Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - የትርጉሞች ማውጫ

XML CSV Excel API
Please review the Terms and Policies

የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ዩሱፍ   አንቀፅ:
فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَیْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّیْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَیْهِنَّ ۚ— فَلَمَّا رَاَیْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَیْدِیَهُنَّ ؗ— وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًا ؕ— اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِیْمٌ ۟
அவர்களின் சூழ்ச்சியை அவள் செவியுற்றபோது, (அப்பெண்களை அழைத்து வர) அவர்களிடம் (ஓர் அழைப்பாளரை) அனுப்பினாள். அவர்களுக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் (பழம் இன்னும்) ஒரு கத்தியைக் கொடுத்து, (யூஸுஃபே!) அவர்கள் முன் வெளியேறுவீராக! எனக் கூறினாள். அவரை (அவர்கள்) பார்த்தபோது அவரை மிக உயர்வாக எண்ணினர். (பழத்தை விட்டுவிட்டு) தங்கள் கை(விரல்)களை அறுத்தனர். “அல்லாஹ் பாதுகாப்பானாக! இவர் மனிதராக இல்லை! இவர் (அழகான) கண்ணியமான ஒரு வானவரே தவிர வேறில்லை” என்று கூறினர்.
ዓረብኛ ተፍሲሮች:
قَالَتْ فَذٰلِكُنَّ الَّذِیْ لُمْتُنَّنِیْ فِیْهِ ؕ— وَلَقَدْ رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ فَاسْتَعْصَمَ ؕ— وَلَىِٕنْ لَّمْ یَفْعَلْ مَاۤ اٰمُرُهٗ لَیُسْجَنَنَّ وَلَیَكُوْنًا مِّنَ الصّٰغِرِیْنَ ۟
“நீங்கள் என்னை எவர் விஷயத்தில் பழித்தீர்களோ அவர்தான் இவர். திட்டவட்டமாக நான் அவரை என் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்தேன். அவர் (தன்னை) காத்துக் கொண்டார். அவருக்கு நான் ஏவுவதை அவர் செய்யவில்லையெனில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்படுவார், நிச்சயமாக இழிவானவர்களில் அவர் ஆகுவார்” என்று கூறினாள்.
ዓረብኛ ተፍሲሮች:
قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَیَّ مِمَّا یَدْعُوْنَنِیْۤ اِلَیْهِ ۚ— وَاِلَّا تَصْرِفْ عَنِّیْ كَیْدَهُنَّ اَصْبُ اِلَیْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِیْنَ ۟
“என் இறைவா! அவர்கள் என்னை எதற்கு அழைக்கிறார்களோ அதைவிட (நான்) சிறை(யிலிடப்படுவது) எனக்கு மிக விருப்பமானது. நீ என்னை விட்டு அவர்களின் சூழ்ச்சியை திருப்பவில்லையெனில் நான் அவர்கள் பக்கம் இச்சைகொள்வேன்; அறிவீனர்களில் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
ዓረብኛ ተፍሲሮች:
فَاسْتَجَابَ لَهٗ رَبُّهٗ فَصَرَفَ عَنْهُ كَیْدَهُنَّ ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
அவருடைய இறைவன் அவருக்கு பதிலளித்தான். ஆகவே, அவர்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பினான். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
ዓረብኛ ተፍሲሮች:
ثُمَّ بَدَا لَهُمْ مِّنْ بَعْدِ مَا رَاَوُا الْاٰیٰتِ لَیَسْجُنُنَّهٗ حَتّٰی حِیْنٍ ۟۠
பிறகு, (யூஸுஃப் நிரபராதி என்பதின்) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும் அவர்கள் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நிச்சயமாக அவரை சிறையில் அடைக்கவேண்டும் என அவர்களுக்குத் தோன்றியது.
ዓረብኛ ተፍሲሮች:
وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَیٰنِ ؕ— قَالَ اَحَدُهُمَاۤ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَعْصِرُ خَمْرًا ۚ— وَقَالَ الْاٰخَرُ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِیْ خُبْزًا تَاْكُلُ الطَّیْرُ مِنْهُ ؕ— نَبِّئْنَا بِتَاْوِیْلِهٖ ۚ— اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟
இரு வாலிபர்களும் அவருடன் சிறையில் நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவன் “நிச்சயமாக நான் மதுவை பிழிவதாக என்னை கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன் “என் தலை மேல் நான் ரொட்டியைச் சுமக்க, அதிலிருந்து பறவைகள் புசிப்பதாக நிச்சயமாக நான் என்னை கனவு கண்டேன்” என்று கூறினான். (பிறகு இருவரும்) “இதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
ዓረብኛ ተፍሲሮች:
قَالَ لَا یَاْتِیْكُمَا طَعَامٌ تُرْزَقٰنِهٖۤ اِلَّا نَبَّاْتُكُمَا بِتَاْوِیْلِهٖ قَبْلَ اَنْ یَّاْتِیَكُمَا ؕ— ذٰلِكُمَا مِمَّا عَلَّمَنِیْ رَبِّیْ ؕ— اِنِّیْ تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟
“நீங்கள் (இருவரும்) உணவளிக்கப்படுகிற உணவு உங்களிடம் வராது, அது உங்களிடம் வருவதற்கு முன்னர் அதன் விளக்கத்தை நான் உங்கள் இருவருக்கும் அறிவித்தே தவிர. இது என் இறைவன் எனக்கு கற்பித்ததிலிருந்து (நான் கூறுவதாகும்). அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டு விட்டேன். அவர்கள் மறுமையையும் நிராகரிக்கின்றார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ዩሱፍ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - የትርጉሞች ማውጫ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

ለመዝጋት