Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - تەرجىمىلەر مۇندەرىجىسى

XML CSV Excel API
Please review the Terms and Policies

مەنالار تەرجىمىسى سۈرە: ھۇد   ئايەت:
اُولٰٓىِٕكَ لَمْ یَكُوْنُوْا مُعْجِزِیْنَ فِی الْاَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِیَآءَ ۘ— یُضٰعَفُ لَهُمُ الْعَذَابُ ؕ— مَا كَانُوْا یَسْتَطِیْعُوْنَ السَّمْعَ وَمَا كَانُوْا یُبْصِرُوْنَ ۟
அவர்கள் பூமியில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்துபவர்களாக இருக்கவில்லை. அல்லாஹ்வையன்றி, அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இல்லை. அவர்களுக்கு வேதனை பன்மடங்காக்கப்படும். (இவ்வுலகில்) அவர்கள் (உண்மையை) செவியேற்க சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை; அவர்கள் (இறை அத்தாட்சியைப்) பார்ப்பவர்களாகவும் இருக்கவில்லை.
ئەرەپچە تەپسىرلەر:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
அவர்கள் தமக்குத் தாமே நஷ்டமடைந்தவர்கள். அவர்கள் புனைந்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்துவிடும்.
ئەرەپچە تەپسىرلەر:
لَا جَرَمَ اَنَّهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ۟
சந்தேகமின்றி நிச்சயமாக அவர்கள்தான் மறுமையில் மகா நஷ்டவாளிகள்.
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَتُوْۤا اِلٰی رَبِّهِمْ ۙ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
நிச்சயமாக நம்பிக்கைகொண்டு, நற்செயல்களைச் செய்து, தங்கள் இறைவனின் பக்கம் பயத்துடனும் மிக்க பணிவுடனும் திரும்பியவர்கள், அவர்கள்தான் சொர்க்கவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
مَثَلُ الْفَرِیْقَیْنِ كَالْاَعْمٰی وَالْاَصَمِّ وَالْبَصِیْرِ وَالسَّمِیْعِ ؕ— هَلْ یَسْتَوِیٰنِ مَثَلًا ؕ— اَفَلَا تَذَكَّرُوْنَ ۟۠
(இந்த) இரு பிரிவினரின் உதாரணம் குருடன், செவிடன் இன்னும் பார்ப்பவன், கேட்பவனைப் போன்றாகும். இருவரும் சமமாவார்களா? நீங்கள் (இந்த வேதத்தை சிந்தித்து) நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ ؗ— اِنِّیْ لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۙ
திட்டவட்டமாக நாம் நூஹை அவருடைய மக்களிடம் அனுப்பினோம். நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு பகிரங்கமான எச்சரிப்பாளன் ஆவேன்.
ئەرەپچە تەپسىرلەر:
اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ— اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ اَلِیْمٍ ۟
அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் துன்புறுத்தக்கூடிய நாளின் வேதனையை உங்கள் மீது பயப்படுகிறேன்.
ئەرەپچە تەپسىرلەر:
فَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰىكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰىكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِیْنَ هُمْ اَرَاذِلُنَا بَادِیَ الرَّاْیِ ۚ— وَمَا نَرٰی لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِیْنَ ۟
(அதற்கு) அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த தலைவர்கள் “எங்களைப் போன்ற ஒரு மனிதனாகவே தவிர (தூதராக) நாம் உம்மை பார்க்கவில்லை. (எங்கள்) வெளிப் பார்வையில் எங்களில் மிக இழிவானவர்களே தவிர (மற்றவர்கள்) உம்மைப் பின்பற்றியதாக நாம் பார்க்கவில்லை. எங்களைவிட உங்களுக்கு எந்த ஒரு மேன்மையையும் நாங்கள் பார்க்கவில்லை. மாறாக, உங்களை பொய்யர்களாக கருதுகிறோம்” என்று கூறினார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَاٰتٰىنِیْ رَحْمَةً مِّنْ عِنْدِهٖ فَعُمِّیَتْ عَلَیْكُمْ ؕ— اَنُلْزِمُكُمُوْهَا وَاَنْتُمْ لَهَا كٰرِهُوْنَ ۟
(நூஹ்) கூறினார்: என் மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனிடமிருந்து (கொடுக்கப்பட்ட) ஒரு தெளிவான அத்தாட்சியின் மீது நான் இருந்து அவன் தன்னிடமிருந்து அருளை எனக்கு அளித்திருந்து, அவை (எல்லாம்) உங்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டால், நீங்களும் அவற்றை வெறுப்பவர்களாக இருக்க, அவற்றை (ஏற்றுக் கொள்ள) உங்களை நாம் நிர்ப்பந்திப்போமா?”
ئەرەپچە تەپسىرلەر:
 
مەنالار تەرجىمىسى سۈرە: ھۇد
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - تەرجىمىلەر مۇندەرىجىسى

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

تاقاش