Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 章: 識別章   節:
وَقَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْنَا الْمَلٰٓىِٕكَةُ اَوْ نَرٰی رَبَّنَا ؕ— لَقَدِ اسْتَكْبَرُوْا فِیْۤ اَنْفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِیْرًا ۟
25.21. நம்முடைய சந்திப்பை நம்பாத, நமது வேதனையை அஞ்சாத நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “முஹம்மதின் நம்பகத்தன்மையைக் எங்களிடம் எடுத்துரைக்கக்கூடிய வானவர்களை எங்களுக்கு அல்லாஹ் இறக்கியிருக்கக் கூடாதா? அல்லது நாங்கள் எங்கள் இறைவனைக் கண்ணால் கண்டு அவரது நம்பகத்தன்மையைக் குறித்து அவன் எங்களுக்கு அறிவிக்கமாட்டானா?” இவர்களின் உள்ளங்களிலுள்ள கர்வம் மிகைத்து நம்பிக்கைகொள்ள விடாமல் இவர்களைத் தடுத்துவிட்டது. தங்களின் இந்த வார்த்தையின் மூலம் இவர்கள் நிராகரிப்பிலும் அநியாயத்திலும் வரம்புமீறிவிட்டார்கள்.
アラビア語 クルアーン注釈:
یَوْمَ یَرَوْنَ الْمَلٰٓىِٕكَةَ لَا بُشْرٰی یَوْمَىِٕذٍ لِّلْمُجْرِمِیْنَ وَیَقُوْلُوْنَ حِجْرًا مَّحْجُوْرًا ۟
25.22. மரணிக்கும் போதும், மண்ணறையிலும், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் போதும் விசாரணைக்காக இழுத்துச் செல்லப்படும் போதும், நரகத்தில் நுழையும் போதும் நிராகரிப்பாளர்கள் வானவர்களைக் காணும் நாளில் இவர்களுக்கு முஃமின்களுக்கு உள்ளது போன்று எந்த நற்செய்தியும் இருக்காது. அப்போது வானவர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: “உங்களுக்கு நற்செய்தி கூறுவதை அல்லாஹ் தடுத்துவிட்டான்.”
アラビア語 クルアーン注釈:
وَقَدِمْنَاۤ اِلٰی مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا ۟
25.23. உலகில் நிராகரிப்பாளர்கள் செய்த நற்செயல்கள் எந்தளவுக்கு வீணானவை, பயனற்றவை என்றால் அனைத்தையும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாக யன்னலினால் நுழையும் சூரிய கதிரில் காணப்படும் சிதறிய புழுதிகளைப் போல் ஆக்கிவிடுவோம்.
アラビア語 クルアーン注釈:
اَصْحٰبُ الْجَنَّةِ یَوْمَىِٕذٍ خَیْرٌ مُّسْتَقَرًّا وَّاَحْسَنُ مَقِیْلًا ۟
25.24. அந்த நாளில் சுவனவாசிகளான நம்பிக்கையாளர்கள் இந்த நிராகரிப்பாளர்களை விட சிறந்த தங்குமிடத்தையும் ஓய்விடத்தையும் பெற்றிருப்பார்கள். இது அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்ததனால் அவர்களுக்குக் கிடைத்ததாகும்.
アラビア語 クルアーン注釈:
وَیَوْمَ تَشَقَّقُ السَّمَآءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلٰٓىِٕكَةُ تَنْزِیْلًا ۟
25.25. -தூதரே!- வானம் மென்மையான மேகத்தால் பிளந்துவிடும் நாளை நினைவுகூர்வீராக. அந்நாளில் வானவர்கள் அதிகமானவர்கள் என்பதால் மஹ்ஷர் பெருவெளியின்பால் கூட்டம் கூட்டமாக இறக்கப்படுவார்கள்.
アラビア語 クルアーン注釈:
اَلْمُلْكُ یَوْمَىِٕذِ ١لْحَقُّ لِلرَّحْمٰنِ ؕ— وَكَانَ یَوْمًا عَلَی الْكٰفِرِیْنَ عَسِیْرًا ۟
25.26. அந்த நாளில் உண்மையான ஆட்சியதிகாரம் அளவிலாக் கருணையாளனுக்கே உரியதாகும். அந்த நாள் நிராகரிப்பாளர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். ஆனால் நிச்சயமாக அது முஃமின்களுக்கு இலகுவாக இருக்கும்.
アラビア語 クルアーン注釈:
وَیَوْمَ یَعَضُّ الظَّالِمُ عَلٰی یَدَیْهِ یَقُوْلُ یٰلَیْتَنِی اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِیْلًا ۟
25.27. -தூதரே!- தூதரைப் பின்பற்றாததன் காரணமாக அநியாயக்காரன் வருத்தப்பட்டு தன் கைகளைக் கடித்துக் கொள்ளும் நாளை நினைவுகூர்வீராக. “அந்தோ! தூதர் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்ததை நான் பின்பற்றியிருக்கக்கூடாதா? அவருடன் சேர்ந்து வெற்றிக்கான பாதையை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே?” என்று அவன் கூறுவான்.
アラビア語 クルアーン注釈:
یٰوَیْلَتٰی لَیْتَنِیْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِیْلًا ۟
25.28. கடும் கவலையினால் தனக்குத் தானே அழிவைக் கொண்டு பிரார்த்தனை செய்து, “என் கேடே! நான் அந்த நிராகரிப்பாளனை உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக்கூடாதா?” என்று கூறுவான்:
アラビア語 クルアーン注釈:
لَقَدْ اَضَلَّنِیْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِیْ ؕ— وَكَانَ الشَّیْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا ۟
25.29. நிராகரித்த அந்த நண்பன் தூதரின் மூலமாக நான் குர்ஆனைப் பெற்றபிறகும் என்னை வழிகெடுத்துவிட்டான். ஷைத்தான் மனிதனுக்கு சதிசெய்யக் கூடியவனாக இருக்கின்றான். மனிதனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அவனை விட்டும் அவன் நீங்கிவிடுவான்.
アラビア語 クルアーン注釈:
وَقَالَ الرَّسُوْلُ یٰرَبِّ اِنَّ قَوْمِی اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا ۟
25.30. அந்த நாளில் தூதர் தம் சமூகத்தின் நிலைமையைகுறித்து முறையிட்டவராகக் கூறுவார்: “எனது இறைவா! நிச்சயமாக நீ என்னை அனுப்பிய என் சமூகம் நிச்சயமாக இந்த குர்ஆனை விட்டுவிட்டார்கள். இதனைப் புறக்கணித்துவிட்டார்கள்.”
アラビア語 クルアーン注釈:
وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِیٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِیْنَ ؕ— وَكَفٰی بِرَبِّكَ هَادِیًا وَّنَصِیْرًا ۟
25.31. -தூதரே!- நீர் உம் சமூகத்தினால் அனுபவித்த தொல்லைகள், உம்முடைய வழியில் ஏற்பட்ட தடை போன்றே உமக்கு முன்னால் வந்த ஒவ்வொரு தூதருக்கும் அவரது சமூகத்திலுள்ள குற்றவாளிகளை எதிரிகளாக ஆக்கினோம். சத்தியத்தின்பால் வழிகாட்டுவதற்கும் உம் எதிரிகளுக்கு எதிராக உமக்கு உதவிபுரியும் உதவியாளனாக ஆகுவதற்கும் உம் இறைவனே போதுமானவன்.
アラビア語 クルアーン注釈:
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَا نُزِّلَ عَلَیْهِ الْقُرْاٰنُ جُمْلَةً وَّاحِدَةً ۛۚ— كَذٰلِكَ ۛۚ— لِنُثَبِّتَ بِهٖ فُؤَادَكَ وَرَتَّلْنٰهُ تَرْتِیْلًا ۟
25.32. அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆன் முஹம்மதின் மீது சிறிது சிறிதாக இறக்கப்படாமல் ஒரேயடியாக இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? ” -தூதரே!- உம் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் இதனைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம். விளங்குவதற்கும் மனனம் செய்வதற்கும் இலகுவாக அமைய வேண்டும் என்பதற்காகவே நாம் இதனை பகுதிபகுதியாக இறக்குகின்றோம்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• الكفر مانع من قبول الأعمال الصالحة.
1. நிராகரிப்பு, நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு தடையாக இருக்கின்றது.

• خطر قرناء السوء.
2. தீய நண்பர்களின் பாரதூரம்.

• ضرر هجر القرآن.
3. குர்ஆனை மறுப்பதன் பாதிப்பு.

• من حِكَمِ تنزيل القرآن مُفَرّقًا طمأنة النبي صلى الله عليه وسلم وتيسير فهمه وحفظه والعمل به.
4. குர்ஆனை சிறிது சிறிதாக இறக்கியதற்கான நோக்கங்களில் ஒன்று நபியவர்களை அமைதிப்படுத்துவதும் அதனைப் விளங்குவதும் மனனம் செய்வதும் அதன்படி அமல் செய்வதும் இலகுவானது என்பதால்.

 
対訳 章: 識別章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる