் அவர்கள் தன் இறைவனின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்ட விரட்டப்பட்ட எவ்வித நலவுமற்ற ஷைத்தானையே வணங்குகிறார்கள். ஏனெனில் அவன்தான் சிலைகளை வணங்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
Arabische Tafsire:
لَّعَنَهُ اللّٰهُ ۘ— وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِیْبًا مَّفْرُوْضًا ۟ۙ
4.118. எனவேதான் அல்லாஹ் தன் அருளைவிட்டும் அவனைத் துரத்திவிட்டான். இந்த ஷைத்தான் தன் இறைவனிடம் சத்தியம் செய்தவனாகக் கூறினான், “உன் அடியார்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை நான் சத்தியத்தைவிட்டு பிறழச்செய்தே தீருவேன்.
Arabische Tafsire:
وَّلَاُضِلَّنَّهُمْ وَلَاُمَنِّیَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُبَتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُغَیِّرُنَّ خَلْقَ اللّٰهِ ؕ— وَمَنْ یَّتَّخِذِ الشَّیْطٰنَ وَلِیًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِیْنًا ۟ؕ
4.119. உன் நேரான வழியைவிட்டும் அவர்களைத் தடுத்திடுவேன். அவர்களின் வழிகேடுகளை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டும் பொய்யான வாக்குறுதிகளின் மூலம் அவர்களுக்கு ஆசைவார்த்தைகளை கூறுவேன். அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்வதற்காக அவர்களுடைய கால்நடைகளின் காதுகளை அறுக்குமாறு கட்டளையிடுவேன். அல்லாஹ்வின் படைப்பையும் அதன் இயல்பையும் மாற்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிடுவேன்.” விரட்டப்பட்ட ஷைத்தானை தான் கட்டுப்படும் நேசிக்கும் தோழனாக ஆக்கிக்கொண்டவர் தெளிவான இழப்பிற்கு உள்ளாகிவிட்டார்.
Arabische Tafsire:
یَعِدُهُمْ وَیُمَنِّیْهِمْ ؕ— وَمَا یَعِدُهُمُ الشَّیْطٰنُ اِلَّا غُرُوْرًا ۟
4.120. ஷைத்தான் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறான். தவறான ஆசைகளை ஊட்டுகிறான். உண்மையில் ஷைத்தான் அடிப்படையற்ற தவறான வாக்குறுதிகளையே அளிக்கிறான்.
Arabische Tafsire:
اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؗ— وَلَا یَجِدُوْنَ عَنْهَا مَحِیْصًا ۟
4.121. ஷைத்தானின் எட்டுக்களையும் அவன் கூறுபவற்றையும் பின்பற்றுவோரின் தங்குமிடம் நரக நெருப்பேயாகும். அவர்கள்விரண்டோடுவதற்கான எந்த இடத்தையும் பெற மாட்டார்கள்.
Arabische Tafsire:
Die Nutzen der Verse auf dieser Seite:
• أكثر تناجي الناس لا خير فيه، بل ربما كان فيه وزر، وقليل من كلامهم فيما بينهم يتضمن خيرًا ومعروفًا.
1. மக்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுகளில் எந்த நன்மையும் இல்லை. சில சமயங்களில் அவை பாவமாகவும் அமைந்துவிடுகிறது. தமக்கு மத்தியில் பேசும் அவர்களின் சில பேச்சுக்களில் மாத்திரமே நன்மையான விஷயங்கள் அடங்கியுள்ளன.

• معاندة الرسول صلى الله عليه وسلم ومخالفة سبيل المؤمنين نهايتها البعد عن الله ودخول النار.
2. தூதருடன் முரண்படுவது, நம்பிக்கைகொண்டவர்களின் பாதைக்கு மாறான பாதையில் செல்வதன் முடிவு அல்லாஹ்வை விட்டுத் தூரமாகி நரகத்தில் நுழைவதேயாகும்.

• كل الذنوب تحت مشيئة الله، فقد يُغفر لصاحبها، إلا الشرك، فلا يغفره الله أبدًا، إذا لم يتب صاحبه ومات عليه.
3. ஷிர்க்கைத் தவிர அனைத்து பாவங்களையும் அல்லாஹ் நாடினால் மன்னித்துவிடுவான். ஷிர்க்கை மட்டும் தவ்பா செய்து திருந்தாமல் அதிலே மரணித்தால் அவன் மன்னிக்கவே மாட்டான்.

• غاية الشيطان صرف الناس عن عبادة الله تعالى، ومن أعظم وسائله تزيين الباطل بالأماني الغرارة والوعود الكاذبة.
4. அல்லாஹ்வை வணங்குவதைவிட்டும் மக்களைத் தடுப்பதே ஷைத்தானின் நோக்கமாகும். அதற்கான அவனது பிரதான சாதனம்தான், ஏமாற்றுதல், ஆசைகாட்டுதல்கள், பொய்யான வாக்குறுதிகள் மூலம் அசத்தியத்தை அலங்கரித்துக் காட்டுவதாகும்.

 
Übersetzung der Bedeutungen Surah: An-Nisāʾ
Inhaltsverzeichnis der Suren Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen des edlen Qurans - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans - Inhaltsverzeichnis der Übersetzungen

Vom Tafsirzentrum für Quranwissenschaften herausgegeben.

Schließen