Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 章: 家畜章   節:
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ۚ— اِنِّیْۤ اَرٰىكَ وَقَوْمَكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
6.74. தூதரே! இப்ராஹீம் இணைவபை்பாளரான தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவுகூர்வீராக: “என் அன்புத் தந்தையே! நீங்கள் அல்லாஹ்வை விடுத்து சிலைகளையா கடவுள்களாக ஆக்கிக் கொண்டீர்கள்? அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதனால், உங்களையும், சிலைகளை வணங்கும் உங்கள் சமூகத்தையும் தெளிவான வழிகேட்டிலும், சத்தியப் பாதையை விட்டும் தடுமாற்றத்திலும் நான் காண்கிறேன். அல்லாஹ்தான் வணக்கத்திற்குத் தகுதியான உண்மையான இறைவன். அவனைத் தவிர அனைத்தும் பொய்யாக வணங்கப்படுபவையே.
アラビア語 クルアーン注釈:
وَكَذٰلِكَ نُرِیْۤ اِبْرٰهِیْمَ مَلَكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِیَكُوْنَ مِنَ الْمُوْقِنِیْنَ ۟
6.75. அவரது தந்தை மற்றும் சமூகத்தின் வழிகேட்டை அவருக்குக் காட்டியது போல அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை அறிவிக்கக்கூடிய வானங்கள் மற்றும் பூமியின் விசாலமான ஆட்சியதிகாரத்தை அவருக்குக் காட்டினோம். அல்லாஹ் ஒருவனே, அவன் மாத்திரமே வணக்கத்திற்குரியவன் என்பதை அறிந்து, அவனுக்கு யாதொரு இணையுமில்லை, அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை உறுதியாக நம்பியவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவற்றையெல்லாம் அவருக்குக் காட்டினோம்.
アラビア語 クルアーン注釈:
فَلَمَّا جَنَّ عَلَیْهِ الَّیْلُ رَاٰ كَوْكَبًا ۚ— قَالَ هٰذَا رَبِّیْ ۚ— فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَاۤ اُحِبُّ الْاٰفِلِیْنَ ۟
6.76. இரவின் இருள் தோன்றி, அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்ட போது, ‘இது என் இறைவன்’ என்றார். நட்சத்திரம் மறைந்த போது, ‘நான் மறையக்கூடியதை விரும்ப மாட்டேன்.உண்மையான இறைவன் மறைய மாட்டான்’ என்றார்.
アラビア語 クルアーン注釈:
فَلَمَّا رَاَ الْقَمَرَ بَازِغًا قَالَ هٰذَا رَبِّیْ ۚ— فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَىِٕنْ لَّمْ یَهْدِنِیْ رَبِّیْ لَاَكُوْنَنَّ مِنَ الْقَوْمِ الضَّآلِّیْنَ ۟
6.77. அவர் சந்திரன் உதிப்பதைக் கண்டபோது தன் சமூகத்தினரிடம் ‘இது என் இறைவன்’ என்றார். அதுவும் மறைந்த போது, ‘என் இறைவன், அவன் ஒருவன் அவனை மாத்திரமே வணங்க வேண்டும் என்பதன் பக்கம் எனக்கு வழிகாட்டவில்லையென்றால் அவனது மார்க்கத்தை விட்டும் தூரமாகியவர்களில் ஒருவனாகிவிடுவேன்’ என்றார்.
アラビア語 クルアーン注釈:
فَلَمَّا رَاَ الشَّمْسَ بَازِغَةً قَالَ هٰذَا رَبِّیْ هٰذَاۤ اَكْبَرُ ۚ— فَلَمَّاۤ اَفَلَتْ قَالَ یٰقَوْمِ اِنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟
6.78. அவர் சூரியன் உதிப்பதைக் கண்ட போது, ‘இதுதான் என் இறைவன், இது நட்சத்திரத்தையும் சந்திரனையும் விட பெரியது’ என்றார். அதுவும் மறைந்த போது, “என் சமூகமே, நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியவைகளை விட்டும் நான் நீங்கியவனாவேன்” என்றார்.
アラビア語 クルアーン注釈:
اِنِّیْ وَجَّهْتُ وَجْهِیَ لِلَّذِیْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِیْفًا وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۚ
6.79. இணைவைப்பை விட்டும் ஒதுங்கி தூய்மையான ஏகத்துவத்தின் பக்கம் சார்ந்தவனாக, வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்த அல்லாஹ்வுக்கு நான் என் அடிபணிதலை உரித்தாக்கிவிட்டேன். அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் சேர்த்து வணங்கும் இணைவைப்பாளர்களில் நான் ஒருவன் அல்ல.
アラビア語 クルアーン注釈:
وَحَآجَّهٗ قَوْمُهٗ ؕ— قَالَ اَتُحَآجُّوْٓنِّیْ فِی اللّٰهِ وَقَدْ هَدٰىنِ ؕ— وَلَاۤ اَخَافُ مَا تُشْرِكُوْنَ بِهٖۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ رَبِّیْ شَیْـًٔا ؕ— وَسِعَ رَبِّیْ كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ— اَفَلَا تَتَذَكَّرُوْنَ ۟
6.80. இணைவைக்கும் அவருடைய சமூகத்தினர் அல்லாஹ் ஒருவனே என்ற விஷயத்தில் அவரிடம் வாதம் செய்தார்கள். தங்கள் சிலைகளைக் காட்டி பயமுறுத்தினார்கள். அவர் கூறினார், “அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்ற விஷயத்திலா நீங்கள் என்னிடம் வாதம் புரிகிறீர்கள்? அதன் பக்கம் என் இறைவன் எனக்கு வழிகாட்டிவிட்டான். நான் உங்களின் சிலைகளைக் கண்டு அஞ்சமாட்டேன். ஏனெனில் அவை பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெறமாட்டாது. ஆயினும் அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் நாடியது நிறைவேறியே தீரும். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்துள்ளதுடன் வானத்திலோ பூமியிலோ உள்ள எந்த ஒன்றும் அவனை விட்டு மறைவாக இல்லை. என் சமூகமே, அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி, அவனை நிராகரிக்கும் நீங்கள் அல்லாஹ் ஒருவன் மீது மட்டுமே நம்பிக்கைகொண்டு அறிவுரை பெற மாட்டீர்களா?”
アラビア語 クルアーン注釈:
وَكَیْفَ اَخَافُ مَاۤ اَشْرَكْتُمْ وَلَا تَخَافُوْنَ اَنَّكُمْ اَشْرَكْتُمْ بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ عَلَیْكُمْ سُلْطٰنًا ؕ— فَاَیُّ الْفَرِیْقَیْنِ اَحَقُّ بِالْاَمْنِ ۚ— اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟ۘ
6.81. அல்லாஹ் படைத்தவற்றையே எவ்வித ஆதாரமும் இன்றி அவனுக்கு இணையாக்கி வணங்குவதையிட்டு நீங்கள் அஞ்சாதபோது, அவனைத் தவிர நீங்கள் வணங்கும் சிலைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? ஏகத்துவவாதிகள், இணைவைப்பாளர்கள் ஆகிய இரு கூட்டத்தாரில் அச்சமற்று இருக்கத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் அவர்களையே பின்பற்றுங்கள். எவ்வித சந்தேகமுமின்றி இறைநம்பிக்கை மிக்க ஏகத்துவவாதிகளே அதற்கு மிகத் தகுதியானோர்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• الاستدلال على الربوبية بالنظر في المخلوقات منهج قرآني.
1. அல்லாஹ் மட்டுமே படைத்துப் பராமரிப்பவன் என்பதை படைப்பினங்களைச் சிந்திப்பதன் மூலம் புரிந்துகொள்வது குர்ஆனின் வழிமுறையாகும்.

• الدلائل العقلية الصريحة توصل إلى ربوبية الله.
2. நேரடியான தெளிவான பகுத்தறிவு ஆதாரங்கள் அல்லாஹ்தான் இறைவன் என்பதை உணர்த்துகின்றன.

 
対訳 章: 家畜章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる