Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: Al-Mumtahanah   Versetto:

அல்மும்தஹினா

Alcuni scopi di questa Sura comprendono:
تحذير المؤمنين من تولي الكافرين.
நிராகரிப்பாளர்களுடன் நேசம் பாராட்டுவதை விட்டும் விசுவாசிகளை எச்சரித்தல்

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّیْ وَعَدُوَّكُمْ اَوْلِیَآءَ تُلْقُوْنَ اِلَیْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَآءَكُمْ مِّنَ الْحَقِّ ۚ— یُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِیَّاكُمْ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْ ؕ— اِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِیْ سَبِیْلِیْ وَابْتِغَآءَ مَرْضَاتِیْ تُسِرُّوْنَ اِلَیْهِمْ بِالْمَوَدَّةِ ۖۗ— وَاَنَا اَعْلَمُ بِمَاۤ اَخْفَیْتُمْ وَمَاۤ اَعْلَنْتُمْ ؕ— وَمَنْ یَّفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
60.1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! என் எதிரிகளையும் உங்கள் எதிரிகளையும் நட்பைப் பரிமாறும் தோழர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களின் தூதர் உங்களிடம் கொண்டுவந்த மார்க்கத்தை நிராகரித்துவிட்டார்கள். தூதரை அவரது ஊரிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். அவ்வாறே உங்களையும் மக்காவிலுள்ள உங்கள்இடங்களிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். உங்களின் விஷயத்தில் உறவுமுறையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டீர்கள் என்பதற்காகவே அவர்கள் இவ்வாறெல்லாம் செய்தார்கள். நீங்கள் என் பாதையில் ஜிஹாது செய்வதற்காக என் திருப்தியைத் தேடி புறப்பட்டவர்களாக இருந்தால் அவர்களிடம் அன்பு பாராட்டி முஸ்லிம்கள் குறித்த இரகசியங்களை அவர்களிடம் வெளிப்படுத்தி விடாதீர்கள். நீங்கள் அவற்றில் மறைவாகச் செய்வதையும் வெளிப்படையாகச் செய்வதையும் நான் அறிவேன். அவற்றில் எதுவும் என்னைவிட்டு மறைவாக இல்லை. யார் நிராகரிப்பாளர்களிடம் இவ்வாறு நட்பு கொள்வாரோ அவர் நடுநிலையான பாதையை விட்டும் விலகிவிட்டார். சத்தியத்தைத் தவறி சரியானதை விட்டும் விலகிக்கொண்டார்.
Esegesi in lingua araba:
اِنْ یَّثْقَفُوْكُمْ یَكُوْنُوْا لَكُمْ اَعْدَآءً وَّیَبْسُطُوْۤا اِلَیْكُمْ اَیْدِیَهُمْ وَاَلْسِنَتَهُمْ بِالسُّوْٓءِ وَوَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ ۟ؕ
60.2. அவர்கள் உங்களைப் பிடித்தால் தங்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருக்கும் பகைமையை வெளிப்படுத்துவார்கள். தங்களின் கைகளால் உங்களைத் நோவினைப்படுத்தி தாக்குவார்கள். நாவால் திட்டுவார்கள். நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து அவர்களைப்போன்று ஆகிவிட வேண்டும் என்று அவர்கள் ஆசை கொள்வார்கள்.
Esegesi in lingua araba:
لَنْ تَنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ ۛۚ— یَوْمَ الْقِیٰمَةِ ۛۚ— یَفْصِلُ بَیْنَكُمْ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
60.3. உங்களின் உறவினர்கள், பிள்ளைகள் ஆகியோருக்காக வேண்டி நிராகரிப்பாளர்களுடன் நட்பு கொண்டால் அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை. மறுமை நாளில் அல்லாஹ் உங்களிடையே பிரிவை ஏற்படுத்தி விடுவான். உங்களில் சுவனவாசிகள் சுவனத்தில் நுழைவார்கள். நரகவாசிகள் நரகத்தில் நுழைவார்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு பலனளிக்க முடியாது. அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியதை பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Esegesi in lingua araba:
قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِیْۤ اِبْرٰهِیْمَ وَالَّذِیْنَ مَعَهٗ ۚ— اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؗ— كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَیْنَنَا وَبَیْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰی تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ لَاَسْتَغْفِرَنَّ لَكَ وَمَاۤ اَمْلِكُ لَكَ مِنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ— رَبَّنَا عَلَیْكَ تَوَكَّلْنَا وَاِلَیْكَ اَنَبْنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ ۟
60.4. -நம்பிக்கையாளர்களே!- இப்ராஹீமிடமும் அவருடன் இருந்த நம்பிக்கையாளர்களிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருந்த தங்கள் சமூகத்தினரிடம் கூறினார்கள்: “உங்களைவிட்டும் அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் சிலைகளைவிட்டும் நாங்கள் நீங்கி விட்டோம். நீங்கள் இருந்துகொண்டிருக்கும் மார்க்கத்தை நாங்கள் நிராகரித்து விட்டோம். நீங்கள் அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்காமல் அவன் ஒருவன்மீது மட்டும் நம்பிக்கைகொள்ளும்வரை உங்களுக்கும் எங்களுக்குமிடையே உள்ள பகைமை, வெறுப்பு வெளிப்பட்டுவிட்டது.” அவர்களைப் போன்று, நிராகரிப்பாளர்களான உங்கள் சமுதாயத்தை விட்டும் நீங்கள் விலகியிருந்திருக்க வேண்டும். ஆயினும் “நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவேன்.” என இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. நீங்கள் அவரை இந்த விடயத்தில் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது இப்ராஹீம் தம் தந்தையைக் குறித்து விரக்தியடைவதற்கு முன்னர் கூறிய வார்த்தையாகும். இணைவைப்பாளனுக்காக பாவமன்னிப்புக் கோருவது நம்பிக்கையாளனுக்கு உகந்ததல்ல. என்னால் உன்னை விட்டும் அல்லாஹ்வின் வேதனையில் இருந்து எந்தவொன்றையும் தடுக்க முடியாது. எங்கள் இறைவா! எங்களின் எல்லா விவகாரங்களிலும் நாங்கள் உன்னையே சார்ந்துள்ளோம். பாவமன்னிப்புக் கோரியவர்களாக உன் பக்கம் திரும்பி விட்டோம். மறுமை நாளில் உன் பக்கமே நாங்கள் திரும்ப வேண்டும்.
Esegesi in lingua araba:
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِیْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَا ۚ— اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
60.5. எங்கள் இறைவா! நிராகரிப்பாளர்களை எங்கள்மீது ஆதிக்கம் கொள்ளச் செய்து எங்களை அவர்களுக்குச் சோதனையாக ஆக்கிவிடாதே. “அவர்கள் சத்தியத்தில் இருந்தால் நாங்கள் அவர்கள்மீது ஆதிக்கம் கொண்டிருக்க மாட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக. நிச்சயமாக நீ யாராலும் மிகைக்க முடியாதவாறு யாவற்றையும் மிகைத்தவன். நீ படைப்பிலும், சட்டத்திலும், நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• تسريب أخبار أهل الإسلام إلى الكفار كبيرة من الكبائر.
1. முஸ்லிம்கள் குறித்த செய்திகளை நிராகரிப்பாளர்களுக்கு உளவறிவிப்பது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.

• عداوة الكفار عداوة مُتَأصِّلة لا تؤثر فيها موالاتهم.
2. நிராகரிப்பாளர்களின் பகைமை அடிப்படையான பகமையாகும். அதில் நட்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

• استغفار إبراهيم لأبيه لوعده له بذلك، فلما نهاه الله عن ذلك لموته على الكفر ترك الاستغفار له.
3. இப்ராஹீம் (அலை) தனது தந்தைக்கு பாவமன்னிப்புத் தேடுவதாக அவரிடம் வாக்களித்ததனால்தான் அவ்வாறு பாவமன்னிப்புத் தேடினார்கள். அவர் நிராகரிப்பில் மரணித்ததனால் அதனை விட்டும் அவரை அல்லாஹ் தடுத்தபோது அவருக்காக பாவமன்னிப்புத் தேடுவதை விட்டுவிட்டார்கள்.

 
Traduzione dei significati Sura: Al-Mumtahanah
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi