Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-በቀራህ   አንቀፅ:
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ ۘ— مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ ؕ— وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ وَلٰكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا ۫— وَلٰكِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟۠
2.253. நாம் உமக்கு எடுத்துக்கூறிய இந்தத் தூதர்களில் சிலரை வஹியிலும் பின்பற்றும் மக்களிலும், அந்தஸ்திலும் சிலரைவிட மேன்மைப்படுத்தியுள்ளோம். அவர்களில் மூசா போன்ற சிலருடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். அவர்களில் சிலருக்கு அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளான், உதாரணமாக, முஹம்மது நபிக்கு. அல்லாஹ் அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் இறுதித் தூதராக அனுப்பினான். அவர்களின் சமூகம் மற்ற எல்லா சமூகங்களைவிடவும் சிறப்பிக்கப்பட்டது. நாம் மர்யமின் மகன் ஈசாவுக்கு அவருடைய தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான அற்புதங்களை வழங்கினோம். அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார்; பிறவிக்குருடர்களையும் தொழுநோயாளிகளையும் குணப்படுத்தினார். அவர் அல்லாஹ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு ஜிப்ரீலைக்கொண்டு நாம் அவரைப் பலப்படுத்தினோம். அல்லாஹ் நாடியிருந்தால்; தூதர்களுக்குப்பின் வந்தவர்கள், தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டார்கள்; பிளவுபட்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டார்கள்; சிலர் அவனை நிராகரித்தார்கள். அவர்கள் சண்டையிடக்கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவன் தான் நாடியதைச் செய்கிறான். தான் நாடியவர்களுக்கு தன் கருணையால் ஈமானின் பக்கம் வழிகாட்டுகிறான். தான் நாடியவர்களை தன் நீதியுடன், அறிவுடன் வழிதவறச் செய்கிறான்.
ዓረብኛ ተፍሲሮች:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا بَیْعٌ فِیْهِ وَلَا خُلَّةٌ وَّلَا شَفَاعَةٌ ؕ— وَالْكٰفِرُوْنَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
2.254. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! மறுமைநாள் வருவதற்கு முன்னரே நாம் உங்களுக்கு வழங்கிய ஹலாலான செல்வங்களிலிருந்து செலவுசெய்யுங்கள். அந்நாளில் மனிதன் தனக்குப் பயனளிக்கக்கூடியவற்றை சம்பாதிக்கக்கூடிய வியாபாரத்தையோ கடினமான சூழ்நிலைகளில் உதவக்கூடிய நட்பையோ தீங்கிலிருந்து காத்து நன்மையைப் பெற்றுத்தரக்கூடிய பரிந்துரையையோ பெறமுடியாது. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்கள்தாம் தமது நிராகரிப்பின் காரணமாக உண்மையில் அநியாயக்காரர்களாக உள்ளனர்.
ዓረብኛ ተፍሲሮች:
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— اَلْحَیُّ الْقَیُّوْمُ ۚ۬— لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ ؕ— لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— مَنْ ذَا الَّذِیْ یَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ ؕ— یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ ۚ— وَلَا یُحِیْطُوْنَ بِشَیْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ— وَسِعَ كُرْسِیُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ— وَلَا یَـُٔوْدُهٗ حِفْظُهُمَا ۚ— وَهُوَ الْعَلِیُّ الْعَظِیْمُ ۟
2.255. அல்லாஹ்தான் வணக்கத்திற்குத் தகுதியான உண்மையான இறைவனாவான். அவனைத்தவிர வணங்குவதற்குத் தகுதியானவன் யாரும் இல்லை. அவன் மரணமோ குறைகளோ அற்ற, முழுமையான வாழ்க்கையைப் பெற்ற நித்திய ஜீவன். தனித்து நிற்பவன். படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். படைப்புகள் அனைத்தும் அவன் மூலமே உருவாகின. எல்லா சூழ்நிலைகளிலும் அவனிடம் தேவையுடையவையாக இருக்கின்றன. பரிபூரண வாழ்வுடையவன் என்பதனால் சிறு தூக்கமோ பெரும் தூக்கமோ அவனைப் பீடிக்காது. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே சொந்தம். அவனுடைய அனுமதி,பொருத்தம் பெற்றே தவிர அவனிடம் யாரும் பரிந்துரை செய்ய முடியாது. கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும் எதிர்காலத்தில் நிகழப்போகின்ற அனைத்தையும் அவன் அறிவான். அவனுடைய அறிவிலிருந்து யாரும் எதையும் அறிந்துகொள்ள முடியாது. ஆயினும் அவன் தான் நாடியவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றைத்தவிர. அவனுடைய குர்ஸீ - அவன் கால்வைக்கும் இடம் -விசாலமும் பிரமாண்டமும் மிக்க வானங்களையும் பூமியையும்விட விசாலமானது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்குக் கடினமானதல்ல. அவன் தன் உள்ளமை, அந்தஸ்து, ஆதிக்கம் செலுத்துதல் ஆகியவற்றில் மிக உயர்ந்தவன். தன் ஆட்சியதிகாரத்தில் மிகப்பெரியவன்.
ዓረብኛ ተፍሲሮች:
لَاۤ اِكْرَاهَ فِی الدِّیْنِ ۚ— قَدْ تَّبَیَّنَ الرُّشْدُ مِنَ الْغَیِّ ۚ— فَمَنْ یَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَیُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰی ۗ— لَا انْفِصَامَ لَهَا ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
2.256. இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைவதற்கு யாருக்கும் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அது தெளிவான சத்தியமாகும். எனவே எவரையும் வற்புறுத்தி அதில் நுழைவிக்க வேண்டிய அவசியமில்லை. நேர்வழியிலிருந்து வழிகேடு தெளிவாகிவிட்டது. எவர் அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படும் அனைத்தையும் நிராகரித்துவிட்டு, அவற்றிலிருந்து முழுமையாக நீங்கி அல்லாஹ் ஒருவன்மீது நம்பிக்கைகொண்டாரோ அவர் மறுமைநாளில் வெற்றியைத் தரக்கூடிய, என்றும் அறுபடாத மார்க்கத்தின் உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் தன் அடியார்கள் பேசக்கூடியதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலிவழங்குவான்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• أن الله تعالى قد فاضل بين رسله وأنبيائه، بعلمه وحكمته سبحانه.
1. தனது அறிவு, ஞானத்திற்கு ஏற்பவே அல்லாஹ் தன் தூதர்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளான்.

• إثبات صفة الكلام لله تعالى على ما يليق بجلاله، وأنه قد كلم بعض رسله كموسى ومحمد عليهما الصلاة والسلام.
2. அல்லாஹ்வின் கண்ணியத்திற்கேற்ப பேசும் பண்பு உண்டு. மூசா(அலை), முஹம்மது (ஸல்) ஆகிய தனது சில தூதர்களுடன் பேசியும் இருக்கின்றான்.

• الإيمان والهدى والكفر والضلال كلها بمشيئة الله وتقديره، فله الحكمة البالغة، ولو شاء لهدى الخلق جميعًا.
3. ஈமான், நிராகரிப்பு, நேர்வழி, வழிகேடு அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் விதிக்கும் உட்பட்டது. இதுகுறித்த ஆழமான ஞானம் அல்லாஹ்விடமே உண்டு. அவன் நாடினால் படைப்புகள் அனைவருக்கும் நேர்வழிகாட்டியிருப்பான்.

• آية الكرسي هي أعظم آية في كتاب الله، لما تضمنته من ربوبية الله وألوهيته وبيان أوصافه .
4. ஆயத்துல் குர்ஸீ என்று அழைக்கப்படும் வசனமே அல்குர்ஆனில் மகத்தான வசனமாகும்.ஏனெனில் இவ்வசனம் அல்லாஹ்தான் படைத்துப் பராமரிப்பவன், அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதையும் அவனுடைய பண்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

• اتباع الإسلام والدخول فيه يجب أن يكون عن رضًا وقَبول، فلا إكراه في دين الله تعالى.
5. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும் பின்பற்றுவதும் விருப்பத்துடன் நடைபெற வேண்டிய ஒன்றாகும். அல்லாஹ்வின் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை.

• الاستمساك بكتاب الله وسُنَّة رسوله أعظم وسيلة للسعادة في الدنيا، والفوز في الآخرة.
6. அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் நடைமுறையையும் பற்றிப் பிடித்துக்கொள்வது இவ்வுலகில் நிம்மதியையும் மறுவுலகில் வெற்றியையும் பெற்றுத்தரும்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት