Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - មាតិកានៃការបកប្រែ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាន់ណះល៍   វាក្យខណ្ឌ:
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ فَسْـَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟ۙ
(நபியே!) உமக்கு முன்பு நாம் (தூதர்களாக மனித) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) அனுப்பவில்லை. அ(ந்த ஆட)வர்களுக்கு நாம் வஹ்யி அறிவிப்போம். ஆகவே, (இவர்களை நோக்கி) “நீங்கள் (இதை) அறியாதவர்களாக இருந்தால் (உண்மையான இறை வேதத்தின்) ஞானமுடையவர்களைக் கேளுங்கள்” (என்று கூறுவீராக!).
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
بِالْبَیِّنٰتِ وَالزُّبُرِ ؕ— وَاَنْزَلْنَاۤ اِلَیْكَ الذِّكْرَ لِتُبَیِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَیْهِمْ وَلَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟
அத்தாட்சிகளையும் வேதங்களையும் கொண்டு (அத்தூதர்களை அனுப்பினோம்). (இந்த) ஞானத்தை (நபியே!) உமக்கு இறக்கினோம். ஏனெனில், அம்மக்களுக்காக இறக்கப்பட்ட (இந்த ஞானத்)தை (நீர்)அவர்களுக்கு தெளிவுபடுத்துவீர், இன்னும் (அந்த ஞானத்தையும் நபியின் கூற்றையும்) அவர்கள் சிந்திக்க வேண்டும்! (அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டும்!)
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اَفَاَمِنَ الَّذِیْنَ مَكَرُوا السَّیِّاٰتِ اَنْ یَّخْسِفَ اللّٰهُ بِهِمُ الْاَرْضَ اَوْ یَاْتِیَهُمُ الْعَذَابُ مِنْ حَیْثُ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
தீமைகளை (புரிய) சூழ்ச்சி செய்தவர்கள் தங்களை அல்லாஹ் பூமியில் சொருகிக் கொள்வான் என்பதை அல்லது தாம் உணராத விதத்தில் தங்களுக்கு வேதனை வரும் என்பதை அச்சமற்று விட்டனரா?
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اَوْ یَاْخُذَهُمْ فِیْ تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِیْنَ ۟ۙ
அல்லது தமது பயணத்தில் தம்மை அவன் (சோதனையால்) பிடி(த்து அழி)த்து விடுவதை (அச்சமற்றுவிட்டனரா?). அவர்கள் (அவனை) பலவீனப்படுத்துபவர்கள் இல்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اَوْ یَاْخُذَهُمْ عَلٰی تَخَوُّفٍ ؕ— فَاِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
அல்லது (அவர்களது பூமியையும் செல்வத்தையும்) கொஞ்சம் (கொஞ்சமாக) குறைத்து அவர்களை அவன் பிடி(த்து அழி)த்து விடுவதை (அச்சமற்றனரா?). (மக்களே!) நிச்சயமாக உங்கள் இறைவன் மகா இரக்கமானவன், பெரும் கருணையாளன். (அதனால்தான் நீங்கள் உடனுக்குடன் தண்டிக்கப்படாமல் விட்டு வைக்கப்பட்டுள்ளீர்கள்.)
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اَوَلَمْ یَرَوْا اِلٰی مَا خَلَقَ اللّٰهُ مِنْ شَیْءٍ یَّتَفَیَّؤُا ظِلٰلُهٗ عَنِ الْیَمِیْنِ وَالشَّمَآىِٕلِ سُجَّدًا لِّلّٰهِ وَهُمْ دٰخِرُوْنَ ۟
அல்லாஹ் படைத்த ஒரு பொருளையேனும் இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் அல்லாஹ்விற்கு சிரம் பணிந்தவையாக வலப்புறமாக இன்னும் இடப்புறமாக சாய்கின்றன. அவை (அவனுக்கு) மிகப் பணிந்தவையாகும்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلِلّٰهِ یَسْجُدُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ مِنْ دَآبَّةٍ وَّالْمَلٰٓىِٕكَةُ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்விற்கு சிரம் பணிகிறார்கள். அ(ந்த வான)வர்கள் பெருமையடிப்பதில்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
یَخَافُوْنَ رَبَّهُمْ مِّنْ فَوْقِهِمْ وَیَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ ۟
அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனைப் பயப்படுகின்றனர்; தாங்கள் ஏவப்படுவதை செய்கின்றனர்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَقَالَ اللّٰهُ لَا تَتَّخِذُوْۤا اِلٰهَیْنِ اثْنَیْنِ ۚ— اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— فَاِیَّایَ فَارْهَبُوْنِ ۟
அல்லாஹ் கூறுகிறான்: (மனிதர்களே! வணங்குவதற்கு) இரண்டு கடவுள்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (நீங்கள் எவனை வணங்கவேண்டுமோ) அவனெல்லாம் ஒரே ஒரு கடவுள்தான். ஆகவே, என்னை பயப்படுங்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَهُ الدِّیْنُ وَاصِبًا ؕ— اَفَغَیْرَ اللّٰهِ تَتَّقُوْنَ ۟
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன! கீழ்ப்படிதல் (கட்டாயமாக, நிலையானதாக,) என்றென்றும் அவனுக்கே உரியது. ஆகவே, (அந்த) அல்லாஹ் அல்லாததையா (கடவுளாக ஆக்கிக்கொண்டு அதை) அஞ்சுகிறீர்கள்?
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَمَا بِكُمْ مِّنْ نِّعْمَةٍ فَمِنَ اللّٰهِ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَیْهِ تَجْـَٔرُوْنَ ۟ۚ
உங்களிடம் அருட்கொடையில் எது உள்ளதோ அது அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு கிடைத்தது). பிறகு, உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அவனிடமே (பிரார்தித்து அதை நீக்கக் கோரி) கதறுகிறீர்கள்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
ثُمَّ اِذَا كَشَفَ الضُّرَّ عَنْكُمْ اِذَا فَرِیْقٌ مِّنْكُمْ بِرَبِّهِمْ یُشْرِكُوْنَ ۟ۙ
பிறகு, அவன் உங்களை விட்டு (அத்)துன்பத்தை நீக்கினால், அப்போது உங்களில் ஒரு பிரிவினர் தங்கள் (துன்பத்தை நீக்கிய அந்த) இறைவனுக்கு இணைவைக்கின்றனர்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាន់ណះល៍
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - មាតិកានៃការបកប្រែ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

បិទ