Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - የትርጉሞች ማውጫ

XML CSV Excel API
Please review the Terms and Policies

የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አር-ረዕድ   አንቀፅ:

அர்ரஃத்

الٓمّٓرٰ ۫— تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ ؕ— وَالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
அலிஃப்; லாம்; மீம்; றா. இவை வேதத்தின் வசனங்களாகும். (நபியே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது உண்மைதான். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
اَللّٰهُ الَّذِیْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَیْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ— كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ— یُدَبِّرُ الْاَمْرَ یُفَصِّلُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ ۟
அல்லாஹ்தான், வானங்களை தூண்கள் இன்றி உயர்த்தியவன்! அதை நீங்கள் காண்கிறீர்கள். பிறகு அர்ஷின் மேல் உயர்ந்து விட்டான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிடப்பட்ட ஒரு தவணையின் பக்கம் ஓடுகின்றன. காரியத்தை திட்டமிடுகிறான். நீங்கள் உங்கள் இறைவனின் சந்திப்பை உறுதி கொள்ள வேண்டும் என்பதற்காக (தன்) வசனங்களை (உங்களுக்கு) விவரிக்கிறான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَهُوَ الَّذِیْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ وَاَنْهٰرًا ؕ— وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِیْهَا زَوْجَیْنِ اثْنَیْنِ یُغْشِی الَّیْلَ النَّهَارَ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
அவன்தான் பூமியை விரித்தவன்; அதில் மலைகளையும் ஆறுகளையும் அமைத்தவன். அவற்றில் எல்லாக் கனிகளிலும் இரண்டு ஜோடிகளை ஆக்கினான். இரவால் பகலை மூடுகின்றான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
ዓረብኛ ተፍሲሮች:
وَفِی الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِیْلٌ صِنْوَانٌ وَّغَیْرُ صِنْوَانٍ یُّسْقٰی بِمَآءٍ وَّاحِدٍ ۫— وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰی بَعْضٍ فِی الْاُكُلِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
பூமியில் ஒன்றுக்கொன்று நெருக்கமான பகுதிகளும், திராட்சைகளின் தோட்டங்களும், விவசாய (நில)மும், கிளைகள் நிறைந்த இன்னும் கிளைகள் அற்ற பேரீச்ச மரங்களும் உள்ளன. (அனைத்தும்) ஒரே நீரைக் கொண்டு (நீர்) புகட்டப்படுகிறது. அவற்றில் சிலவற்றை சிலவற்றைவிட சுவையில் மேன்மை ஆக்குகின்றோம். இதில், சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன.
ዓረብኛ ተፍሲሮች:
وَاِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ ۚ— وَاُولٰٓىِٕكَ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ ۚ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
(நபியே! இணைவைப்பாளர்கள் சிலைகளை வணங்குவதைப் பற்றி) நீர் ஆச்சரியப்பட்டால், “நாம் (இறந்து மண்ணோடு) மண்ணாக ஆகிவிட்டால், (அதற்கு பின்னர்) புதிய படைப்பில் நிச்சயமாக நாம் உருவாக்கப்படுவோமா?” என்ற அவர்களுடைய கூற்றும் (அதிகம்) ஆச்சரியமானதே! இவர்கள்தான் தங்கள் இறைவனை நிராகரித்தவர்கள். இவர்களுடைய கழுத்துகளில்தான் அரிகண்டங்கள் இருக்கும். இவர்கள்தான் நரகவாசிகள்! அதில் இவர்கள் நிரந்தரமானவர்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَیَسْتَعْجِلُوْنَكَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلٰتُ ؕ— وَاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلٰی ظُلْمِهِمْ ۚ— وَاِنَّ رَبَّكَ لَشَدِیْدُ الْعِقَابِ ۟
(நபியே!) உம்மிடம் நல்லதிற்கு முன்னர் கெட்டதை அவசரமாகத் தேடுகின்றனர். தண்டனைகள் இவர்களுக்கு முன்னர் (பலருக்கு) சென்றுள்ளன. நிச்சயமாக உம் இறைவன் (திருந்திவிடுகிற) மக்களை மன்னிப்பவன்தான், அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும். (திருந்தாத பாவிகளுக்கு) நிச்சயமாக உம் இறைவன் தண்டனை (வழங்குவதில்) கடுமையானவன்.
ዓረብኛ ተፍሲሮች:
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ— اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرٌ وَّلِكُلِّ قَوْمٍ هَادٍ ۟۠
“(நபியே!) நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி) “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்(கள்). (நபியே!) நீர் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். எல்லா மக்களுக்கும் (அவர்களை வழி நடத்துகின்ற ஒரு) தலைவர் உண்டு.
ዓረብኛ ተፍሲሮች:
اَللّٰهُ یَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُنۡثٰى وَمَا تَغِیْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ؕ— وَكُلُّ شَیْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ ۟
ஒவ்வொரு பெண் (கர்ப்பத்தில்) சுமப்பதையும் கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் காலம்) குறைவதையும், அவை அதிகமாவதையும் அல்லாஹ் அறிகின்றான். எல்லாம் அவனிடம் (குறிக்கப்பட்ட) ஓர் அளவில் இருக்கின்றன.
ዓረብኛ ተፍሲሮች:
عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْكَبِیْرُ الْمُتَعَالِ ۟
(அவன்) மறைவையும் வெளிப்படையையும் அறிந்தவன்; மிகப் பெரியவன்; மிக உயர்ந்தவன்.
ዓረብኛ ተፍሲሮች:
سَوَآءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍ بِالَّیْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ ۟
உங்களில் (தன்) பேச்சை ரகசியப்படுத்தியவனும் அதை பகிரங்கப்படுத்தியவனும் இரவில் (தனது தீமைகளை) மறைத்து செய்து பகலில் (நல்லவனாக) வெளிப்படுபவனும் அ(ந்த இறை)வனுக்குச் சமமே!
ዓረብኛ ተፍሲሮች:
لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ یَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُغَیِّرُ مَا بِقَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ؕ— وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْٓءًا فَلَا مَرَدَّ لَهٗ ۚ— وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ ۟
(மனிதனாகிய) அவனுக்கு முன்னும், அவனுக்குப் பின்னும் தொடரக்கூடிய (கா)வ(ல)ர்கள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய (தண்டனை எனும்) கட்டளையிலிருந்து அவனை பாதுகாக்(க முயற்சிக்)கின்றனர். நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்திடமுள்ளதை மாற்றமாட்டான், அவர்கள் தங்களிடமுள்ளதை மாற்றுகின்றவரை. அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு அழிவை நாடினால், (எவராலும்) அதை தடுப்பது அறவே முடியாது; அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர் எவரும் இல்லை.
ዓረብኛ ተፍሲሮች:
هُوَ الَّذِیْ یُرِیْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّیُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ ۟ۚ
அவன் உங்க(ளில் பயணிக)ளுக்கு மின்னலை பயமாகவும் (மற்றவர்களுக்கு) ஆசையாகவும் காட்டுகின்றான். (மழையைச் சுமந்த) கனமான மேகங்களை கிளப்புகின்றான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَیُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰٓىِٕكَةُ مِنْ خِیْفَتِهٖ ۚ— وَیُرْسِلُ الصَّوَاعِقَ فَیُصِیْبُ بِهَا مَنْ یَّشَآءُ وَهُمْ یُجَادِلُوْنَ فِی اللّٰهِ ۚ— وَهُوَ شَدِیْدُ الْمِحَالِ ۟ؕ
இடியும், வானவர்களும் அவனுடைய பயத்தால் அவனைப் புகழ்ந்து துதிக்கின்றனர். அவர்களோ (-அம்மக்களோ) அல்லாஹ்வைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்க, அவனே அபாயங்களை அனுப்பி, அவற்றைக் கொண்டு அவன் நாடியவர்களை வேறறுக்கிறான். அவன் (ஆற்றலும்) பிடி(யும்) கடுமையானவன்.
ዓረብኛ ተፍሲሮች:
لَهٗ دَعْوَةُ الْحَقِّ ؕ— وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَجِیْبُوْنَ لَهُمْ بِشَیْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّیْهِ اِلَی الْمَآءِ لِیَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهٖ ؕ— وَمَا دُعَآءُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟
(பலன் தரும்) உண்மைப் பிரார்த்தனை அவனுக்கே உரியது. (மக்கள்) அவனையன்றி எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் அவர்களுக்கு எதையும் பதில் தரமாட்டார்கள். தண்ணீர் பக்கம் தன் இரு கைகளையும் அது (தானாகவே) தன் வாயை அடைவதற்காக விரிப்பவனைப் போன்றே தவிர (இவர்களின் செயல் வேறில்லை). அதுவோ (ஒரு போதும்) அதை அடையாது. (சிலைகளை அழைக்கும்) நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர வேறில்லை. (அவை அவர்களுக்கு எப்பலனையும் அளிக்காது.)
ዓረብኛ ተፍሲሮች:
وَلِلّٰهِ یَسْجُدُ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟
வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் ஆசையாகவும், நிர்பந்தமாகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிகின்றனர்; காலை(களில்) இன்னும் மாலைகளில் அவர்களின் நிழல்களும் (அவனுக்கே சிரம் பணிகின்றன).
ዓረብኛ ተፍሲሮች:
قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— قُلِ اللّٰهُ ؕ— قُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ لَا یَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّا ؕ— قُلْ هَلْ یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬— اَمْ هَلْ تَسْتَوِی الظُّلُمٰتُ وَالنُّوْرُ ۚ۬— اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَیْهِمْ ؕ— قُلِ اللّٰهُ خَالِقُ كُلِّ شَیْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ ۟
(நபியே!) “வானங்கள் இன்னும் பூமியின் இறைவன் யார்?” என்று கூறுவீராக! (அவன்) “அல்லாஹ்”என்று கூறுவீராக! “அவனை அன்றி தங்களுக்கு நன்மை செய்வதற்கும் தீங்கு செய்வதற்கும் உரிமைபெறாத பாதுகாவலர்களை அல்லவா நீங்கள் (தெய்வங்களாக) எடுத்துக் கொண்டீர்கள்?” என்றும் கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும் ஒளியும் சமமாகுமா?” அல்லது அவர்கள் அல்லாஹ்விற்கு இணை(தெய்வங்)களை ஆக்கினார்களே அவை அவனுடைய படைப்பைப் போன்று (எதையும்) படைத்து, அதனால் இவர்கள் மீது படைப்பது (யார் என்பது) குழப்பமடைந்ததா? என்று கூறுவீராக! கூறுவீராக! அல்லாஹ்தான் எல்லாவற்றின் படைப்பாளன் அவன்தான் ஒருவன், அடக்கி ஆளுபவன்.
ዓረብኛ ተፍሲሮች:
اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِیَةٌ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّیْلُ زَبَدًا رَّابِیًا ؕ— وَمِمَّا یُوْقِدُوْنَ عَلَیْهِ فِی النَّارِ ابْتِغَآءَ حِلْیَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ ؕ— كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْحَقَّ وَالْبَاطِلَ ؕ۬— فَاَمَّا الزَّبَدُ فَیَذْهَبُ جُفَآءً ۚ— وَاَمَّا مَا یَنْفَعُ النَّاسَ فَیَمْكُثُ فِی الْاَرْضِ ؕ— كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ ۟ؕ
அவன் மேகத்திலிருந்து மழையை இறக்கினான். ஆக, ஓடைகள் அவற்றின் அளவிற்கு ஓடின. ஆக, அந்த வெள்ளம், மிதக்கும் நுரைகளை சுமந்து வந்தது. ஓர் ஆபரணத்தை அல்லது ஒரு (உலோகப்) பொருளை (செய்ய) நாடி நெருப்பில் (தங்கம், வெள்ளி, பித்தளை போன்றவற்றை) அவர்கள் பழுக்க வைப்பதிலும் அது போன்ற (அழுக்கு) நுரை உண்டு. இப்படித்தான் சத்தியத்தையும் அசத்தியத்தையும் அல்லாஹ் விவரிக்கிறான். ஆக, நுரை வீணானதாக செல்கிறது. மனிதனுக்கு எது பலனளிக்கிறதோ அது பூமியில் தங்குகிறது. இவ்வாறே அல்லாஹ் உவமைகளை விவரிக்கிறான்.
ዓረብኛ ተፍሲሮች:
لِلَّذِیْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمُ الْحُسْنٰی ؔؕ— وَالَّذِیْنَ لَمْ یَسْتَجِیْبُوْا لَهٗ لَوْ اَنَّ لَهُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ سُوْٓءُ الْحِسَابِ ۙ۬— وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمِهَادُ ۟۠
தங்கள் இறைவனுக்கு பதிலளித்தவர்களுக்கு மிக அழகிய நன்மை உண்டு. அவனுக்குப் பதிலளிக்காதவர்களுக்கு பூமியிலுள்ளவை அனைத்தும் இன்னும் அதுபோன்றதும் இருந்திருந்தால், (நரகத்திலிருந்து தப்பிக்க) அதை பிணை கொடுத்திருப்பார்கள். அவர்களுக்கு கடினமான விசாரணை உண்டு. அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடத்தால் மிகக் கெட்டு விட்டது.
ዓረብኛ ተፍሲሮች:
اَفَمَنْ یَّعْلَمُ اَنَّمَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ اَعْمٰی ؕ— اِنَّمَا یَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ۟ۙ
உம் இறைவனால் உமக்கு இறக்கப்பட்டதெல்லாம் உண்மைதான் என்று அறிகின்றவர் குருடரைப் போன்று ஆவாரா? (ஆகவே மாட்டார்.) நல்லுபதேசம் பெறுவதெல்லாம் அறிவுடையவர்கள்தான்.
ዓረብኛ ተፍሲሮች:
الَّذِیْنَ یُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا یَنْقُضُوْنَ الْمِیْثَاقَ ۟ۙ
(அந்த அறிவாளிகள்) அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள், உடன் படிக்கையை முறிக்க மாட்டார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَالَّذِیْنَ یَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیَخْشَوْنَ رَبَّهُمْ وَیَخَافُوْنَ سُوْٓءَ الْحِسَابِ ۟ؕ
(அந்த அறிவாளிகள்) அல்லாஹ் சேர்க்கப்பட வேண்டும் என ஏவிய (சொந்த பந்தத்)தை சேர்ப்பார்கள்; தங்கள் இறைவனைப் பற்றி அச்சம் கொள்வார்கள்; கடினமான விசாரணையைப் பயப்படுவார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَالَّذِیْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً وَّیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ اُولٰٓىِٕكَ لَهُمْ عُقْبَی الدَّارِ ۟ۙ
(அந்த அறிவாளிகள்) தங்கள் இறைவனின் முகத்தை நாடி பொறு(த்திரு)ப் பவர்கள்; தொழுகையை நிலைநிறுத்து பவர்கள்; நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் புரிபவர்கள்; நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பவர்கள். இ(த்தகைய)வர்கள் இவர்களுக்குத்தான் மறுமையின் (நல்ல, அழகிய) முடிவுண்டு.
ዓረብኛ ተፍሲሮች:
جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّیّٰتِهِمْ وَالْمَلٰٓىِٕكَةُ یَدْخُلُوْنَ عَلَیْهِمْ مِّنْ كُلِّ بَابٍ ۟ۚ
(நல்ல முடிவு என்பது) “அத்ன்” சொர்க்கங்கள் ஆகும். அதில் இவர்களும், இவர்களுடைய மூதாதைகளில், இவர்களுடைய மனைவிகளில், இவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் நுழைவார்கள். ஒவ்வொரு வாசலில் இருந்தும் வானவர்கள் இவர்களிடம் நுழைவார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
سَلٰمٌ عَلَیْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَی الدَّارِ ۟ؕ
“நீங்கள் பொறுமையாக இருந்த காரணத்தால் உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக! (உங்களுக்கு அமைந்த இந்த சொர்க்கலோக) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று” (என்று கூறுவார்கள்).
ዓረብኛ ተፍሲሮች:
وَالَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِیْثَاقِهٖ وَیَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ۙ— اُولٰٓىِٕكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ ۟
அல்லாஹ்வின் வாக்குறுதியை அது உறுதியான பின்னர் முறிப்பவர்கள், சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவிய (சொந்த பந்தத்)தை துண்டிப்பவர்கள், பூமியில் விஷமம் (-கொலை, கொள்ளை, கலகம்) செய்பவர்கள் ஆகிய இவர்கள் இவர்களுக்கு சாபம்தான். இன்னும் இவர்களுக்கு (நரகலோகத்தில்) மிகக் கெட்ட வீடு உண்டு.
ዓረብኛ ተፍሲሮች:
اَللّٰهُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ— وَفَرِحُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَمَا الْحَیٰوةُ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ ۟۠
அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்க்கை வசதியை விரிவுபடுத்துகிறான். (தான் நாடுகின்றவர்களுக்கு அதை) சுருக்குகிறான். (நிராகரிப்பவர்கள்) உலக வாழ்வைக் கொண்டு மகிழ்கின்றனர். உலக வாழ்வு மறுமையில் (கிடைக்கும் சுகத்தோடு ஒப்பிடப்படும் போது) ஒரு (சொற்ப) சுகமே தவிர வேறில்லை.
ዓረብኛ ተፍሲሮች:
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ— قُلْ اِنَّ اللّٰهَ یُضِلُّ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ اَنَابَ ۟ۖۚ
நிராகரித்தவர்கள், “இவர் (-இத்தூதர்) மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறான். தன் பக்கம் திரும்பியவர்களை நேர்வழி செலுத்துகிறான்.
ዓረብኛ ተፍሲሮች:
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَتَطْمَىِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ ؕ— اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَىِٕنُّ الْقُلُوْبُ ۟ؕ
(அவர்கள்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்; அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. அல்லாஹ்வின் நினைவைக் கொண்டே உள்ளங்கள் நிம்மதியடைகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰی لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ ۟
நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தவர்கள், அவர்களுக்கு நற்பாக்கியமும் அழகிய மீளுமிடமும் உண்டு.
ዓረብኛ ተፍሲሮች:
كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِیْۤ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَاۤ اُمَمٌ لِّتَتْلُوَاۡ عَلَیْهِمُ الَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَهُمْ یَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِ ؕ— قُلْ هُوَ رَبِّیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ مَتَابِ ۟
(நபியே! முன்பு தூதர்களை அனுப்பிய) இவ்வாறே, உம்மை (நம் தூதராக) ஒரு சமுதாயத்திடம் அனுப்பினோம். இவர்களுக்கு முன்னரும் பல சமதாயங்கள் சென்றிருக்கின்றன. நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை இவர்கள் முன் நீர் ஓதுவதற்காக (அவர்களிடம் உம்மை அனுப்பினோம்). இவர்களோ ரஹ்மானை (பேரருளாளன் அல்லாஹ்வை) நிராகரிக்கின்றனர். கூறுவீராக! “அவன்தான் என் இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் மீது நம்பிக்கை வைத்தேன். இன்னும் அவனிடமே என் பாவ மீட்சி இருக்கிறது.”
ዓረብኛ ተፍሲሮች:
وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُیِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰی ؕ— بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِیْعًا ؕ— اَفَلَمْ یَایْـَٔسِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ لَّوْ یَشَآءُ اللّٰهُ لَهَدَی النَّاسَ جَمِیْعًا ؕ— وَلَا یَزَالُ الَّذِیْنَ كَفَرُوْا تُصِیْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِیْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰی یَاْتِیَ وَعْدُ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠
(நபியே! முன்னர் இறக்கப்பட்ட) ஒரு வேதம், அதைக் கொண்டு மலைகள் நகர்த்தப்பட்டிருந்தால் அல்லது அதைக் கொண்டு பூமி துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால் அல்லது அதைக் கொண்டு மரணித்தவர்கள் பேசவைக்கப்பட்டிருந்தால்... (உங்களுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தைக் கொண்டும் அப்படி செய்யப்பட்டிருக்கும்.) மாறாக, அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மக்கள் அனைவரையும் நேர்வழிபடுத்தியிருப்பான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா? (மக்காவைச் சேர்ந்த இந்)நிராகரித்தவர்கள் செய்ததின் காரணமாக அவர்களை ஒரு திடுக்கம் அடைந்து கொண்டே இருக்கும். அல்லது அவர்களின் ஊருக்கு அருகாமையில் நீர் (உம் படையுடன்) இறங்குவீர். இறுதியாக, அல்லாஹ்வின் வாக்குறுதி வரும். (விரைவில் அவர்களை நீர் வெற்றி கொள்வீர்.) நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதியை மாற்றமாட்டான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَیْتُ لِلَّذِیْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ ۫— فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
(நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்கள் திட்டமாக பரிகசிக்கப்பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு (தவணையை) நீட்டினேன். பிறகு, அவர்களைப் பிடித்தேன். என் தண்டனை எப்படி இருந்தது?
ዓረብኛ ተፍሲሮች:
اَفَمَنْ هُوَ قَآىِٕمٌ عَلٰی كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ— وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ ؕ— قُلْ سَمُّوْهُمْ ؕ— اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا یَعْلَمُ فِی الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ؕ— بَلْ زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِیْلِ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟
ஒவ்வொரு ஆன்மாவும் அவை செய்தவற்றுக்கு ஏற்ப அவற்றை நிர்வகிப்பவனா (எதையும் செய்ய சக்தியற்ற கற்பனை தெய்வங்களுக்கு சமமாவான்)? அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர்! (நபியே!) கூறுவீராக! “(நீங்கள் வணங்கும்) அவற்றுக்கு நீங்கள் பெயரிடுங்கள். (அவற்றுக்கு இறைவன் என்று பெயரிடமுடியுமா?) அல்லது பூமியில் அவன் அறியாததை அல்லது பொய்யான (வீணான) சொல்லை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அதுவும் முடியாது.) மாறாக! நிராகரித்தவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சி அலங்கரிக்கப்பட்டது. (அவர்கள் நேரான) பாதையிலிருந்து தடுக்கப்பட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் எவரும் இல்லை.
ዓረብኛ ተፍሲሮች:
لَهُمْ عَذَابٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ ۚ— وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟
அவர்களுக்கு உலக வாழ்வில் வேதனையுண்டு. மறுமையின் வேதனைதான் மிகச் சிரமமானது. அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இல்லை.
ዓረብኛ ተፍሲሮች:
مَثَلُ الْجَنَّةِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ— تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ— اُكُلُهَا دَآىِٕمٌ وَّظِلُّهَا ؕ— تِلْكَ عُقْبَی الَّذِیْنَ اتَّقَوْا ۖۗ— وَّعُقْبَی الْكٰفِرِیْنَ النَّارُ ۟
(அல்லாஹ்வை) அஞ்சியவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையாவது, அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அதன் உணவுகளும் அதன் நிழலும் (என்றுமே) நிலையானவை. இதுதான் (அல்லாஹ்வை) அஞ்சியவர்களின் (நல்ல) முடிவாகும். நிராகரிப்பாளர்களின் முடிவோ நரகம்தான்!
ዓረብኛ ተፍሲሮች:
وَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَفْرَحُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمِنَ الْاَحْزَابِ مَنْ یُّنْكِرُ بَعْضَهٗ ؕ— قُلْ اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَاۤ اُشْرِكَ بِهٖ ؕ— اِلَیْهِ اَدْعُوْا وَاِلَیْهِ مَاٰبِ ۟
(நபியே!) நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்டதைக் கொண்டு மகிழ்வார்கள். இ(வ்வேதத்)தில் சிலவற்றை மறுப்பவர்களும் (உமக்கு எதிரான) கூட்டங்களில் உண்டு. “நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் அல்லாஹ்வை நான் வணங்குவதற்கும் அவனுக்கு நான் இணைவைக்காமல் இருக்கவும்தான்; அவன் பக்கமே அழைக்கிறேன்; அவன் பக்கமே என் திரும்புதல் இருக்கிறது” என்று கூறுவீராக!
ዓረብኛ ተፍሲሮች:
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِیًّا ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا وَاقٍ ۟۠
(நபியே!) இவ்வாறுதான் நாம் இ(ந்த மார்க்கத்)தை (தெளிவான) சட்டமாக அரபி மொழியில் இறக்கினோம். உமக்கு கல்வி வந்ததற்குப் பின்னர் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து உமக்கு உதவியாளரும் பாதுகாவலரும் எவரும் இல்லை.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّیَّةً ؕ— وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ یَّاْتِیَ بِاٰیَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— لِكُلِّ اَجَلٍ كِتَابٌ ۟
(நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்களை அனுப்பி இருக்கிறோம். அவர்களுக்கு(ம்) மனைவிகளையும் சந்ததியையும் ஆக்கினோம். அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அத்தாட்சியைக் கொண்டு வருவது எந்த தூதருக்கும் முடியாது. ஒவ்வொரு தவணைக்கும் (குறிக்கப்பட்ட) ஒரு விதி உள்ளது.
ዓረብኛ ተፍሲሮች:
یَمْحُوا اللّٰهُ مَا یَشَآءُ وَیُثْبِتُ ۖۚ— وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ ۟
(அதில்) அவன் நாடியதை (தவணை வந்தவுடன் நிகழ்த்தி முடித்து) அழிக்கிறான்; (அவன் நாடியதை தவணை வரை) தரிபடுத்துகிறான். அவனிடம் தான் தாய் புத்தகம் இருக்கிறது.
ዓረብኛ ተፍሲሮች:
وَاِنْ مَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِنَّمَا عَلَیْكَ الْبَلٰغُ وَعَلَیْنَا الْحِسَابُ ۟
(நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை உமக்கு நிச்சயமாக நாம் காண்பித்தால் (அது நமது நாட்டப்படியே நடந்தது) அல்லது (அதற்கு முன்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொள்வோம். ஆகவே, உம்மீது (சுமத்தப்பட்ட கடமை) எல்லாம் எடுத்துரைப்பதுதான்! நம்மீதுதான் விசாரணை இருக்கிறது. (பாவிகளை நம் நாட்டப்படிதான் நாம் தண்டிப்போம். உமது விருப்பப்படியோ அவர்களின் விருப்பப்படியோ இல்லை.)
ዓረብኛ ተፍሲሮች:
اَوَلَمْ یَرَوْا اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ— وَاللّٰهُ یَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖ ؕ— وَهُوَ سَرِیْعُ الْحِسَابِ ۟
நிச்சயமாக நாம் (அவர்கள் வசிக்கின்ற) பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கிறான் (அதிகாரம் செலுத்துகிறான்). அவனுடைய தீர்ப்பைத் தடுப்பவர் அறவே இல்லை. அவன் விசாரிப்பதில் மிக தீவிரமானவன்.
ዓረብኛ ተፍሲሮች:
وَقَدْ مَكَرَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِیْعًا ؕ— یَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ ؕ— وَسَیَعْلَمُ الْكُفّٰرُ لِمَنْ عُقْبَی الدَّارِ ۟
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களுக்கு எதிராக) திட்டமாக சூழ்ச்சி செய்தனர். சூழ்ச்சி அனைத்தும் அல்லாஹ்விற்கே. (அவன் நாடியதே நடக்கும்.) ஒவ்வொரு ஆன்மாவும் செய்வதை அவன் அறிவான். ஆகவே, எவருக்கு மறுமையின் (நல்ல) முடிவு உண்டு என்பதை நிராகரிப்பவர்கள் (விரைவில்) அறிவார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا ؕ— قُلْ كَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ۙ— وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ ۟۠
(நபியே!) “நீர் தூதராக இல்லை” என்று நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். “எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அல்லாஹ்வும், வேதத்தின் ஞானம் எவரிடம் உள்ளதோ அவரும் சாட்சியால் போதுமாகி விட்டனர்” என்று கூறுவீராக!
ዓረብኛ ተፍሲሮች:
 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አር-ረዕድ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - የትርጉሞች ማውጫ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

ለመዝጋት