Check out the new design

Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran * - Index van vertaling


Vertaling van de betekenissen Surah: Saad   Vers:
اِصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَیْدِ ۚ— اِنَّهٗۤ اَوَّابٌ ۟
38.17. -தூதரே!- நீர் விரும்பாதவற்றை இந்த பொய்ப்பிப்பாளர்கள் கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக. தனது எதிரிகளை எதிர்ப்பதற்கும் வழிபாட்டில் பொறுமை செய்வதற்கும் பலமுடையவரான நம் அடியார் தாவூதை நினைவு கூர்வீராக. நிச்சயமாக அவர் அதிகம் பாவமீட்சியைக்கொண்டு அல்லாஹ்வின்பால் மீளக்கூடியவராகவும் அவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்யக்கூடியவராகவும் இருந்தார்.
Arabische uitleg van de Qur'an:
اِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهٗ یُسَبِّحْنَ بِالْعَشِیِّ وَالْاِشْرَاقِ ۟ۙ
38.18. நிச்சயமாக நாம் தாவூதுக்கு மலைகளை வசப்படுத்தித் கொடுத்தோம். அவை அவருடன் இணைந்து காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வுக்கு தஸ்பீஹு செய்தன.
Arabische uitleg van de Qur'an:
وَالطَّیْرَ مَحْشُوْرَةً ؕ— كُلٌّ لَّهٗۤ اَوَّابٌ ۟
38.19. காற்றில் பறவைகளை ஒன்றுதிரட்டி வசப்படுத்தித் கொடுத்தோம். ஒவ்வொன்றும் அவருக்குக் கட்டுப்பட்டு அவரைத் தொடர்ந்து தஸ்பீஹு செய்தன.
Arabische uitleg van de Qur'an:
وَشَدَدْنَا مُلْكَهٗ وَاٰتَیْنٰهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ ۟
38.20. நாம் அவருக்கு வழங்கிய கண்ணியம், வலிமையால், எதிரிகளுக்கு எதிரான வெற்றியால் அவரது அரசாட்சியை பலப்படுத்தினோம். அவருக்கு நபித்துவத்தையும் விஷயங்களில் சரியான ஞானத்தையும் வழங்கினோம். ஒவ்வொரு விவகாரத்திலும் நாம் அவருக்கு தெளிவான விளக்கத்தையும் பேச்சு, தீர்ப்பளிப்பதில் தெளிவையும் வழங்கினோம்.
Arabische uitleg van de Qur'an:
وَهَلْ اَتٰىكَ نَبَؤُا الْخَصْمِ ۘ— اِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَ ۟ۙ
38.21. -தூதரே!- தாவூதின் வணங்குமிடத்தில் சுவர் ஏறி குதித்துவிட்ட இரு வழக்காளிகளின் செய்தி உம்மிடம் வந்ததா?
Arabische uitleg van de Qur'an:
اِذْ دَخَلُوْا عَلٰی دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوْا لَا تَخَفْ ۚ— خَصْمٰنِ بَغٰی بَعْضُنَا عَلٰی بَعْضٍ فَاحْكُمْ بَیْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَاۤ اِلٰی سَوَآءِ الصِّرَاطِ ۟
38.22. அவர்கள் திடீரென தாவூதிடம் நுழைந்துவிட்டார்கள். அவரிடம் வழமையாக நுழைவதற்கான வழிமுறைக்கு மாற்றமாக திடீரென அவ்விருவரும் நுழைந்ததைக் கண்டு அவர் திடுக்கிட்டார். அவர் திடுக்கமடைவதைக் கண்ட அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர். நாங்கள் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைத்த வழக்காளிகள். எனவே எங்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பீராக. நீர் எங்கள் மத்தியில் தீர்ப்பளித்தால் அநீதி இழைத்துவிடாதீர். நேரான, சரியான பாதையின்பால் எங்களுக்கு வழிகாட்டுவீராக.”
Arabische uitleg van de Qur'an:
اِنَّ هٰذَاۤ اَخِیْ ۫— لَهٗ تِسْعٌ وَّتِسْعُوْنَ نَعْجَةً وَّلِیَ نَعْجَةٌ وَّاحِدَةٌ ۫— فَقَالَ اَكْفِلْنِیْهَا وَعَزَّنِیْ فِی الْخِطَابِ ۟
38.23. வழக்காளிகளில் ஒருவர் தாவூதிடம் கூறினார்: “நிச்சயமாக இந்த மனிதர் என் சகோதரர். இவரிடம் தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒரேயொரு ஆடுதான் இருக்கிறது. அதனையும் தனக்கு அளித்துவிடும்படி அவர் என்னிடம் வேண்டுகிறார். அவர் வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.”
Arabische uitleg van de Qur'an:
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰی نِعَاجِهٖ ؕ— وَاِنَّ كَثِیْرًا مِّنَ الْخُلَطَآءِ لَیَبْغِیْ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِیْلٌ مَّا هُمْ ؕ— وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۟
38.24. தாவூத் அவர்களிடையே தீர்ப்பளித்தார். அவர் வாதிட்டவரிடம் கூறினார்: “உம் ஆட்டினை தன் ஆடுகளோடு இணைக்கக் கோரி உம் சகோதரர் உம்மீது அநீதி இழைத்துவிட்டார். பங்காளிகளில் பெரும்பாலானோர் ஒருவர் மற்றவர் மீது நீதமில்லாமல் அடுத்தவருடைய சொத்தை எடுத்து வரம்பு மீறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆயினும் நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களின் பங்காளிகளுடன் நியாயமாக நடந்துகொள்கிறார்கள். அவர்களின் மீது அநீதி இழைப்பதில்லை. இந்தப் பண்புகளைப்பெற்றவர்கள் குறைவானவர்களே. இந்த வழக்கின் மூலம் தான் சோதனையில் வீழ்ந்துவிட்டோம் என்பதை தாவூத் உறுதியாக அறிந்துகொண்டார். தன் இறைவனிடம் மன்னிப்புக் கோரினார். அவன் நெருக்கத்தை பெறும்பொருட்டு சிரம்பணிந்து அவன் பக்கம் திரும்பினார்.
Arabische uitleg van de Qur'an:
فَغَفَرْنَا لَهٗ ذٰلِكَ ؕ— وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰی وَحُسْنَ مَاٰبٍ ۟
38.25. நாம் அவரது பிரார்த்தனைக்கு விடையளித்து அவரை மன்னித்தோம். நிச்சயமாக அவர் நம்மிடம் நெருங்கியவராக இருந்தார். மறுமையில் அவருக்கு அழகிய திரும்புமிடமும் உண்டு.
Arabische uitleg van de Qur'an:
یٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِیْفَةً فِی الْاَرْضِ فَاحْكُمْ بَیْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰی فَیُضِلَّكَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ— اِنَّ الَّذِیْنَ یَضِلُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌۢ بِمَا نَسُوْا یَوْمَ الْحِسَابِ ۟۠
38.26. தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் மார்க்க மற்றும் உலக சட்டங்களை, தீர்ப்புகளை செயல்படுத்தும் பிரதிநிதியாக ஆக்கியுள்ளோம். எனவே மக்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பீராக. நீர் அவர்களிடையே தீர்ப்பளிக்கும் போது மன இச்சையைப் பின்பற்றி உறவுக்காகவோ, நட்புக்காகவோ, பகைமைக்காகவோ வழக்காளிகளில் ஒருவரின் பக்கம் சாய்ந்து விடாதீர். மன இச்சை உம்மை அல்லாஹ்வின் நேரான வழியை விட்டும் நெறிபிறழச் செய்துவிடும். அல்லாஹ்வின் நேரான வழியைவிட்டும் நெறிபிறழ்ந்து விடுபவர்களுக்கு விசாரணை செய்யப்படும் நாளை அவர்கள் மறந்ததனால் கடுமையான வேதனை உண்டு. அவர்கள் விசாரணையை ஞாபகம் செய்து அதற்கு அஞ்சியிருந்தால் தங்களின் மன இச்சையின் பக்கம் சாய்ந்திருக்க மாட்டார்கள்.
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• بيان فضائل نبي الله داود وما اختصه الله به من الآيات.
1. அல்லாஹ்வின் நபியான தாவூத்தின் சிறப்புக்களையும் அல்லாஹ் அவருக்கு மட்டும் வழங்கிய அற்புதங்களையும் தெளிவுபடுத்தல்.

• الأنبياء - صلوات الله وسلامه عليهم - معصومون من الخطأ فيما يبلغون عن الله تعالى؛ لأن مقصود الرسالة لا يحصل إلا بذلك، ولكن قد يجري منهم بعض مقتضيات الطبيعة بنسيان أو غفلة عن حكم، ولكن الله يتداركهم ويبادرهم بلطفه.
2. தூதர்கள் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் செய்திகளில் தவறிழைப்பதை விட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். ஏனெனில் தூதுத்துவத்தின் நோக்கமே அவர்கள் தவறிழைக்காமல் இருப்பதன் மூலமே நிறைவேறுகிறது. ஆனால் மனித இயல்புக்கேற்ப சில சமயங்களில் அவர்களிடமிருந்து தீர்ப்புகளில் மறதியோ, அலட்சியமோ நிகழலாம். ஆனால் அல்லாஹ் உடனே அவர்களைத் தழுவிக்கொள்கிறான்.

• استدل بعض العلماء بقوله تعالى: ﴿ وَإِنَّ كَثِيرًا مِّنَ اْلْخُلَطَآءِ لَيَبْغِي بَعْضُهُمْ عَلَى بَعْضٍ ﴾ على مشروعية الشركة بين اثنين وأكثر.
3. “பங்காளிகளில் பெரும்பாலானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைப்பவர்களாவே இருக்கிறார்கள்” என்ற வசனத்திலிருந்து இருவர் அல்லது பலர் மத்தியில் பங்குதாரர்களாவது அனுமதிக்கப்பட்டது என்பதை சில உலமாக்கள் ஆதாரமாக எடுக்கிறார்கள்.

• ينبغي التزام الأدب في الدخول على أهل الفضل والمكانة.
4. சிறப்பும் அந்தஸ்தும் உடையவர்களிடம் நுழைவதில் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது அவசியமானதாகும்.

 
Vertaling van de betekenissen Surah: Saad
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran - Index van vertaling

Uitgegeven door het Tafsier Centrum voor Koranstudies.

Sluit