Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - የትርጉሞች ማውጫ

XML CSV Excel API
Please review the Terms and Policies

የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ዩሱፍ   አንቀፅ:
قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَیْهِ اِلَّا كَمَاۤ اَمِنْتُكُمْ عَلٰۤی اَخِیْهِ مِنْ قَبْلُ ؕ— فَاللّٰهُ خَیْرٌ حٰفِظًا ۪— وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟
(யஅகூப்,) “முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பியது போல் தவிர இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? அல்லாஹ் மிக மேலான பாதுகாவலன்; அருள் புரிபவர்களில் அவன் மிக அதிகம் அருள் புரிபவன்” என்று கூறினார்.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَیْهِمْ ؕ— قَالُوْا یٰۤاَبَانَا مَا نَبْغِیْ ؕ— هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَیْنَا ۚ— وَنَمِیْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَیْلَ بَعِیْرٍ ؕ— ذٰلِكَ كَیْلٌ یَّسِیْرٌ ۟
அவர்கள் தங்கள் பொருளை திறந்தபோது தங்கள் கிரயம் தங்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு “எங்கள் தந்தையே! நாம் (இதற்கு மேல்) என்ன தேடுகிறோம்? இதோ! நம் கிரய(மு)ம் நம்மிடமே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. (தர்மமும் கிடைத்துள்ளது. ஆகவே புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தருவீராக!) நம் குடும்பத்திற்கு (தேவையான) தானியங்களைக் கொண்டு வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றுவோம். (அவருக்காக) ஓர் ஒட்டகத்தின் அளவையும் அதிகமாக்குவோம். இது (அவருக்கு) ஓர் இலகுவான அளவைதான்” என்று கூறினர்.
ዓረብኛ ተፍሲሮች:
قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰی تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَتَاْتُنَّنِیْ بِهٖۤ اِلَّاۤ اَنْ یُّحَاطَ بِكُمْ ۚ— فَلَمَّاۤ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟
“உங்களுக்கு அழிவு ஏற்பட்டால் தவிர நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று அல்லாஹ்வின் (மீது சத்தியம் செய்து) ஓர் உறுதிமானத்தை நீங்கள் எனக்கு கொடுக்கும் வரை அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்கு தங்கள் உறுதிமானத்தை கொடுக்கவே அவர் “நாம் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளன் (இன்னும் பொறுப்பாளன்) ஆவான்” என்று கூறினார்.
ዓረብኛ ተፍሲሮች:
وَقَالَ یٰبَنِیَّ لَا تَدْخُلُوْا مِنْ بَابٍ وَّاحِدٍ وَّادْخُلُوْا مِنْ اَبْوَابٍ مُّتَفَرِّقَةٍ ؕ— وَمَاۤ اُغْنِیْ عَنْكُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ— اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ— عَلَیْهِ تَوَكَّلْتُ ۚ— وَعَلَیْهِ فَلْیَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ۟
“என் பிள்ளைகளே! (எகிப்தில் நுழையும் போது) ஒரே ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள். (தனித் தனியாக) பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் நான் உங்களை விட்டும் தடுக்க முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறெவருக்கும்) இல்லை. நான் அவன் மீதே நம்பிக்கை வைத்துவிட்டேன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே நம்பிக்கை வைக்கவும்” என்று கூறினார்.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَمَّا دَخَلُوْا مِنْ حَیْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْ ؕ— مَا كَانَ یُغْنِیْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ اِلَّا حَاجَةً فِیْ نَفْسِ یَعْقُوْبَ قَضٰىهَا ؕ— وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠
அவர்கள் தங்கள் தந்தை கட்டளையிட்ட முறையில் நுழைந்த போது, யஅகூபுடைய மனதிலிருந்த ஒரு தேவையை அவர் நிறைவேற்றியதைத் தவிர அது அவர்களைவிட்டும் அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய வேறு) எதையும் தடுப்பதாக இல்லை. நிச்சயமாக அவர் நாம் அவருக்கு கற்பித்த காரணத்தால் அறிவுடையவர் ஆவார். ஆனால் மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَخَاهُ قَالَ اِنِّیْۤ اَنَا اَخُوْكَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது, அவர் தன் சகோதரனை தன் பக்கம் ஒதுக்கி (அணைத்து)க் கொண்டார். “நிச்சயமாக நான்தான் உம் சகோதரன். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி வேதனைப் படாதே!” என்று கூறினார்.
ዓረብኛ ተፍሲሮች:
 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ዩሱፍ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - የትርጉሞች ማውጫ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

ለመዝጋት