Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - Indice traduzioni

XML CSV Excel API
Please review the Terms and Policies

Traduzione significati Sura: Al-Baqarah   Versetto:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் - அவர்களை நீர் எச்சரித்தாலும் அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லையென்றாலும் (அது) அவர்கள் மீது சமம்தான் - நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
خَتَمَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَعَلٰی سَمْعِهِمْ ؕ— وَعَلٰۤی اَبْصَارِهِمْ غِشَاوَةٌ ؗ— وَّلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟۠
அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களின் கேள்விப் புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்களின் பார்வைகள் மீதும் திரையிருக்கிறது. இன்னும் அவர்களுக்கு பெரிய வேதனை உண்டு.
Esegesi in lingua araba:
وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْیَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِیْنَ ۟ۘ
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டோம் எனக் கூறுபவரும் மக்களில் உண்டு. அவர்களோ நம்பிக்கையாளர்களே இல்லை.
Esegesi in lingua araba:
یُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِیْنَ اٰمَنُوْا ۚ— وَمَا یَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟ؕ
(அவர்கள்) அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் வஞ்சிக்கின்றனர்.தங்களையே தவிர (பிறரை) வஞ்சிக்க மாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ ۙ— فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ۬۟ — بِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟
அவர்களின் உள்ளங்களில் ஒரு நோய் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் நோயை அதிகப்படுத்தினான். அவர்கள் பொய் கூறுபவர்களாக இருந்த காரணத்தால் துன்புறுத்தக்கூடிய வேதனை அவர்களுக்கு உண்டு.
Esegesi in lingua araba:
وَاِذَا قِیْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ ۙ— قَالُوْۤا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ ۟
பூமியில் விஷமம் (தீமை, கலகம்) செய்யாதீர்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், "நாங்களெல்லாம் சீர்திருத்தவாதிகள்தான்" எனக் கூறுகிறார்கள்.
Esegesi in lingua araba:
اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا یَشْعُرُوْنَ ۟
அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அவர்கள்தான் விஷமிகள். எனினும் (அவர்கள் அதை) உணர மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْۤا اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ ؕ— اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰكِنْ لَّا یَعْلَمُوْنَ ۟
"(நல்ல) மக்கள் நம்பிக்கை கொண்டது போன்று நம்பிக்கை கொள்ளுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா? எனக் கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள். எனினும், (அதை) அறிய மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ— وَاِذَا خَلَوْا اِلٰی شَیٰطِیْنِهِمْ ۙ— قَالُوْۤا اِنَّا مَعَكُمْ ۙ— اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ ۟
அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால் "நம்பிக்கை கொண்டோம்" எனக் கூறுகிறார்கள். தங்கள் ஷைத்தான்களின் பக்கம் அவர்கள் தனித்தாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்; நாங்களெல்லாம் (அவர்களை) பரிகசிப்பவர்கள்தான்" எனக் கூறுகிறார்கள்.
Esegesi in lingua araba:
اَللّٰهُ یَسْتَهْزِئُ بِهِمْ وَیَمُدُّهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
அல்லாஹ் அவர்களை பரிகசிக்கிறான்; அவர்களுடைய அட்டூழியத்தில் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை விட்டு வைக்கிறான்.
Esegesi in lingua araba:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی ۪— فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
அவர்கள் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை விலைக்கு வாங்கியவர்கள். எனவே, அவர்களின் வியாபாரம் இலாபமடையவில்லை. அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.
Esegesi in lingua araba:
 
Traduzione significati Sura: Al-Baqarah
Indice Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - Indice traduzioni

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

Chiudi