Check out the new design

Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси * - Таржималар мундарижаси


Маънолар таржимаси Сура: Бақара   Оят:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
விசுவாசம் கொள்ளமாட்டார்கள் என்று அல்லாஹ்வின் முடிவு விதியானவர்கள் அவர்களின் வழிகேட்டிலும், பிடிவாதத்திலும் தொடர்ந்திருப்பார்கள். எனவே நீர் அவர்களை எச்சரிப்பதும் எச்சரிகாதிருப்பதும் சமமே.
Арабча тафсирлар:
خَتَمَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَعَلٰی سَمْعِهِمْ ؕ— وَعَلٰۤی اَبْصَارِهِمْ غِشَاوَةٌ ؗ— وَّلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟۠
2.7. ஏனெனில் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு அதிலிருக்கும் அசத்தியத்தோடு அதனைப் பூட்டிவிட்டான். அவர்களுடைய செவிகளின் மீதும் முத்திரையிட்டுவிட்டான். எனவே, அவர்களால் சத்தியத்தைச் செவியுற்று அதற்குக் கீழ்ப்படிய முடியாது. அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையைப் போட்டுவிட்டான். ஆகவே, சத்தியம் தெளிவாக இருந்தும் அதனை அவர்களால் காணமுடியாது. மறுமையில் அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
Арабча тафсирлар:
وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْیَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِیْنَ ۟ۘ
2.8. தங்களைத் தாங்களே நம்பிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு கூட்டமும் மக்களில் உள்ளனர். தங்களின் உயிருக்கும் செல்வத்திற்கும் ஆபத்து வருவதைப் பயந்து தங்களை விசுவாசிகள் என்று நாவால் சொல்லிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் உள்ளத்தால் நிராகரிப்பாளர்கள்.
Арабча тафсирлар:
یُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِیْنَ اٰمَنُوْا ۚ— وَمَا یَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟ؕ
2.9. விசுவாசம் கொண்டிருப்பதாக வெளியே காட்டிவிட்டு, நிராகரிப்பை மறைத்து அல்லாஹ்வையும், நம்பிக்கையாளர்களையும் ஏமாற்றிவிடலாம் என்று தமது அறியாமையின் காரணமாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆயினும், அவர்களால் இதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில் அல்லாஹ் இரகசியத்தையும் அதனை விட மறைவானதையும் அறிகிறான். அவர்களின் பண்புகளையும், நிலமைகளையும் அவன் நம்பிக்கையாளர்களுக்கு அறிவித்தும் விட்டான்.
Арабча тафсирлар:
فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ ۙ— فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ۬۟ — بِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟
2.10. காரணம், அவர்களின் உள்ளங்களில் சந்தேகம் இருக்கிறது. அவர்களின் சந்தேகத்தை அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்திவிட்டான். செயலின் தன்மைக்கேற்பத்தான் கூலியும் வழங்கப்படும். அல்லாஹ்விடமும் மக்களிடமும் அவர்கள் பொய் கூறியதாலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்த தூதை நிராகரித்ததாலும் நரகத்தின் அடித்தளத்தில் கடுமையான வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
Арабча тафсирлар:
وَاِذَا قِیْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ ۙ— قَالُوْۤا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ ۟
2.11. அல்லாஹ்வை நிராகரிப்பது, பாவங்கள் புரிவது மற்றும் இன்ன பிற காரியங்களைச் செய்து உலகில் குழப்பம் விளைவிப்பதிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டால் அதனை ஏற்க மறுத்து, நாங்கள்தாம் நல்லவர்கள், சீர்திருத்தம் செய்பவர்கள் என்று கூறுகிறார்கள்.
Арабча тафсирлар:
اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا یَشْعُرُوْنَ ۟
2.12. உண்மையில் இவர்கள்தாம் குழப்பம் ஏற்படுத்துகிறவர்கள். ஆயினும், அவர்கள் அதை உணர்ந்துகொள்வதில்லை. அவர்களது செயலே குழப்பம்தான் என்பதைப் புரியாமல் உள்ளனர்.
Арабча тафсирлар:
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْۤا اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ ؕ— اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰكِنْ لَّا یَعْلَمُوْنَ ۟
2.13. நபியின் தோழர்கள் நம்பிக்கைகொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால்,மூடர்கள் நம்பிக்கைகொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டுமா? என்று பரிகாசமாகக் கேட்கிறார்கள். உண்மையில் இவர்கள்தாம் மூடர்கள். ஆயினும்,இதனை அவர்கள் அறிந்து கொள்வதில்லை.
Арабча тафсирлар:
وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ— وَاِذَا خَلَوْا اِلٰی شَیٰطِیْنِهِمْ ۙ— قَالُوْۤا اِنَّا مَعَكُمْ ۙ— اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ ۟
2.14. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களை இவர்கள் சந்தித்தால் அவர்களுக்குப் பயந்து, நீங்கள் நம்பிக்கைகொண்டது போல் நாங்களும் நம்பிக்கைகொண்டுள்ளோம் என்று கூறுகிறார்கள். அவர்களிடமிருந்து புறப்பட்டுச் சென்று தங்களின் தலைவர்களுடன் தனித்திருக்கும்போதோ, நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம். அவர்களைப் பரிகாசம் செய்வதற்காகத்தான் வெளிப்படையில் அவர்களுடன் ஒத்துப்போகின்றோம் எனக் கூறி தங்களின் விசுவாசத்தை அவர்களிடம் உறுதிப்படுத்துகிறார்கள்.
Арабча тафсирлар:
اَللّٰهُ یَسْتَهْزِئُ بِهِمْ وَیَمُدُّهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
2.15. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களை இவர்கள் பரிகாசம் செய்ததற்குப் பகரமாக அல்லாஹ்வும் இவர்களைப் பரிகாசம் செய்கிறான். இவர்களின் செயல்களுக்கு ஏற்ற கூலியைத்தான் இவ்வாறு கொடுக்கிறான். இதனால் இவர்களின் விஷயத்தில் முஸ்லிம்களுக்குரிய சட்டத்தையே இவ்வுலகில் நடைமுறைப்படுத்துகிறான். மறுமையிலோ இவர்களின் நிராகரிப்புக்கும் நயவஞ்சகத்திற்குமான கூலியைக் கொடுத்துவிடுவான். இவர்களுக்கு அவன் அவகாசம் கொடுத்திருப்பதின் நோக்கமே, இவர்கள் வழிகேட்டில் முன்னேறிக்கொண்டே சென்று தடுமாறியவர்களாக நிலைத்திருக்கட்டும் என்பதற்குத்தான்.
Арабча тафсирлар:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی ۪— فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
2.16. இப்பண்புகளுக்குரிய அந்த நயவஞ்கர்கள்தான் ஈமானுக்குப் பதிலாக நிராகரிப்பை வாங்கிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்வதை இழந்துவிட்டதனால் இவர்களின் இந்த வியாபாரம் பலனளிக்கவில்லை; சத்தியத்தின் பக்கம் செல்கின்ற நேரான வழியையும் இவர்கள் பெற்றுக்கொள்வதாக இல்லை.
Арабча тафсирлар:
Ушбу саҳифадаги оят фойдаларидан:
• أن من طبع الله على قلوبهم بسبب عنادهم وتكذيبهم لا تنفع معهم الآيات وإن عظمت.
1. பிடிவாதம் மற்றும் நிராகரிப்பின் காரணமாக யாருடைய உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டானோ, எவ்வளவு பெரிய அத்தாட்சிகளும் அவர்களுக்குப் பலனளிக்கப் போவதில்லை.

• أن إمهال الله تعالى للظالمين المكذبين لم يكن عن غفلة أو عجز عنهم، بل ليزدادوا إثمًا، فتكون عقوبتهم أعظم.
2. நிராகரிப்பாளர்களான அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ் அவகாசம் அளிப்பதெல்லாம் இயலாமையாலோ, மறதியாலோ அல்ல. மாறாக, அவர்களின் பாவங்கள் அதிகமாகி பெரும் தண்டனையை அனுபவிக்கட்டும் என்பதற்காகத்தான்.

 
Маънолар таржимаси Сура: Бақара
Суралар мундарижаси Бет рақами
 
Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси - Таржималар мундарижаси

Тафсир маркази томонидан нашр этилган.

Ёпиш