Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் * - மொழிபெயர்ப்பு அட்டவணை

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்கஸஸ்   வசனம்:
قُلْ اَرَءَیْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَیْكُمُ الَّیْلَ سَرْمَدًا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِضِیَآءٍ ؕ— اَفَلَا تَسْمَعُوْنَ ۟
(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் உங்கள் மீது இரவை மறுமை நாள் வரை (நீடித்திருக்கும்படி) நிரந்தரமானதாக ஆக்கிவிட்டால் அல்லாஹ்வை அன்றி வேறு எந்த கடவுள் உங்களுக்கு ஒளியைக் கொண்டு வருவார் என்று நீங்கள் அறிவியுங்கள். (இறைவனின் வசனங்களை) செவிமடு(த்து சிந்தி)க்க மாட்டீர்களா?”
அரபு விரிவுரைகள்:
قُلْ اَرَءَیْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَیْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِلَیْلٍ تَسْكُنُوْنَ فِیْهِ ؕ— اَفَلَا تُبْصِرُوْنَ ۟
(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் உங்கள் மீது பகலை மறுமை நாள் வரை (நீடித்திருக்கும்படி) நிரந்தரமாக ஆக்கிவிட்டால் நீங்கள் ஓய்வு எடுக்கக்கூடிய இரவை உங்களுக்கு அல்லாஹ்வை அன்றி வேறு எந்த கடவுள் கொண்டு வருவார்” என்பதை அறிவியுங்கள்! நீங்கள் (உங்கள் மீது இறை அருளாக இரவு, பகல் மாறி மாறி வருவதை) பார்(த்து அவற்றை செய்பவன்தான் வணங்கத் தகுதியானவன் என்பதை சிந்தி)க்க மாட்டீர்களா?
அரபு விரிவுரைகள்:
وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِیْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
அவன் தனது கருணையினால் உங்களுக்கு இரவை, - அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும்; பகலை, -(அதில் உங்கள் வாழ்வாதாரமாக இருக்கின்ற) அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும்; நீங்கள் (இந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் - ஆக்கினான்.
அரபு விரிவுரைகள்:
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟
இன்னும், (இணைவைத்து வணங்கிய) அவர்களை அவன் அழைத்து, (இவை எங்கள் தெய்வங்கள் என்று) நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்த எனக்கு இணையாக வணங்கப்பட்ட தெய்வங்கள் எங்கே? என்று அவன் கேட்கும் நாளை நினைவு கூருங்கள்!
அரபு விரிவுரைகள்:
وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِیْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْۤا اَنَّ الْحَقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை (-அதன் தூதரை) நாம் கொண்டு வருவோம். ஆக, (நீங்கள் இணைவைத்ததற்கு) உங்கள் ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள் என்று (அந்த சமுதாயத்திடம்) கூறுவோம். ஆக, அவர்கள், “நிச்சயமாக உண்மை(யான ஆதாரம்) அல்லாஹ்விற்கே உரியது” என்று அறிந்து கொள்வார்கள். இன்னும், அவர்கள் பொய்யாக கற்பனை செய்து (வணங்கி) கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.
அரபு விரிவுரைகள்:
اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰی فَبَغٰی عَلَیْهِمْ ۪— وَاٰتَیْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِی الْقُوَّةِ ۗ— اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْفَرِحِیْنَ ۟
நிச்சயமாக காரூன் மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். ஆக, அவன் அவர்கள் மீது அளவு கடந்து அநியாயம் புரிந்தான். அவனுக்கு நாம் (பல) பொக்கிஷங்களிலிருந்து எதை நாம் கொடுத்தோமோ அதன் சாவிகளை பலமுடைய கூட்டத்தினர் சிரமத்தோடு சுமந்து செல்வார்கள். அந்த சமயத்தை நினைவு கூர்வீராக: “அவனுடைய மக்கள் அவனுக்கு (அறிவுரை) கூறினார்கள், (காரூனே!) மகிழ்ச்சியில் மமதை கொள்ளாதே! நிச்சயமாக அல்லாஹ் மகிழ்ச்சியில் மமதை கொள்வோரை நேசிக்க மாட்டான்.
அரபு விரிவுரைகள்:
وَابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِیْبَكَ مِنَ الدُّنْیَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَیْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِی الْاَرْضِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ ۟
இன்னும், அல்லாஹ் உமக்கு வழங்கியவற்றில் மறுமை வீட்டை தேடிக்கொள்! இன்னும், உலகத்திலிருந்து (மறுமைக்கு நீ எடுத்துச் செல்லவேண்டிய) உனது பங்கை மறந்து விடாதே! இன்னும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று நீ (மக்களுக்கு) உபகாரம் செய்! பூமியில் கெடுதியை விரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் கெடுதி செய்வோரை நேசிக்க மாட்டான்.”
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்கஸஸ்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் உமர் ஷரீப் அப்துல் சலாம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மூடுக