Check out the new design

పవిత్ర ఖుర్ఆన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ భాషలో అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ భావార్థము యొక్క అనువాదము, సంక్షిప్త తఫ్సీర్ (వ్యాఖ్యానం)తో సహా. * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం సూరహ్: అల్-బఖరహ్   వచనం:
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ۙ— اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَیْنَا ؕ— وَاِنَّاۤ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ ۟
2.70. பிறகு அவர்கள் மீண்டும் வீம்பாகக் கேள்வி கேட்டார்கள், அதன் பண்புகளை இன்னும் தெளிவாக விளக்கும்படி உம் இறைவனிம் பிரார்த்தனை செய்வீராக. நீர் குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட ஏராளமான பசுக்கள் இருக்கின்றன. அவற்றிற்கு மத்தியில் நீர் குறிப்பிட்டதை எங்களால் நிர்ணயிக்க முடியவில்லை. அல்லாஹ் நாடினால் அறுக்க வேண்டிய பசுவை நாங்கள் பெறுவோம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِیْرُ الْاَرْضَ وَلَا تَسْقِی الْحَرْثَ ۚ— مُسَلَّمَةٌ لَّا شِیَةَ فِیْهَا ؕ— قَالُوا الْـٰٔنَ جِئْتَ بِالْحَقِّ ؕ— فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا یَفْعَلُوْنَ ۟۠
2.71. மூசா கூறினார், அது விவசாய வேலைகளுக்கோ, நீர் இறைப்பதற்கோ பயன்படுத்தப்படாத, எவ்வித குறைகளுமற்ற ஆரோக்கியமான பசுவாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தைத் தவிரந்த வேறு எந்த நிறமும் அதில் இருக்கக்கூடாது. அப்போது அவர்கள் கூறினார்கள், இப்போதுதான் நிர்ணயிக்கத்தக்க சரியான பண்பை கூறியுள்ளீர். வீணான விவாதத்தினால் அறுக்காது போய்விடுவார்களோ என்றான பிறகு அதனை அறுத்தார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِیْهَا ؕ— وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟ۚ
2.72. உங்களில் ஒருவரைக் கொன்றுவிட்டு நீங்கள் மோதிக்கொள்ளும் அளவிற்கு ஒருவருக்கொருவர் பழிசுமத்தியதை நினைத்துப் பாருங்கள். அந்த அப்பாவியைக் கொன்றுவிட்டு நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ؕ— كَذٰلِكَ یُحْیِ اللّٰهُ الْمَوْتٰی وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
2.73. அறுக்குமாறு உத்தரவிடப்பட்ட பசுவின் ஒரு பகுதியைக் கொண்டு கொல்லப்பட்டவரை அடியுங்கள். அல்லாஹ் அவருக்கு உயிர்கொடுத்து, அவர் தன்னைக் கொன்றவரை அறிவிப்பார் என்று நாம் கூறினோம். அவர்கள் அவ்வாறே செய்தார்கள். அவர் கொன்றவரை அறிவித்தார். இந்த சடலத்திற்கு அல்லாஹ் உயிரளித்ததுபோன்றே மறுமைநாளில் இறந்தவர்களுக்கும் உயிரளிப்பான். நீங்கள் அறிந்துகொண்டு அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காக தனது ஆற்றலுக்கான சான்றுகளை அவன் உங்களுக்குக் காட்டுகின்றான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ فَهِیَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ؕ— وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا یَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ ؕ— وَاِنَّ مِنْهَا لَمَا یَشَّقَّقُ فَیَخْرُجُ مِنْهُ الْمَآءُ ؕ— وَاِنَّ مِنْهَا لَمَا یَهْبِطُ مِنْ خَشْیَةِ اللّٰهِ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
2.74. இந்த பேரற்புதத்தை கண்ணால் கண்டபின்னரும் உங்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப்போன்று, மாறாக அவற்றைவிடவும் கடினமாகிவிட்டன. ஒரு போதும் அவை தனது நிலையிலிருந்து மாறவேமாட்டாது. பாறைகள்கூட மாற்றம் அடைகின்றன. அவற்றிலிருந்து ஆறுகள் பொங்கி ஓடுகின்றன. அவற்றுள் சில பிளந்து அவற்றிலிருந்து ஊற்று நீர் பீறிட்டு பூமியில் வழிந்தோடுகின்றது. அதன் மூலம் மனிதர்களும் விலங்குகளும் பயனடைகிறார்கள். அவற்றுள் சில அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் உயரமான மலையிலிருந்து உருண்டுவிடுகின்றன. உங்களின் உள்ளங்களோ இவ்வாறுகூட இல்லை. நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமலில்லை. மாறாக அவன் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَفَتَطْمَعُوْنَ اَنْ یُّؤْمِنُوْا لَكُمْ وَقَدْ كَانَ فَرِیْقٌ مِّنْهُمْ یَسْمَعُوْنَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ یُحَرِّفُوْنَهٗ مِنْ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
2.75. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் யூதர்களைப் பற்றியும் அவர்களின் பிடிவாதத்தைப் பற்றியும் அறிந்தபிறகும் அவர்கள் உங்களின் பேச்சைக் கேட்டு நம்பிக்கைகொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்களா?. அவர்களிலுள்ள அறிஞர்களில் ஒரு பிரிவினர், தவ்ராத்தில் இறக்கப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளை செவியேற்கிறார்கள். பிறகு அவற்றின் பொருளையும் விளக்கத்தையும் அறிந்துகொண்டே மாற்றுகிறார்கள். தமது குற்றத்தின் பாரதூரத்தையம் அவர்கள் அறிந்தேயுள்ளார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ— وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ قَالُوْۤا اَتُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَیْكُمْ لِیُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
2.76. அவர்களின் முரண்பாடுகள் மற்றும் சூழ்ச்சிகளில் ஒன்று, அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால் முஹம்மது நபியைக் குறித்தும் அவருடைய தூதுத்துவம் குறித்தும் தவ்ராத்தில் கூறப்பட்ட விஷயங்களை ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் தங்களுக்குள் தனிமையில் சந்தித்துக் கொண்டால் இந்த உண்மையை ஒத்துக்கொண்டதற்காக ஒருவரையொருவர் பழித்துக் கொள்கிறார்கள். ஏனெனில் இவ்வாறு அவர்கள் உண்மையை ஒத்துக்கொள்வதை முஸ்லிம்கள் யூதர்களுக்கு எதிரான ஆதாரமாக முன்வைப்பார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• أن بعض قلوب العباد أشد قسوة من الحجارة الصلبة؛ فلا تلين لموعظة، ولا تَرِقُّ لذكرى.
1. சில அடியார்களின் உள்ளங்கள் பாறைகளைவிடக் கடினமானது. அவை அறிவுரைகளுக்கு உருகாது; நினைவூட்டலை ஏற்றுக்கொள்ளாது.

• أن الدلائل والبينات - وإن عظمت - لا تنفع إن لم يكن القلب مستسلمًا خاشعًا لله.
2. அல்லாஹ்வை அஞ்சக்கூடிய, கட்டுப்படக்கூடிய உள்ளமாக இல்லையெனில் சான்றுகள் எவ்வளவுதான் பெரியதாக, தெளிவானதாக இருந்தாலும் அவை எந்தப் பயனையும் அளிக்காது.

• كشفت الآيات حقيقة ما انطوت عليه أنفس اليهود، حيث توارثوا الرعونة والخداع والتلاعب بالدين.
3. வசனங்கள் யூதர்களின் மனதில் தேங்கியிருக்கும் விஷயங்களை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. மடமை, ஏமாற்று, மாா்க்கத்துடன் விளையாடுதல் போன்றவற்றை அவர்கள் அனந்தரமாகப் பெற்றுள்ளனா்.

 
భావార్ధాల అనువాదం సూరహ్: అల్-బఖరహ్
సూరాల పట్టిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖుర్ఆన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ భాషలో అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ భావార్థము యొక్క అనువాదము, సంక్షిప్త తఫ్సీర్ (వ్యాఖ్యానం)తో సహా. - అనువాదాల విషయసూచిక

ఇది తఫ్సీర్ అధ్యయన కేంద్రం ద్వారా విడుదల చేయబడింది.

మూసివేయండి