Check out the new design

పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం సూరహ్: అల్-వాఖియహ్   వచనం:

அல்வாகிஆ

ఈ సూరహ్ (అధ్యాయం) యొక్క ప్రయోజనాలు:
بيان أحوال العباد يوم المعاد.
மறுமைநாளில் அடியார்களின் நிலமைகளைத் தெளிவுபடுத்தல்

اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ
56.1. மறுமை சந்தேகமின்றி நிகழ்ந்துவிடும்போது
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
لَیْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۟ۘ
56.2. உலகில் பொய்ப்பித்துக்கொண்டிருந்ததைப் போல எவரும் அதனை பொய்ப்பிப்தை காண முடியாது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
خَافِضَةٌ رَّافِعَةٌ ۟ۙ
56.3. அது பாவம் செய்த நிராகரிப்பாளர்களை நரகத்தில் பிரவேசிக்கச் செய்து தாழ்த்தக்கூடியது, இறையச்சம்கொண்ட நம்பிக்கையாளர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து உயர்த்தக்கூடியது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۟ۙ
56.4. பூமி பலமாக அசைக்கப்படும்போது,
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۟ۙ
56.5. மலைகள் தூள்தூளாக்கப்படும்போது
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَثًّا ۟ۙ
56.6. தூளாக்கப்பட்டதனால் அது உறுதி இழந்து பறக்கும் புழுதியாகிவிடும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَّكُنْتُمْ اَزْوَاجًا ثَلٰثَةً ۟ؕ
56.7. அந்த நாளில் நீங்கள் மூன்று பிரிவினராக ஆகிவிடுவீர்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فَاَصْحٰبُ الْمَیْمَنَةِ ۙ۬— مَاۤ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ
56.8. தங்களின் பதிவேடுகளை வலக்கையால் வாங்கக்கூடிய வலப்புறத்தினர். அவர்களின் அந்தஸ்து எத்துணை உயர்ந்தது, கண்ணியமானது!
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۙ۬— مَاۤ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ
56.9. தங்களின் பதிவேடுகளை இடக்கையால் வாங்கக்கூடிய இடப்புறத்தினர். அவர்களின் நிலை எவ்வளவு மோசமானது!
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَ ۟ۙ
56.10. உலகில் நன்மைகளைச் செய்து முந்தியவர்கள்தாம் மறுமையிலும் சுவனத்தில் நுழைவதில் முந்தியவர்களாக இருப்பார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اُولٰٓىِٕكَ الْمُقَرَّبُوْنَ ۟ۚ
56.11. அவர்கள்தாம் அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெற்றவர்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
56.12. இன்பம் நிறைந்த சுவனங்களில் பலவகையான இன்பங்களை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்,
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
56.13. இந்த சமூகத்திலிருந்தும் இதற்கு முந்தைய சமூகங்களிலிருந்தும் ஒரு கூட்டத்தினர்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَقَلِیْلٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ
56.14. இறுதிக் காலத்தில் குறைவான மக்களே முந்தியவர்களாகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்களாகவும் இருப்பார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
عَلٰی سُرُرٍ مَّوْضُوْنَةٍ ۟ۙ
56.15. தங்க இழைகளால் நெய்யப்பட்ட கட்டில்களில்
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
مُّتَّكِـِٕیْنَ عَلَیْهَا مُتَقٰبِلِیْنَ ۟
56.16. சாய்ந்த வண்ணம் ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக அந்த கட்டில்களில் சாய்ந்திருப்பார்கள். அவர்களில் யாரும் மற்றவரின் பிடரியைப் பார்க்க மாட்டார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• دوام تذكر نعم الله وآياته سبحانه موجب لتعظيم الله وحسن طاعته.
1. அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் அத்தாட்சிகளையும் தொடர்ந்து சிந்திப்பது அவனை மதித்து அழகிய முறையில் அவனுக்கு வழிபடுவதற்கு வழிவகுக்கும்.

• انقطاع تكذيب الكفار بمعاينة مشاهد القيامة.
2. மறுமை நாளின் காட்சிகளை நிராகரிப்பாளர்கள் கண்டபிறகு அவர்களின் பொய்ப்பிப்பு காணாமல் போய்விடும்.

• تفاوت درجات أهل الجنة بتفاوت أعمالهم.
3. சுவனவாசிகளின் செயல்களின் ஏற்றத்தாழ்வுக்கேற்ப அவர்களின் அந்தஸ்துகளும் ஏற்றத்தாழ்வுடையவையாகும்.

 
భావార్ధాల అనువాదం సూరహ్: అల్-వాఖియహ్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం - అనువాదాల విషయసూచిక

ఇది తఫ్సీర్ అధ్యయన కేంద్రం ద్వారా విడుదల చేయబడింది.

మూసివేయటం