Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-በቀራህ   አንቀፅ:
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِیْ كَیْفَ تُحْیِ الْمَوْتٰی ؕ— قَالَ اَوَلَمْ تُؤْمِنْ ؕ— قَالَ بَلٰی وَلٰكِنْ لِّیَطْمَىِٕنَّ قَلْبِیْ ؕ— قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّیْرِ فَصُرْهُنَّ اِلَیْكَ ثُمَّ اجْعَلْ عَلٰی كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ یَاْتِیْنَكَ سَعْیًا ؕ— وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
2.260.தூதரே! இப்ராஹீம் தம் இறைவனிடம்: என் இறைவனே! நீ இறந்தவர்களை எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனது பார்வைக்குக் காட்டு என்று கேட்டதை நினைத்துப் பார்ப்பீராக. அதற்கு அவன், நீர் இந்த விஷயத்தை நம்பவில்லையா? என்று கேட்டான். அதற்கு அவர், ஆம், நம்புகிறேன். ஆயினும் என் மனதிருப்தியை இன்னும் அதிகரிக்கவே இவ்வாறு கேட்கிறேன் என்றார். அல்லாஹ் அவருக்குப் பின்வருமாறு கட்டளையிட்டான்: நான்கு பறவைகளை எடுத்துக் கொள்வீராக. அவற்றை உம்பக்கம் சேர்த்து துண்டுதுண்டாக அறுப்பீராக. பின்னர் உம்மைச் சுற்றிலுமுள்ள ஒவ்வொரு மலையிலும் அவற்றில் ஒரு பகுதியை வைப்பீராக. பின்னர் அவற்றை நீர் அழைப்பீராக, அவை உயிர்பெற்று உம்மிடம் விரைந்து வரும். இப்ராஹீமே! அல்லாஹ் தன் அதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன் என்பதையும் தான் வழங்கும் கட்டளைகளில் ஞானம்மிக்கவன் என்பதையும் அறிந்துகொள்வீராக.
ዓረብኛ ተፍሲሮች:
مَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِیْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ؕ— وَاللّٰهُ یُضٰعِفُ لِمَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
2.261. தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யும் நம்பிக்கையாளர்களின் நன்மைக்கு உதாரணம், ஒரு விதையைப் போன்றதாகும். விவசாயி அதனை நல்ல பூமியில் விதைக்கிறான். அது ஏழு கதிர்களை விளைவிக்கிறது. ஒவ்வொரு கதிரும் நூறு விதைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அல்லாஹ் தான் நாடிய அடியார்களுக்கு நன்மைகளை கணக்கின்றி, பன்மடங்காக வழங்குகிறான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன். அதற்குத் தகுதியானவர்களை நன்கறிந்தவன்.
ዓረብኛ ተፍሲሮች:
اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ لَا یُتْبِعُوْنَ مَاۤ اَنْفَقُوْا مَنًّا وَّلَاۤ اَذًی ۙ— لَّهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
2.262. இறைவழிபாட்டிலும் அவன் விரும்பும் காரியங்களிலும் தமது சொத்துக்களை, செலவுசெய்து, பின்னர் அதன் நன்மையை இழக்கச்செய்யும் வகையில் மக்களிடம் சொல்லிக்காட்டாதவர்களுக்கும் செயற்படாதவர்களுக்கும் அவர்களின் இறைவனிடம் கூலி இருக்கின்றது. அவர்கள் எதிர்காலம் குறித்து அச்சப்படவும் மாட்டார்கள்; கடந்துபோனவற்றை நினைத்து கவலைகொள்ளவும் மாட்டார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
قَوْلٌ مَّعْرُوْفٌ وَّمَغْفِرَةٌ خَیْرٌ مِّنْ صَدَقَةٍ یَّتْبَعُهَاۤ اَذًی ؕ— وَاللّٰهُ غَنِیٌّ حَلِیْمٌ ۟
2.263. நம்பிக்கையாளனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கண்ணியமான வார்த்தையும் உங்களுக்குத் தீங்கிழைத்தவர்களை நீங்கள் மன்னித்தலும்; சொல்லிக்காட்டி தொல்லையளிக்கும் தர்மத்தை விடச் சிறந்ததாகும். அல்லாஹ் தன் அடியார்களை விட்டும் தேவையற்றவன்; சகிப்புத்தன்மைமிக்கவன். உடனுக்குடன் அவன் அவர்களைத் தண்டிக்க மாட்டான்.
ዓረብኛ ተፍሲሮች:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰی ۙ— كَالَّذِیْ یُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَیْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ؕ— لَا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّمَّا كَسَبُوْا ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
2.264. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் செய்த தர்மங்களின் நன்மைகளை தர்மம் பெற்றவரிடம் சொல்லிக்காட்டியும், அவருக்கு தொல்லைகொடுத்தும் வீணாக்கிவிடாதீர்கள். இவ்வாறு செய்பவர்களுக்கு உதாரணம் மக்கள் தன்னைப் பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக தன் செல்வங்களைச் செலவு செய்பவனைப்போன்றது. அவன் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாத நிராகரிப்பாளனாவான். அதற்கு உதாரணம் ஒரு வழுக்குப்பாறையில் இருக்கும் மண்ணைப்போன்றதாகும். அதன்மீது பெருமழை பெய்து பாறையில் இருந்த மண்ணை முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டது. இவ்வாறுதான் மக்களிடம் காட்டுவதற்காக செலவுசெய்பவர்களது நன்மைகளும் அடிபட்டுச்சென்றுவிடும். அல்லாஹ்விடம் எதனையும் பெறமாட்டார்கள். அல்லாஹ் தன்னை நிராகரிப்பவர்களுக்கு தான் விரும்பும் விஷயங்களின் பக்கமும் அவர்களுக்கு பயனுள்ளவற்றிற்கும் வழிகாட்ட மாட்டான்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• مراتب الإيمان بالله ومنازل اليقين به متفاوتة لا حد لها، وكلما ازداد العبد نظرًا في آيات الله الشرعية والكونية زاد إيمانًا ويقينًا.
1. அல்லாஹ்வின்மீது கொண்ட ஈமானின் படித்தரங்கள் ஏற்றத்தாழ்வானவை. அவற்றிற்கு எல்லையே கிடையாது. அல்லாஹ்வின் சட்டவசனங்களிலும், பிரபஞ்ச அத்தாட்சிகளிலும் அடியான் கவனம் செலுத்த, செலுத்த அவனுடைய ஈமானும் உறுதியும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

• بَعْثُ الله تعالى للخلق بعد موتهم دليل ظاهر على كمال قدرته وتمام عظمته سبحانه.
2. அல்லாஹ் படைப்புகளை அவை மரணித்த பின்னரும் உயிர்த்தெழச்செய்வது அவனுடைய பரிபூரணமான ஆற்றல் மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும்.

• فضل الإنفاق في سبيل الله وعظم ثوابه، إذا صاحبته النية الصالحة، ولم يلحقه أذى ولا مِنّة محبطة للعمل.
3. தூய எண்ணத்துடன் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் தர்மம் ஏராளமான நன்மைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கியது.அதனுடன் தொல்லையும் நன்மையைப் போக்கிவிடும் சொல்லிக்காட்டுதலும் இருக்கக்கூடாது.

• من أحسن ما يقدمه المرء للناس حُسن الخلق من قول وفعل حَسَن، وعفو عن مسيء.
4. ஒரு மனிதன் மக்களுக்கு வழங்குபவற்றில் மிகச்சிறந்தது நற்குணமிக்க சொல்லும் செயலும் தவறிழைத்தவனை மன்னிப்பதுமாகும்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት