Check out the new design

Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси * - Таржималар мундарижаси


Маънолар таржимаси Сура: Анфол   Оят:

அல்அன்பால்

Суранинг мақсадларидан..:
الامتنان على المؤمنين بنصر الله لهم في بدر، وبيان سنن النصر والهزيمة.
அல்லாஹ் விசுவாசிகளுக்கு பத்ர் போரில் வழங்கிய வெற்றி எனும் அருளை எடுத்துக்கூறலும், வெற்றி தோல்வியின் விதிமுறைகளைத் தெளிவுபடுத்தலும்

یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ ؕ— قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ ۚ— فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَیْنِكُمْ ۪— وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
8.1. -தூதரே!- உம்முடைய தோழர்கள் போர்ச் செல்வங்களைக் குறித்து - அவற்றை எவ்வாறு பங்கிட்டீர்கள்? யாருக்கெல்லாம் வழங்குவது? என்று கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களின் கேள்விக்கு பதிலாக கூறுவீராக: “போர்ச் செல்வங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியன. அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அவற்றை வழங்குவார்கள்; பங்கிடுவார்கள். முழுமையாக அடிபணிவதே உங்கள் மீதுள்ள கடமையாகும். நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். உங்களிடையே காணப்படும் பிரவினையையும் விரோதத்தையும் அன்பால், அழகிய பண்பால், மன்னிப்பால் சீர்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையில் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். ஏனெனில் ஈமான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கும் பாவங்களை விட்டு விலகியிருப்பதற்கும் தூண்டுகிறது. இக்கேள்வி பத்ருப் போருக்குப் பின் கேட்கப்பட்டதாகும்.
Арабча тафсирлар:
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِیَتْ عَلَیْهِمْ اٰیٰتُهٗ زَادَتْهُمْ اِیْمَانًا وَّعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚۙ
8.2. உண்மையான நம்பிக்கையாளர்கள் பின்வரும் பண்புகளையுடையோரே. அவர்களிடம் அல்லாஹ்வைக் குறித்து நினைவு கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் அஞ்சி நடுங்கும். உடலாலும் உள்ளத்தாலும் அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவார்கள். அவனுடைய வசனங்கள் அவர்களிடம் படித்துக் காட்டப்பட்டால் அவற்றில் சிந்தனை செலுத்துவார்கள். அதனால் அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும். நன்மைகளைப் பெறுவதற்கும் தங்களை விட்டுத் தீங்குகளை அகற்றுவதற்கும் தங்கள் இறைவனையே அவர்கள் சார்ந்திருப்பார்கள்.
Арабча тафсирлар:
الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ؕ
8.3. அவர்கள் தொழுகையை பரிபூரணமாக அதனுடைய நேரங்களில் நிறைவேற்றுகிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து கடமையான முறையிலும் உபரியான முறையிலும் செலவும் செய்கிறார்கள்.
Арабча тафсирлар:
اُولٰٓىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ؕ— لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟ۚ
8.4. இந்த பண்புகளை உடையவர்கள்தாம் ஈமானின் பண்புகளையும் இஸ்லாத்தின் வெளிப்படையான பண்புகளையும் ஒருசேர பெற்றிருப்பதால் உண்மையான நம்பிக்கையாளர்களாவர். இவர்கள் தங்கள் இறைவனிடம் உயர்ந்த அந்தஸ்தையும் பாவங்களுக்கான மன்னிப்பையும் கண்ணியமான உணவையும் கூலியாகப் பெறுவார்கள். இவை அல்லாஹ் அவர்களுக்காக தயார்படுத்திவைத்துள்ள அருட்கொடைகளாகும்.
Арабча тафсирлар:
كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَیْتِكَ بِالْحَقِّ ۪— وَاِنَّ فَرِیْقًا مِّنَ الْمُؤْمِنِیْنَ لَكٰرِهُوْنَ ۟ۙ
8.5. நீங்கள் போர்ச் செல்வங்கள் குறித்து கருத்து வேறுபாடு கொண்டு முரண்பட்ட பிறகு அவற்றைப் பங்கிடும் உரிமையை அல்லாஹ் உங்களிடமிருந்து பறித்து தன்னிடமும் தன் தூதரிடமும் அந்த உரிமையை வைத்துக் கொண்டதைப் போல - தூதரே! - நம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினர் வெறுத்த போதிலும் இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக மதீனாவிலிருந்து புறப்படும்படி உம் இறைவன் வஹியின் மூலம் உமக்குக் கட்டளையிட்டான்.
Арабча тафсирлар:
یُجَادِلُوْنَكَ فِی الْحَقِّ بَعْدَ مَا تَبَیَّنَ كَاَنَّمَا یُسَاقُوْنَ اِلَی الْمَوْتِ وَهُمْ یَنْظُرُوْنَ ۟ؕ
8.6. -தூதரே!- நம்பிக்கையாளர்களில் இந்த பிரிவினர் இணைவைப்பாளர்களுடன் போர் நிகழும் என்பது தெளிவான பின்னரும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதைப் போல உம்முடன் விவாதம் புரிகிறார்கள். இது அவர்கள் போருக்கான முன்னேற்பாடுகளைச் செய்யாததாலும் போருக்குப் புறப்படுவதை கடுமையாக வெறுத்ததனாலேயாகும்.
Арабча тафсирлар:
وَاِذْ یَعِدُكُمُ اللّٰهُ اِحْدَی الطَّآىِٕفَتَیْنِ اَنَّهَا لَكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَیْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَكُمْ وَیُرِیْدُ اللّٰهُ اَنْ یُّحِقَّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَیَقْطَعَ دَابِرَ الْكٰفِرِیْنَ ۟ۙ
8.7. -விவாதம் புரியும் நம்பிக்கையாளர்களே!- இணைவைப்பாளர்களின் இரு கூட்டத்தினரில் ஒன்றை நீங்கள் வெல்வீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை நினைத்துப் பாருங்கள். அவை வியாபாரக் கூட்டமும் அது சுமந்துவரும் பொருட்களை கனீமத்தாக பெறல் அல்லது அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்களுடன் போரிட வந்த கூட்டத்துடன் போரிட்டு அவர்களை வெல்வதுமாகும். இலகுவாக போரின்றி மடக்கிவிடலாம் என்பதனால் வியாபாரக் கூட்டத்தைப் பிடிப்பதையே நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் அல்லாஹ் இஸ்லாத்தின் பலம் மேலோங்குவதற்காக இணைவைப்பாளர்களின் தலைவர்களை அழிக்கவும் அவர்களில் பெரும்பாலோரை கைதிகளாகப் பிடிக்கவும், போர் செய்யுமாறு உங்களை ஏவி, சத்தியத்தை சத்தியம் எனக் காட்ட நாடுகிறான்.
Арабча тафсирлар:
لِیُحِقَّ الْحَقَّ وَیُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟ۚ
8.8. இஸ்லாம் உண்மையானது என்பதற்கான சாட்சிகளை உண்டாக்கி அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மேலோங்கச் செய்து, சத்தியத்தை சத்தியம் எனக் காட்டவும் அசத்தியத்தை அது தவறு என்பதற்கான அத்தாட்சிகளை ஏற்படுத்துவன் மூலம், அசத்தியம் எனக் காட்டவும் விரும்புகிறான். இணைவைப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் சத்தியத்தை மேலோங்கச் செய்தே தீருவான்.
Арабча тафсирлар:
Ушбу саҳифадаги оят фойдаларидан:
• ينبغي للعبد أن يتعاهد إيمانه ويُنمِّيه؛ لأن الإيمان يزيد وينقص، فيزيد بفعل الطاعة وينقص بضدها.
1. அடியான் தன் ஈமானில் கவனம் செலுத்தி அதனை வளர்க்க வேண்டும். ஏனெனில் அது அதிகரித்து குறையக் கூடியதாகும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதனால் அதிகரிக்கிறது. அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதனால் அது குறைகிறது.

• الجدال محله وفائدته عند اشتباه الحق والتباس الأمر، فأما إذا وضح وبان فليس إلا الانقياد والإذعان.
2. எது சரியென்ற குழப்ப நிலை இருக்கும் பட்சத்தில்தான் தர்க்கம் புரிவது பலனளிக்கும். அது தெளிவாகிவிட்டால் அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை.

• أَمْر قسمة الغنائم متروك للرّسول صلى الله عليه وسلم، والأحكام مرجعها إلى الله تعالى ورسوله لا إلى غيرهما.
3. போர்ச் செல்வங்களை பங்கிடும் உரிமை அல்லாஹ்வின் தூதருக்கு விடப்பட்டுள்ளது. மார்க்க சட்டங்களின் அதிகாரம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மட்டுமே உரியது. ஏனைய எவருக்கும் அவ்வதிகாரம் இல்லை.

• إرادة تحقيق النّصر الإلهي للمؤمنين؛ لإحقاق الحق وإبطال الباطل.
4. சத்தியத்தை சத்தியம் எனவும் அசத்தியத்தை அசத்தியம் என நிறுவுவதற்கு நம்பிக்கையாளர்களுக்கு இறை உதவி கிடைப்பதை விரும்புதல்.

 
Маънолар таржимаси Сура: Анфол
Суралар мундарижаси Бет рақами
 
Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси - Таржималар мундарижаси

Тафсир маркази томонидан нашр этилган.

Ёпиш