Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: آل عمران   آیت:
وَمَاۤ اَصَابَكُمْ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِیَعْلَمَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ
3.166. உஹதுப்போரில் உங்களின் படைகளும் இணைவைப்பாளர்களின் படைகளும் மோதிக் கொண்டபோது நீங்கள் அடைந்த காயங்களும் உயிர்ச் சேதங்களும் தோல்வியும் அல்லாஹ்வின் அனுமதி, விதியின்படியே ஆழமான நோக்கங்களுக்காக நிகழ்ந்தவையாகும். அதன் மூலம் உண்மையான நம்பிக்கையாளர்கள் புலப்படுவார்கள்.
عربی تفاسیر:
وَلِیَعْلَمَ الَّذِیْنَ نَافَقُوْا ۖۚ— وَقِیْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ؕ— قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّاتَّبَعْنٰكُمْ ؕ— هُمْ لِلْكُفْرِ یَوْمَىِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِیْمَانِ ۚ— یَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَیْسَ فِیْ قُلُوْبِهِمْ ؕ— وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یَكْتُمُوْنَ ۟ۚ
3.167. மேலும் நயவஞ்சகர்களும் இதன் மூலம் புலப்படுவார்கள். அவர்களிடம், “அல்லாஹ்வின் பாதையில் போர்புரியுங்கள் அல்லது முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஒத்துழையுங்கள்” என்று கூறப்பட்டால், “போர் நிகழும் என்பதை நாம் அறிந்திருந்தால் நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம். ஆனால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் போர்நிகழாது என்றே நாம் கருதுகிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அப்போது நம்பிக்கையைவிட நிராகரிப்பிற்கே மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றை தம் நாவுகளால் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் நன்கறிவான். அதற்காக அவன் அவர்களைத் தண்டிப்பான்.
عربی تفاسیر:
اَلَّذِیْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ؕ— قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
3.168. அவர்கள்தான் போருக்குச் செல்லாமல் பின்தங்கியவர்கள், உஹதுப்போரில் மரணித்தவர்கள் குறித்து தங்கள் உறவினர்களிடம் கூறினார்கள்: “அவர்கள் நம் பேச்சைக் கேட்டு போருக்குச் செல்லாமல் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.” தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டிருந்தால் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள், அல்லாஹ்வின் பாதையில் போருக்கு செல்லாமல் இருந்ததனால்தான் நாங்கள் மரணத்திலிருந்து தப்பி விட்டோம் என்று நீங்கள் கூறும் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் உங்களுக்கு மரணம் வரும்போது உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் பார்க்கலாம்.
عربی تفاسیر:
وَلَا تَحْسَبَنَّ الَّذِیْنَ قُتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتًا ؕ— بَلْ اَحْیَآءٌ عِنْدَ رَبِّهِمْ یُرْزَقُوْنَ ۟ۙ
3.169. தூதரே! அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று எண்ணாதீர்கள். அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் கண்ணியமான வீட்டில் பிரத்யேகமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பலவகையான இன்பங்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான்.
عربی تفاسیر:
فَرِحِیْنَ بِمَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۙ— وَیَسْتَبْشِرُوْنَ بِالَّذِیْنَ لَمْ یَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْ ۙ— اَلَّا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۘ
3.170. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளினால் நிம்மதி அவர்களைச் சூழ்ந்து கொள்ளும், மகிழ்ச்சி அவர்களைத் தழுவிக் கொள்ளும். இன்னும் வந்துசேராமல் இவ்வுலகில் தங்கியிருக்கும் தங்களின் சகோதரர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டால் இவர்கள் பெற்ற அதே அருட்கொடைகளை அவர்களும் பெறுவார்கள் என்பதனால் அவ்வாறு எதிர்பார்க்கின்றனர். எதிர்காலத்தில் நிகழக்கூடிய மறுமையின் நிகழ்வுகளை எண்ணி அவர்கள் அச்சம்கொள்ள மாட்டார்கள். இவ்வுலகில் இழந்துவிட்டவற்றை எண்ணியும் அவர்கள் கவலைகொள்ள மாட்டார்கள்.
عربی تفاسیر:
یَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ ۙ— وَّاَنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُؤْمِنِیْنَ ۟
3.171. இத்துடன்அவர்கள் அல்லாஹ்விடம் காத்திருக்கும் பெரும் கூலி, மேலதிகமான நன்மைகள் ஆகியவற்றைக் கொண்டும் மகிழ்ச்சியடைவார்கள். நம்பிக்கையாளர்களின் கூலியை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கிவிட மாட்டான். அவன் அவர்களுக்கான கூலியை முழுமையாகவும் இன்னும் அதிகமாகவும் வழங்கிடுவான்.
عربی تفاسیر:
اَلَّذِیْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ ۛؕ— لِلَّذِیْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِیْمٌ ۟ۚ
3.172. அல்லாஹ்வுடைய பாதையில் "ஹம்ராவுல்அஸத்" என்ற போரில் இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டபோது உஹதுப்போரில் காயமுற்றிருந்தும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைக்கு அவர்கள் கட்டுப்பட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் அழைத்தபோது தங்களின் காயங்களைக் காட்டி அவர்கள் பின்தங்கிவிடவில்லை. அவர்களில் சிறந்த முறையில் செயல்பட்டு, அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு அவனிடம் சுவனம் என்னும் மகத்தான கூலி காத்திருக்கின்றது.
عربی تفاسیر:
اَلَّذِیْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِیْمَانًا ۖۗ— وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِیْلُ ۟
3.173. அவர்களிடம் சில இணைவைப்பாளர்கள், “போரிட்டு உங்களை அழித்தொழிப்பதற்கு குறைஷிகள் அபூசுஃப்யானின் தலைமையில் பெரும்படைகளைத் திரட்டியுள்ளார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள், அவர்களை அஞ்சிக் கொள்ளுங்கள்” எனக் கூறியபோது இணைவைப்பாளர்களின் இந்தப் பேச்சு நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய வாக்குறுதியின்மீதும் கொண்ட நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்தியது. “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குப் பொறுப்பாளன். எங்களின் விவகாரங்களை அவனிடமே ஒப்படைக்கிறோம் என்று கூறியவர்களாக எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• من سنن الله تعالى أن يبتلي عباده؛ ليتميز المؤمن الحق من المنافق، وليعلم الصادق من الكاذب.
1. உண்மையான நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக தன் அடியார்களைச் சோதிப்பது அல்லாஹ்வின் வழிமுறைகளில் உள்ளதாகும்.

• عظم منزلة الجهاد والشهادة في سبيل الله وثواب أهله عند الله تعالى حيث ينزلهم الله تعالى بأعلى المنازل.
2. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்பவர்கள், அதில் வீரமரணம் அடைவோர் ஆகியோர் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள்.

• فضل الصحابة وبيان علو منزلتهم في الدنيا والآخرة؛ لما بذلوه من أنفسهم وأموالهم في سبيل الله تعالى.
3. நபித்தோழர்கள் தமது உயிரையும் பொருளையும் அல்லாஹ்வின் பாதையில் செலவளித்ததன் காரணமாக இவ்வுலகிலும் மறுமையிலும் அவர்களுக்குச் சிறப்பும் உயர்ந்த அந்தஸ்தும் உண்டு.

 
معانی کا ترجمہ سورت: آل عمران
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں