Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-በቀራህ   አንቀፅ:
اَللّٰهُ وَلِیُّ الَّذِیْنَ اٰمَنُوْا یُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ۬— وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَوْلِیٰٓـُٔهُمُ الطَّاغُوْتُ یُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَی الظُّلُمٰتِ ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
2.257. தன்மீது நம்பிக்கைகொண்டவர்களை அல்லாஹ் பொறுப்பெடுத்துக் கொள்கிறான். அவர்களுக்கு நன்மை செய்வதற்கான பாக்கியம் அளித்து, உதவியும் புரிகிறான். நிராகரிப்பு, அறியாமை என்னும் இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அறிவு மற்றும் ஈமானிய ஒளியின்பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுகிறான். அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு அல்லாஹ்வுக்கு இணையாக்கப்பட்டவர்களும் சிலைகளுமே பொறுப்பாளர்களாவர். அவர்கள் நிராகரிப்பை அலங்கரித்துக் காட்டி இவர்களை அறிவு மற்றும் ஈமானிய ஒளியிலிருந்து வெளியேற்றி அறியாமை மற்றும் நிராகரிப்பின் இருள்களுக்குள் கொண்டுசெல்கிறார்கள். இவர்கள்தாம் நரகவாசிகள். அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْ حَآجَّ اِبْرٰهٖمَ فِیْ رَبِّهٖۤ اَنْ اٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ ۘ— اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّیَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۙ— قَالَ اَنَا اُحْیٖ وَاُمِیْتُ ؕ— قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ یَاْتِیْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِیْ كَفَرَ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۚ
2.258.தூதரே! இப்ராஹீமிடம் இறைவனின் ௐரிறைக்கொள்கை குறித்து திமிராக தர்க்கம் செய்த பாவியை உமக்குத் தெரியுமா? இதற்கான காரணம், அல்லாஹ் அவனுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியிருந்து அவன் வரம்புமீறியதே. இப்ராஹீம் அவனிடம் தம் இறைவனின் பண்புகளைக்குறித்து தெளிவுபடுத்தியவராகக் கூறினார்: என் இறைவன்தான் படைப்புகளுக்கு உயிரளிக்கிறான்; மரணமும் அளிக்கின்றான். அதற்கு அவன் திமிராகக் கூறினான்:நானும்தான் உயிர் கொடுக்கின்றேன்; மரணமும் அளிக்கின்றேன். சிலரை மன்னித்து உயிர்வாழ அனுமதிக்கின்றேன். சிலரைக் கொன்று மரணிக்கச் செய்கின்றேன்.அதற்கு இப்ராஹீம் இன்னுமொரு பெரும் வாதத்தை பின்வருமாறு முன்வைத்தார்: நான் வணங்கும் என் இறைவன் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டுவருகிறான். நீ சூரியனை மேற்கிலிருந்து கொண்டுவா பார்ப்போம். திமிர் பிடித்த பாவி திகைப்படைந்துவிட்டான். இந்த வாதத்தின் வலிமையினால் வாயடைத்துப்போனான். அநியாயக்காரர்களின் அநியாயத்தினாலும் வரம்புமீறலினாலும் அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு வழிகாட்டமாட்டான்.
ዓረብኛ ተፍሲሮች:
اَوْ كَالَّذِیْ مَرَّ عَلٰی قَرْیَةٍ وَّهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا ۚ— قَالَ اَنّٰی یُحْیٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ۚ— فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ؕ— قَالَ كَمْ لَبِثْتَ ؕ— قَالَ لَبِثْتُ یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ ؕ— قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰی طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ یَتَسَنَّهْ ۚ— وَانْظُرْ اِلٰی حِمَارِكَ۫— وَلِنَجْعَلَكَ اٰیَةً لِّلنَّاسِ وَانْظُرْ اِلَی الْعِظَامِ كَیْفَ نُنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ؕ— فَلَمَّا تَبَیَّنَ لَهٗ ۙ— قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
2.259. அல்லது அழிந்துகிடந்த ஒரு ஊரை கடந்து சென்றவரை உமக்குத் தெரியுமா? அங்குள்ள கட்டிடங்கள் வீழ்ந்து வசிப்பவர்கள் அழிந்து அந்த ஊர் பாழடைந்து வெருச்சோடிக் கிடந்தது. அந்த மனிதர் ஆச்சரியமாகக் கேட்டார்: இந்த ஊரில் உள்ளவர்கள் இறந்தபிறகு அல்லாஹ் அவர்களை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?! அல்லாஹ் அவரை நூறுவருடங்கள்வரை மரணிக்கச் செய்தான். பின்னர் உயிர்கொடுத்து எழுப்பி அவரிடம் கேட்டான்: நீர் எவ்வளவு காலங்கள் இறந்தநிலையில் இருந்தீர்? அதற்கு அவர், ஒருநாள் அல்லது ஒருநாளின் சிலபகுதிவரை இருந்திருப்பேன் என்று கூறினார். அதற்கு அல்லாஹ்: நீர் நூறுஆண்டுகள்வரை இவ்வாறு இருந்தீர். உம்முடன் வைத்திருந்த உணவையும் பானத்தையும் பாரும். அவை மிக விரைவாக மாறும் தன்மையுடையவையாக இருந்தும் மாறாமல் அதே நிலையிலேயே இருக்கின்றன. உம்முடைய இறந்த கழுதையையும் பாரும். உயிர்கொடுத்து எழுப்புவதில் மக்களுக்கு அல்லாஹ்வின் ஆற்றலைக் காட்டும் ஒரு தெளிவான அத்தாட்சியாக உம்மை நாம் ஆக்கும் பொருட்டு சிதைந்து கிடக்கின்ற எலும்புகளையும் அவற்றை நாம் எவ்வாறு ஒன்றோடொன்று சேர்த்து அதன்மீது சதையைப்போர்த்தி அதற்கு உயிரளிக்கின்றோம் என்பதையும் பாரும் என்று கூறினான். அவர் அதனைப் பார்த்தபோது உண்மையைக் கண்டுகொண்டார்; அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்துகொண்டார். அதனை ஒத்துக் கொண்டவராகக் கூறினார்: அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• من أعظم ما يميز أهل الإيمان أنهم على هدى وبصيرة من الله تعالى في كل شؤونهم الدينية والدنيوية، بخلاف أهل الكفر.
1. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்கள் அவனை நிராகரித்தவர்களுக்கு மாறாக தங்களின் உலக மற்றும் மார்க்க விவகாரங்கள் அனைத்திலும் அவனிடமிருந்துள்ள வழிகாட்டலையும் தெளிவையும் பெற்றுள்ளார்கள்.

• من أعظم أسباب الطغيان الغرور بالقوة والسلطان حتى يعمى المرء عن حقيقة حاله.
2. தன் திறமையையும் அதிகாரத்தையும் கொண்டு கர்வம்கொள்வது வரம்புமீறுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். அது உண்மை நிலையை அறியவிடாமல் மனிதனைக் குருடாக்கிவிடுகிறது.

• مشروعية مناظرة أهل الباطل لبيان الحق، وكشف ضلالهم عن الهدى.
3. சத்தியத்தை எடுத்துரைத்து அசத்தியவாதிகளின் வழிகேட்டைத் தெளிவுபடுத்துவதற்காக அவர்களுடன் விவாதம் புரிய அனுமதி உண்டு.

• عظم قدرة الله تعالى؛ فلا يُعْجِزُهُ شيء، ومن ذلك إحياء الموتى.
4. எதுவும் இயலாததல்ல எனுமளவுக்கு அல்லாஹ்வின் ஆற்றல் அளப்பெரியது. அவற்றில் ஒன்றுதான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதாகும்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት