Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - تەرجىمىلەر مۇندەرىجىسى

XML CSV Excel API
Please review the Terms and Policies

مەنالار تەرجىمىسى سۈرە: ھۇد   ئايەت:
قَالَ یٰنُوْحُ اِنَّهٗ لَیْسَ مِنْ اَهْلِكَ ۚ— اِنَّهٗ عَمَلٌ غَیْرُ صَالِحٍ ۗ— فَلَا تَسْـَٔلْنِ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ؕ— اِنِّیْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟
“நூஹே! அவன் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை. நிச்சயமாக இ(வ்வாறு கேட்ப)து நல்ல செயல் அல்ல. உமக்கு ஞானமில்லாததை என்னிடம் கேட்காதே. அறியாதவர்களில் நீர் ஆகுவதை விட்டு (எச்சரிப்பதற்காக) நிச்சயமாக நான் உமக்கு உபதேசிக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறினான்.
ئەرەپچە تەپسىرلەر:
قَالَ رَبِّ اِنِّیْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْـَٔلَكَ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؕ— وَاِلَّا تَغْفِرْ لِیْ وَتَرْحَمْنِیْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
“என் இறைவா! எனக்கு ஞானமில்லாததை உன்னிடம் நான் கேட்பதை விட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ என்னை மன்னிக்கவில்லையெனில், எனக்கு கருணை காட்டவில்லையெனில் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
ئەرەپچە تەپسىرلەر:
قِیْلَ یٰنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَیْكَ وَعَلٰۤی اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ ؕ— وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ یَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟
“நூஹே! உம்மீதும் உம்முடன் இருக்கின்ற உயிரினங்கள் மீதும் (நம்) அருள்வளங்கள் நிலவ நமது பாதுகாப்புடன் நீர் இறங்குவீராக! இன்னும் (சில) சமுதாயங்கள் அவர்களுக்கு (சற்று) சுகமான வாழ்வளிப்போம். பிறகு, அவர்களை நம்மிடமிருந்து துன்புறுத்தக்கூடிய வேதனை அடையும்” என்று கூறப்பட்டது.
ئەرەپچە تەپسىرلەر:
تِلْكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهَاۤ اِلَیْكَ ۚ— مَا كُنْتَ تَعْلَمُهَاۤ اَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هٰذَا ۛؕ— فَاصْبِرْ ۛؕ— اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِیْنَ ۟۠
(நபியே!) இவை (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இவற்றை அறிந்திருக்கவில்லை. ஆகவே, பொறுப்பீராக! நிச்சயமாக (நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கே.
ئەرەپچە تەپسىرلەر:
وَاِلٰی عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ— قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— اِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ ۟
‘ஆது’ (எனும் மக்கள்) இடம் அவர்களுடைய சகோதரர் -ஹூதை-(அனுப்பினோம்). என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (வேறு) வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு அறவே இல்லை. புனைபவர்களாகவே தவிர நீங்கள் வேறில்லை என்று கூறினார்.
ئەرەپچە تەپسىرلەر:
یٰقَوْمِ لَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا ؕ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی الَّذِیْ فَطَرَنِیْ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
என் மக்களே! அதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி என்னை படைத்தவனின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. சிந்தித்துப் புரியமாட்டீர்களா?
ئەرەپچە تەپسىرلەر:
وَیٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا وَّیَزِدْكُمْ قُوَّةً اِلٰی قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِیْنَ ۟
‘‘என் மக்களே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். (பாவங்களை விட்டு) திருந்தி (நன்மை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். மழையை உங்களுக்கு தாரை தாரையாக அனுப்புவான். உங்கள் பலத்துடன் (மேலும்) பலத்தை உங்களுக்கு அதிகப்படுத்துவான். (புறக்கணித்த) குற்றவாளிகளாக திரும்பி விடாதீர்கள்.”
ئەرەپچە تەپسىرلەر:
قَالُوْا یٰهُوْدُ مَا جِئْتَنَا بِبَیِّنَةٍ وَّمَا نَحْنُ بِتَارِكِیْۤ اٰلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟
“ஹூதே! எந்த ஓர் அத்தாட்சியையும் நம்மிடம் நீர் கொண்டு வரவில்லை. உம் சொல்லுக்காக நாங்கள் எங்கள் தெய்வங்களை விடுபவர்களாக இல்லை. உம்மை நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இல்லை” என்று கூறினர்.
ئەرەپچە تەپسىرلەر:
 
مەنالار تەرجىمىسى سۈرە: ھۇد
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - تەرجىمىلەر مۇندەرىجىسى

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

تاقاش