Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: مائدہ   آیت:
وَلَوْ اَنَّ اَهْلَ الْكِتٰبِ اٰمَنُوْا وَاتَّقَوْا لَكَفَّرْنَا عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاَدْخَلْنٰهُمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
5.65. யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஹம்மது கொண்டு வந்ததை உண்மைப்படுத்தி பாவங்களை விட்டும் தவிர்ந்து அல்லாஹ்வை அஞ்சினால் அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் - அவை அதிகமாக இருந்தாலும் - நாம் போக்கிவிடுவோம். மறுமைநாளில் அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வோம். அங்கு என்றும் முடிவடையாத நிலையான அருட்கொடைகளை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
عربی تفاسیر:
وَلَوْ اَنَّهُمْ اَقَامُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِمْ مِّنْ رَّبِّهِمْ لَاَكَلُوْا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ ؕ— مِنْهُمْ اُمَّةٌ مُّقْتَصِدَةٌ ؕ— وَكَثِیْرٌ مِّنْهُمْ سَآءَ مَا یَعْمَلُوْنَ ۟۠
5.66. யூதர்கள் தவ்ராத்தில் உள்ளதன்படியும் கிறிஸ்தவர்கள் இன்ஜீலில் உள்ளதன்படியும் செயல்பட்டு, அனைவரும் குர்ஆனில் உள்ளதன்படியும் செயல்பட்டிருந்தால் நாம் மேலிருந்து மழையைப் பொழியவைத்து பூமியிலிருந்து தாவரங்களை முளைக்கச் செய்து வாழ்வாதாரத்துக்கான வழிகளை நான் அவர்களுக்கு இலகுபடுத்தியிருப்பேன். வேதக்காரர்களில் சத்தியத்தின் மீது நிலைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பெரும்பாலானோரது செயல்கள் நம்பிக்கைகொள்ளாததால் மேசாமாகவே உள்ளது.
عربی تفاسیر:
یٰۤاَیُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ ؕ— وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهٗ ؕ— وَاللّٰهُ یَعْصِمُكَ مِنَ النَّاسِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
5.67. தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை முழுமையாக எடுத்துரைத்துவிடுவீராக. எதையும் மறைத்துவிடாதீர். நீர் எதையேனும் மறைத்தால் உமது இறைவனின் தூதுச் செய்தியை முழுமையாக எடுத்தரைத்தவராக ஆகமாட்டீர். (நபியவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தூதுச் செய்தியை முழுமையாக எடுத்துரைத்து விட்டார்கள். யாரேனும் இதற்கு எதிராகக் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பெரும் அபாண்டத்தைக் கூறியவராவார்). இன்றைய தினத்திற்குப் பிறகு அல்லாஹ்வே உம்மைப் பாதுகாப்பான். எவரும் தீய நோக்கோடு உம்மை நெருங்கிவிட முடியாது. எடுத்துரைப்பது மட்டுமே உம்மீதுள்ள பணியாகும். நேர்வழியை விரும்பாத நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டமாட்டான்.
عربی تفاسیر:
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَسْتُمْ عَلٰی شَیْءٍ حَتّٰی تُقِیْمُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ ؕ— وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ۚ— فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟
5.68. தூதரே! நீர் கூறுவீராக: “யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களே! தவ்ராத்தின்படியும் இன்ஜீலின்படியும் அல்லாஹ் உங்களுக்கு இறக்கிய குர்ஆனின்படியும் நீங்கள் செயல்படும் வரை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க எந்த மார்க்கத்திலும் இல்லை. அல்குர்ஆனை நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயற்படாவிட்டால் உங்களது நம்பிக்கை செல்லுபடியாகாது. உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை வேதக்காரர்களில் பெரும்பாலானோருக்கு - அவர்களின் பொறாமையினால்- வரம்பு மீறலையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்துகிறது. இந்த நிராகரிப்பாளர்களுக்காக நீர் கவலை கொள்ளாதீர். உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களே உமக்குப் போதுமானவர்கள்.
عربی تفاسیر:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالصّٰبِـُٔوْنَ وَالنَّصٰرٰی مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
5.69. நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், சாபியீன்கள்-அவர்கள்தான் சில நபிமார்களின் விசுவாசிகள்- கிறிஸ்தவர்கள் ஆகியோரில் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மைப்படுத்தி நற்செயல்கள் செய்தார்களோ அவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சம்கொள்ளமாட்டார்கள். உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணியும் அவர்கள் கவலை கொள்ளமாட்டார்கள்.
عربی تفاسیر:
لَقَدْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَاَرْسَلْنَاۤ اِلَیْهِمْ رُسُلًا ؕ— كُلَّمَا جَآءَهُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُهُمْ ۙ— فَرِیْقًا كَذَّبُوْا وَفَرِیْقًا یَّقْتُلُوْنَ ۟ۗ
5.70. நாம் இஸ்ராயீலின் மக்களிடம் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காக உறுதியான வாக்குறுதிகளை வாங்கினோம். அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காக அவர்களிடம் பல தூதர்களை அனுப்பியும் வைத்தோம். ஆயினும் அவர்கள் அந்த வாக்குறுதிகளை மீறி தங்களின் தூதர்கள் கொண்டுவந்ததைப் புறக்கணித்தல், சிலரை மறுத்தல், சிலரை கொலை செய்தல் என தங்களின் மனோஇச்சைக் கூறுபவற்றையே அவர்கள் பின்பற்றினார்கள்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• العمل بما أنزل الله تعالى سبب لتكفير السيئات ودخول الجنة وسعة الأرزاق.
1. அல்லாஹ் இறக்கியதன்படி செயல்படுவது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் சுவனம் செல்வதற்கும் வாழ்வாதாரம் விசாலமாக வழங்கப்படுவதற்கும் காரணமாக அமைகிறது.

• توجيه الدعاة إلى أن التبليغ المُعتَدَّ به والمُبْرِئ للذمة هو ما كان كاملًا غير منقوص، وفي ضوء ما ورد به الوحي.
2. குறைவின்றிப் பரிபூரணமான முறையிலும் வஹியின் ஒளியிலும் அமைந்த அழைப்புப் பணியே ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும் என அழைப்பாளர்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.

• لا يُعْتد بأي معتقد ما لم يُقِمْ صاحبه دليلًا على أنه من عند الله تعالى.
3. அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதற்கான உறுதியான ஆதாரத்தை நிலைநாட்டாதவரை எக்கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது.

 
معانی کا ترجمہ سورت: مائدہ
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں