Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் * - மொழிபெயர்ப்பு அட்டவணை

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்கஸஸ்   வசனம்:
وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِیِّ اِذْ قَضَیْنَاۤ اِلٰی مُوْسَی الْاَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشّٰهِدِیْنَ ۟ۙ
மூஸாவிடம் நாம் (தூதுத்துவத்தையும் பல) சட்டங்களை(யும்) ஒப்படைத்தபோது (மலையின்) மேற்கு பக்கத்தில் (நபியே!) நீர் இருக்கவில்லை. இன்னும், (அந்த இடத்தில் அவருடன்) இருந்தவர்களிலும் நீர் இருக்கவில்லை. (அப்படி இருந்தும் மூஸாவைப் பற்றிய வரலாற்றை நீங்கள் சரியாகக் கூறுகிறீர்கள். ஆகவே, உமது தூதுத்துவத்தை வேதக்காரர்கள் எப்படி மறுக்கிறார்கள்?)
அரபு விரிவுரைகள்:
وَلٰكِنَّاۤ اَنْشَاْنَا قُرُوْنًا فَتَطَاوَلَ عَلَیْهِمُ الْعُمُرُ ۚ— وَمَا كُنْتَ ثَاوِیًا فِیْۤ اَهْلِ مَدْیَنَ تَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِنَا ۙ— وَلٰكِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟
என்றாலும், நாம் பல தலைமுறையினரை (அவருக்குப் பின்) உருவாக்கினோம். ஆக, அவர்களுக்கு காலம் நீண்டு சென்றது. (சில காலம் கழிந்தது. ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்கை மறந்தனர்.) இன்னும் (நபியே!) நீர் மத்யன் நகரவாசிகளுடன் தங்கி(யவராகவும்) அவர்கள் மீது நமது வசனங்களை ஓதி காண்பிப்பவராக(வும்) நீர் இல்லை. (இவற்றில் எந்த ஒரு சம்பவத்திலும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.) என்றாலும், (நாம்தான் அவற்றை எல்லாம் செய்தோம். இன்னும், இறுதி நபி வரை தொடர்ந்து) தூதர்களை நாம் அனுப்பக்கூடியவர்களாக இருந்தோம்.
அரபு விரிவுரைகள்:
وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَیْنَا وَلٰكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
(அந்த) மலைக்கு அருகில் நாம் (மூஸாவை) அழைத்தபோது நீர் (அங்கு) இருக்கவில்லை. எனினும், (முந்திய நபிமார்களின் வரலாறுகளை உமக்கு நாம் எடுத்துக்கூறியதும் உம்மை இவர்களுக்கு தூதராக அனுப்பியதும்) உமது இறைவனின் அருளினால் ஆகும். ஏனெனில், ஒரு மக்களை - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக - நீர் எச்சரிக்க வேண்டும். உமக்கு முன்னர் அந்த மக்களுக்கு எச்சரிப்பாளர் எவரும் வரவில்லை.
அரபு விரிவுரைகள்:
وَلَوْلَاۤ اَنْ تُصِیْبَهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ فَیَقُوْلُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَیْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰیٰتِكَ وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
அவர்களின் கரங்கள் முற்படுத்தியதால் அவர்களுக்கு ஒரு சோதனை (தண்டனை ஒன்று) ஏற்பட்டு, பிறகு, எங்கள் இறைவா! நீ எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி இருக்கக்கூடாதா? ஆக, நாங்கள் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே! இன்னும், நம்பிக்கையாளர்களில் நாங்கள் ஆகியிருப்போமே! என்று அவர்கள் கூறாதிருப்பதற்காக (உம்மை அவர்களுக்கு தூதராக அனுப்பினோம். இல்லை என்றால் உம்மை தூதராக அனுப்புவதற்கு முன்னரே நாம் அவர்களை தண்டித்திருப்போம்).
அரபு விரிவுரைகள்:
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَاۤ اُوْتِیَ مِثْلَ مَاۤ اُوْتِیَ مُوْسٰی ؕ— اَوَلَمْ یَكْفُرُوْا بِمَاۤ اُوْتِیَ مُوْسٰی مِنْ قَبْلُ ۚ— قَالُوْا سِحْرٰنِ تَظَاهَرَا ۫— وَقَالُوْۤا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ ۟
ஆக, நம்மிடமிருந்து சத்திய தூதர் அவர்களுக்கு வந்தபோது, “மூஸாவிற்கு வழங்கப்பட்ட(வேதத்)தை போன்று (ஒரு வேதம் அவருக்கும்) வழங்கப்பட்டிருக்க வேண்டாமா!” என்று கூறினார்கள். இதற்கு முன்னர் மூஸாவிற்கு வழங்கப்பட்டதை இவர்கள் (-இந்த யூதர்கள்) மறுக்கவில்லையா? (மேலும், அந்த யூதர்கள்) கூறினார்கள்: (மூஸாவின் வேதமும் ஈஸாவின் வேதமும் இவை இரண்டும்) தங்களுக்குள் உதவி செய்த இரண்டு சூனியங்களாகும். இன்னும், (உமக்கு இந்த வேதம் வழங்கப்பட்ட பின்னர்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் (இந்த பூமியில் இறக்கப்பட்ட வேதங்கள்) அனைத்தையும் மறுப்பவர்கள் ஆவோம்.”
அரபு விரிவுரைகள்:
قُلْ فَاْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰی مِنْهُمَاۤ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
(நபியே!) கூறுவீராக: “ஆக, (தவ்ராத்தும் இன்ஜீலும் சூனியம் என்று நீங்கள் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (தவ்ராத், இன்ஜீல் ஆகிய) இவ்விரண்டை விட மிக்க நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள். நான் அதை பின்பற்றுகிறேன்.”
அரபு விரிவுரைகள்:
فَاِنْ لَّمْ یَسْتَجِیْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا یَتَّبِعُوْنَ اَهْوَآءَهُمْ ؕ— وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰىهُ بِغَیْرِ هُدًی مِّنَ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
ஆக, அவர்கள் உமக்கு பதிலளிக்கவில்லை என்றால் (அவர்களைப் பற்றி) நீர் அறிவீராக! “நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம் தங்கள் மன விருப்பங்களைத்தான்.” அல்லாஹ்வின் நேர்வழி இன்றி தனது மன விருப்பத்தை பின்பற்றியவனை விட பெரும் வழிகேடன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (அவனது கட்டளைகளை மீறுகின்ற) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்கஸஸ்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் உமர் ஷரீப் அப்துல் சலாம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மூடுக