Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - មាតិកានៃការបកប្រែ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាន់ណះល៍   វាក្យខណ្ឌ:
لِیَكْفُرُوْا بِمَاۤ اٰتَیْنٰهُمْ ؕ— فَتَمَتَّعُوْا ۫— فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை நிராகரிப்பதற்காக(வே இவ்வாறு இணைவைக்கின்றனர்). ஆகவே “(இவ்வுலகில் கொஞ்சம்) சுகமனுபவியுங்கள். (மறுமையில்) நீங்கள் (உங்கள் தீய முடிவை) அறிவீர்கள்”.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَیَجْعَلُوْنَ لِمَا لَا یَعْلَمُوْنَ نَصِیْبًا مِّمَّا رَزَقْنٰهُمْ ؕ— تَاللّٰهِ لَتُسْـَٔلُنَّ عَمَّا كُنْتُمْ تَفْتَرُوْنَ ۟
நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து ஒரு பாகத்தைத் தாம் அறியாத (கற்சிலைகள், பிசாசுகள் போன்ற)வற்றுக்கு ஆக்குகின்றனர் (-அதை வைத்து பூஜை செய்கின்றனர்). அல்லாஹ் மீது சத்தியமாக! நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَیَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَنٰتِ سُبْحٰنَهٗ ۙ— وَلَهُمْ مَّا یَشْتَهُوْنَ ۟
இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் பிள்ளைகளையும் தங்களுக்கு தாங்கள் விரும்புவதையும் ஆக்குகின்றனர். அவனோ (சந்ததிகளின் தேவையை விட்டு) மிக பரிசுத்தமானவன்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنۡثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِیْمٌ ۟ۚ
பெண் குழந்தையைக் கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் கறுத்ததாக ஆகிவிடுகிறது. இன்னும் (அதனால்) அவன் துக்கப்படுகிறான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
یَتَوَارٰی مِنَ الْقَوْمِ مِنْ سُوْٓءِ مَا بُشِّرَ بِهٖ ؕ— اَیُمْسِكُهٗ عَلٰی هُوْنٍ اَمْ یَدُسُّهٗ فِی التُّرَابِ ؕ— اَلَا سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟
தனக்குக் கூறப்பட்ட நற்செய்தியின் தீமையினால் “கேவலத்துடன் அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைப்பதா?” என்று (பிற) மக்களை விட்டு மறைந்து கொள்கிறான். அறிந்து கொள்ளுங்கள்: அவர்களின் (இந்த) தீர்ப்பு கெட்டு விட்டது.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ مَثَلُ السَّوْءِ ۚ— وَلِلّٰهِ الْمَثَلُ الْاَعْلٰی ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே கெட்ட தன்மை உள்ளது. அல்லாஹ்விற்கே மிக உயர்ந்த தன்மை உண்டு. அவன் மகா மிகைத்தவன், மகா ஞானவான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَوْ یُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَیْهَا مِنْ دَآبَّةٍ وَّلٰكِنْ یُّؤَخِّرُهُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ۚ— فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
மக்களை அவர்களுடைய குற்றத்தின் காரணமாக அல்லாஹ் (உடனுக்குடன்) தண்டித்தால் (பூமியில்) ஓர் உயிரினத்தையுமே விட்டிருக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிடப்பட்ட தவணை வரை அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வந்தால் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَیَجْعَلُوْنَ لِلّٰهِ مَا یَكْرَهُوْنَ وَتَصِفُ اَلْسِنَتُهُمُ الْكَذِبَ اَنَّ لَهُمُ الْحُسْنٰی ؕ— لَا جَرَمَ اَنَّ لَهُمُ النَّارَ وَاَنَّهُمْ مُّفْرَطُوْنَ ۟
தாங்கள் வெறுப்பவற்றை அல்லாஹ்விற்கு ஆக்குகின்றனர். நிச்சயமாக தங்களுக்கு சொர்க்கம் உண்டு என்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. கண்டிப்பாக நிச்சயம் இவர்களுக்கு நரகம்தான்; நிச்சயம் இவர்கள் (நரகத்தில் கேட்பார் இன்றி விட்டு) விடப்படுபவர்கள் ஆவர்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
تَاللّٰهِ لَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰۤی اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَهُوَ وَلِیُّهُمُ الْیَوْمَ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
(நபியே!) அல்லாஹ் மீது சத்தியமாக! உமக்கு முன்னர் (பல) சமுதாயங்களுக்கு (நம்) தூதர்களை திட்டவட்டமாக அனுப்பினோம். ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களை அழகாக்கினான். ஆகவே இன்று(ம்) அவர்களுக்கு அவனே நண்பன் ஆவான். அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையுண்டு.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَمَاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ اِلَّا لِتُبَیِّنَ لَهُمُ الَّذِی اخْتَلَفُوْا فِیْهِ ۙ— وَهُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
(நபியே!) இவர்கள் எதில் தர்க்கித்தார்களோ அதை நீர் தெளிவுபடுத்துவதற்காகவும் (மக்கள் எல்லோருக்கும்) ஒரு நேர்வழியாக இருப்பதற்கும் (குறிப்பாக, அதை) நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு ஓர் அருளாக இருப்பதற்கே தவிர (வேறு எதற்கும்) உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கவில்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាន់ណះល៍
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - មាតិកានៃការបកប្រែ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

បិទ